ஊட்டி அருகே வீட்டை உடைத்து உள்ளே வந்த காட்டு யானை.. பூசாரியை பார்த்ததும்.. நீங்களே பாருங்க
ஊட்டி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி சந்தன மலை பகுதியில் காட்டுயானை ஒன்ற வீட்டை உடைத்ததால பரபரப்பு ஏற்பட்டது. கோவில் பூசாரியின் வீட்டை உடைத்த காட்டு யானையை, பூசாரி போ போ என விரட்டியதால் காட்டு யானை பின்னோக்கி நடந்து சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர், தேவர்சோலை, ஓவேலி பகுதிகளில் இரவில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள ஓவேலி, பந்தலூர் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. கோவிலில் பகுதியில் நாளுக்கு நாள் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதால் மக்கள் மிகுந்த அச்சமடைந்து வருகின்றனர். நேற்று இரவு சந்தன மலைப்பகுதியில் உள்ள பூசாரி கிருஷ்ணன் வீட்டின் வெளியே ஏதோ சத்தம் கேட்டதை அறிந்து கதவைத் திறந்தார். அப்போது பிரம்மாண்டமாக நின்றிருந்த காட்டு யானை வீட்டை உடைத்துக் கொண்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், கூச்சலிட்டார். போ போ என ஓயாமல் கூச்சலிட்டதால் காட்டு யானை துதிக்கையை உயர்த்தி மெதுவாக பின்னோக்கி நடந்தது பின்பு வேறு பகுதிக்குச் சென்றது .

இந்த நேரடி காட்சிகள் வீடியோ செய்யப்பட்டு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனிடையே ஓவேலி பகுதியில் காட்டு யானையை விரட்ட இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு உள்ளது. வனத்துறையினர் உடனடியாக மக்களை அச்சுறுத்துவரும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் .
முன்னதாக கடந்த ஒரு வாரம் முன்பு கூடலூர் அருகே தேவர்சோலை பகுதியில் குடியிருப்பு பகுதியில் நடமாடிய மக்னா காட்டு யானையை வனத்துறையினர் விரட்டும் பணியில் ஈடுபட்டபோது, நொடி பொழுதில் திடீரென திரும்பிய யானை மிகுந்த ஆக்ரோசத்துடன் பிளறியபடி வனத்துறையினரை துரத்தி தாக்க முயன்ற சம்பவமும் நடந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவர்சோலை பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறக்கூடிய மக்னா காட்டு யானை குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களில் உலா வருவது அதிகரித்துள்ளது. அதேபோல் கடந்த வாரம் அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இந்த ஒற்றை மக்னா காட்டு யானை குடியிருப்பு பகுதியில் உலா வந்தது. இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென திரும்பிய காட்டு யானை வனத்துறையினரை நோக்கி மிகுந்த ஆக்ரோசத்துடன் பிளறியபடி துரத்தி தாக்க முயன்றது. இதனை அறிந்த வனத்துறையினர் அருகில் உள்ள கடைகளுக்குள் நுழைந்து தஞ்சம் அடைந்த நிலையில், பின்னர் யானை அப்பகுதியில் இருந்து தேயிலை தோட்டத்திற்குள் நுழைந்தது. இந்த காட்சிகளை அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் அச்சத்துடன் வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். இதனால் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் மக்னா காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அப்போது கோரிக்கை வைத்தனர்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications