வெலவெலத்த ஊட்டி.. 5 வயது குழந்தையுடன் போட் ஹவுஸ் ஏரியில் குதித்து இளம்தாய் தற்கொலை!
ஊட்டி ஏரியில் இளம்தாய் 5 வயது குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டார்
ஊட்டி: என்ன காரணம் என்று தெரியவில்லை.. 24 வயது இளம்தாய், 5 வயது மகளுடன் ஊட்டி ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நீலகிரியில் சுற்றுலா பயணிகள் மத்தியில் ரொம்பவும் பிரபலமானது ஊட்டி படகு இல்லம் ஏரி. மற்ற இடங்களை விட, இங்குள்ள போட் ஹவுஸ்-ல் எந்நேரமும் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

இந்த நிலையில், இன்று காலை ஏரியில் சடலம் ஒன்று மிதப்பதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் சொன்னார்கள். அதன்படி விரைந்து சென்று பார்த்ததில், இளம்பெண் ஒருவர், தனது குழந்தையுடன் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண் ஊட்டி நொண்டிமேடு பகுதியை சேர்ந்தவர். பெயர் நிர்மலா. 24 வயதான இவர் ஒரு இளம் விதவை. கணவர் இறந்து 2 வருடம்தான் ஆகிறது. கடந்த 2 நாட்களாக நிர்மலாவை காணவில்லை என்று ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், தனது 5 வயது குழந்தையுடன் நிர்மலா ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். எதற்காக இந்த தற்கொலை என்று உடனடியாக தெரியவில்லை.
எனினும் 2 சடலங்களையும் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, இது சம்பந்தமாக விசாரித்து வருகிறார்கள். குழந்தையுடன் தாய் ஏரியில் குதித்து இறந்த தகவல் அறிந்ததும், சுற்றுவட்டார மக்கள் படகு இல்லத்தில் குவிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications