வேணாம்மா.. ராத்திரியில் தனியா போகாதே.. தடுத்த தந்தை.. மனமுடைந்த மகள்.. தேவையில்லாத தற்கொலை!
கோத்தகிரி அருகே இளம்பெண் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்
ஊட்டி: "வேணாம்மா.. நைட் நேரம்.. தனியா போகாதே.." என்று பெற்ற தந்தை சொல்லிவிட்டதால், மனமுடைந்த பிரியா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே வசித்து வந்தவர் சுந்தர்ராஜ். இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவரது மகள் பிரியா.. 24 வயதாகிறது.. துபாயில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.. சில நாட்களுக்கு முன்புதான் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு பிரியாவுடன் வெளிநாட்டில் வேலை பார்க்கும் தோழியின் அப்பா இறந்துவிட்டார்.. அந்த தோழி சென்னையை சேர்ந்தவர்.. பிரியாவுக்கு நெருக்கமான தோழியும்கூட.. அதனால் அவரது தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள எண்ணினார்.
இதற்காக தன் அப்பாவிடம் அனுமதி கேட்டபோது அவர் மறுத்துவிட்டார்.. "வேணாம்மா.. அவ்வளவு தூரம் எதுக்கு? தனியா போக வேண்டாம்" என்று கறாராக சொல்லி உள்ளதாக தெரிகிறது. அதனால் மனமுடைந்த பிரியா, வீட்டில் உருளை கிழங்கு தோட்டத்திற்கு அடிப்பதற்காக வாங்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துவிட்டார்.
இதில் சில நிமிடங்களிலேயே வாயில் நுரைதள்ளி கீழே மயங்கி விழுந்தார். இதை பார்த்து பதறி போன அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.. ஆனால், சிகிச்சை பலனின்றி பிரியா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications