Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோதிய கார்.. நொய்டா மேம்பாலத்தில் இருந்து விழுந்த பெண்.. மரண விழும்பில் தப்பிய அதிசயம்

Subscribe to Oneindia Tamil

நொய்டா: கரணம் தப்பினால் மரணம் என்பார்கள். சிலர் மட்டுமே மரணத்தின் விளம்பில் இருந்து மீண்டு வருவார்கள். அப்படிதான் நொய்டாவில் இளம் பெண் தப்பித்துள்ளார். மேம்பாலத்தில் பயணித்துக் கொண்டிருந்தவர் தடுக்கி விழுந்து ஒரு தூணில் சிக்கி தப்பித்த சம்பவம் நடந்துள்ளது.

வார நாட்களாக இருந்தாலும், வார இறுதி நாட்களாக இருந்தாலும் பெரு நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. பல இடங்களில் வாகன ஓட்டிகள் அதிக வேகமாக பயணித்து விபத்தை ஏற்படுத்துகின்றனர்.

noida flyover

உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர், தன் ஸ்கூட்டியில் நொய்டாவில் இருந்து காசியாபாத் நோக்கி பயணித்துள்ளார். அவர் நொய்டா மேம்பாலத்தில் பயணிக்கும்போது எதிர்பாராத அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அவரின் பின்னால் அதி வேகமாக வந்த வாகனம் ஸ்கூட்டியை இடித்துள்ளது.

இதில் இளம் பெண் மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பதற்றத்துடன் அவர்கள் மேம்பாலத்தில் இருந்து எட்டிப்பார்த்தனர். அதிர்ஷ்டவசமாக அந்தப் பெண் கீழே விழாமல், இடையில் இருந்த பாலத்தில் சிக்கியது தெரியவந்தது. உடனடியாக அங்கிருந்த இரண்டு ஆண்கள் தூணில் இறங்கி அந்தப் பெண்ணை காப்பாற்ற முயன்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சில நிமிடங்களில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். உடனடியாக கிரேன் வரவழைக்கப்பட்டு, இளம் பெண்ணை பத்திரமாக மீட்டனர். அதேபோல, அவரைக் காப்பாற்ற உதவி செய்தவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

பிறகு ஆம்புலன்ஸ் உதவியுடன் அந்த பெண் உள்ளிட்ட மூன்று பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து நொய்டா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண் மீட்கப்பட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து காவல்துறை கூடுதல் துணை ஆணையர் மணீஷ்குமார் மிஸ்ரா கூறுகையில், "வேகன் ஆர் கார் ஒன்றுதான் இளம் பெண் ஸ்கூட்டியை இடித்து சென்றுள்ளது. நாங்கள் அந்த வாகனத்தை உடனடியாக சிறை பிடித்துவிட்டோம். இந்த சம்பவம் தொடர்பாக இளம் பெண்ணிடம் சில கேள்விகள் முன் வைத்துள்ளோம். அவர் அளிக்கும் தகவலின் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்." என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவம் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காரை ஓட்டி வந்தவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறும் மக்கள், அந்த இளம் பெண்ணை காப்பாற்ற முதலில் தூணில் இறங்கி காப்பாற்றிய இரண்டு ஆண்களுக்கு பாராட்டும் தெரிவித்துள்ளனர். இளம் பெண் மரணம் மற்றும் பலத்த காயத்தில் இருந்து தப்பித்திருப்பது மட்டுமே இந்த சம்பவத்தின் ஒரே ஆறுதல்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+