Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சம்பள Hike கேட்டு தொழிலாளர் போராட்டம்.. பற்றி எரியும் வாகனங்கள்.. பதைபதைக்கும் நொய்டா வீடியோ

Subscribe to Oneindia Tamil

நொய்டா: உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை போராட்டம் திங்கள்கிழமை வன்முறையாக மாறியது. ஹோசியரி காம்ப்ளெக்ஸ் பகுதியில் பேஸ் 2ல் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள் மற்றும் அரசு தரப்பில் மத்தியிலான வாக்குவதத்தில் வன்முறையாக வெடித்தது. இதில் பல வாகனங்கள் சேதப்பட்டு, கற்கள் வீசப்பட்டன, ஒரு கார் மீது தீவைக்கப்பட்டது.

கடந்த 2 நாட்களாக நடந்து வந்த போராட்டம், தொழிலாளர்கள் உடனான ஆலோசனை கூட்டம் நடத்தி முக்கியமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட நிலையிலும் இப்போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது.

PROTEST NODIA Noida Worker Protest Today Noida Violence Hosiery Complex Wage Hike Demand Noida Car Set on Fire Noida Protest Spreads to Faridabad noida protest today noida workers violence hosiery complex phase 2 protest noida wage hike demand haryana minimum wage vs up noida car set on fire noida vehicles vandalised faridabad workers protest noida traffic jam chilla border madarshan factory protest noida administration welfare measures double overtime pay noida compulsory weekly off workers noida minimum wage 13000 haryana wage hike 19000 2 vs 13000 19000

அடிப்படை காரணம்

ஹரியானா அரசு சமீபத்தில் அடிப்படை மாத சம்பளத்தை 14000 ரூபாயில் இருந்து 19000 ரூபாயாக உயர்த்தியது, இது கிட்டத்தட்ட 35 சதவீத உயர்வாகும். ஆனால் உத்தரபிரதேசத்தில் குறைந்தப்பட்ச சம்பளம் 13000 ரூபாயாகவே தொடர்கிறது. அண்டை மாநிலங்கள் மத்தியிலான இந்த சம்பள வித்தியாசமும், அதிகரித்து வரும் விலைவாசி உயர்வும் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.

இரண்டு நாள் போராட்டம்?

கடந்த இரண்டு நாட்களாக ஹோசியரி காம்ப்ளெக்ஸ் பகுதியில் பேஸ் 2 மற்றும் செக்டார் 60 பகுதியில் இருக்கும் கார்மென்ட் மற்றும் எற்றுமதி நிறுவன தொழிற்சாலை தொழிலாளர்கள் குறைந்த குறைந்தபட்ச ஊதியத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தனர். திங்கள்கிழமை இந்தப் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்தது. தொழிலாளர்கள் சாலைகளை மறித்து போராட்டம் நடத்தியதால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டக்காரர்கள் கற்கள் வீசியதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் ஹோசியரி காம்ப்ளெக்ஸ் பகுதியில் பதற்றம் அதிகரித்தது. போலீஸார் பெரும் படையை அனுப்பி சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

PROTEST NODIA Noida Worker Protest Today Noida Violence Hosiery Complex Wage Hike Demand Noida Car Set on Fire Noida Protest Spreads to Faridabad noida protest today noida workers violence hosiery complex phase 2 protest noida wage hike demand haryana minimum wage vs up noida car set on fire noida vehicles vandalised faridabad workers protest noida traffic jam chilla border madarshan factory protest noida administration welfare measures double overtime pay noida compulsory weekly off workers noida minimum wage 13000 haryana wage hike 19000 2 vs 13000 19000

தொழிலாளர் நலன் குறைபாடு

இந்தப் போராட்டம் தொழிலாளர் நலன் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் நடைபெற்றுள்ளது. ஓவர் டைம் ஊதியம், போனஸ், வார விடுமுறை, பணியிடப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தொழிலாளர் அதிகாரிகளும், மாநில அரசு நிர்வாகமும் விவாதித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை நொய்டா மாவட்ட ஆட்சியர், மாநில தொழிலாளர் முதன்மைச் செயலர் மற்றும் தொழிலாளர் ஆணையர் என முக்கிய அதிகாரிகள் இணைந்து இந்த போராட்டத்திற்கும் பிரச்சனைக்கு தீர்வு காண சந்தித்தார். தொழிலாளர் உரிமைகள் மற்றும் தொழில்துறை போராட்டம் குறித்த விவகாரங்கள் இந்தச் சந்திப்பில் விரிவாகப் பேசப்பட்டன.

முக்கிய நடவடிக்கைகள்

ஞாயிற்றுக்கிழமை நொய்டா நிர்வாகம் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் வகையில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது. அனைத்து தொழிலாளர்களுக்கும் கட்டாய வார விடுமுறை, ஓவர் டைம் மற்றும் வார விடுமுறை நாட்களில் வேலை செய்தால் இரட்டிப்பு ஊதியம், நவம்பர் 30-க்குள் ஆண்டு போனஸ், ஒவ்வொரு மாதமும் 10-ம் தேதிக்குள் சம்பளம் வழங்குதல், மருத்துவக் காப்பீடு, பணியிடப் பாதுகாப்பு நடவடிக்கைகள், புகார் அமைப்பு ஆகியவை அறிவிக்கப்பட்டன.

இந்த முடிவுகள் நொய்டா அமைப்பு அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டன. நொய்டா மாவட்ட ஆட்சியர், மாவட்ட அரசு அதிகாரிகள், போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோர் நேரில் பங்கேற்றனர்.

மாவட்ட ஆட்சியர் கூறுகையில், கடந்த சில நாட்களாக தொழிற்சாலைகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்றார். ஒவ்வொரு தொழிலாளருக்கும் வார விடுமுறை உறுதி செய்யப்பட வேண்டும். அந்த நாளில் வேலை செய்தால் இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும். ஓவர் டைமுக்கும் இரட்டிப்பு ஊதியம் கொடுக்கப்பட வேண்டும் என்று தொழிற்சாலைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆண்டு போனஸ் நவம்பர் 30-க்குள் வழங்கப்படும். பாலியல் துன்புறுத்தல் புகார்களை ஆராய பெண் தலைமையில் குழு அமைக்கப்படும். தொழிலாளர்கள் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். மருத்துவ வசதி மற்றும் பாதுகாப்பான பணிச் சூழல் உறுதி செய்யப்பட வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தினர்.

ஆனால் அடுப்படை சம்பளம் உயர்வு தொடர்பான அறிவிப்புகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

PROTEST NODIA Noida Worker Protest Today Noida Violence Hosiery Complex Wage Hike Demand Noida Car Set on Fire Noida Protest Spreads to Faridabad noida protest today noida workers violence hosiery complex phase 2 protest noida wage hike demand haryana minimum wage vs up noida car set on fire noida vehicles vandalised faridabad workers protest noida traffic jam chilla border madarshan factory protest noida administration welfare measures double overtime pay noida compulsory weekly off workers noida minimum wage 13000 haryana wage hike 19000 2 vs 13000 19000

வன்முறை வெடிக்க என்ன காரணம்

இத்தகைய அறிவிப்புகள் வெளியான பின்பும், வதந்திகள் பரவிய காரணத்தால் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். போராட்டத்தில் இருக்கும் தொழிலாளர்களை அமைதியாக இருக்கவும், வன்முறையில் ஈடுப்பட வேண்டாம் எனவும், காவல்துறையினர் உடன் ஒத்துழைப்பு அளிக்கவும் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் தொழிலாளர்களின் போராட்டம் வன்முறையாக மாறிய காவல் துறை வாகனங்களை சேதப்படுத்தும் அளவுக்கு கையை மீறியுள்ளது.

பாதிக்கப்பட்ட இடங்கள்

தற்போது இந்த தொழிலாளர்கள் வன்முறை மூலம் பாதிக்கப்பட்ட முக்கிய பகுதிகளில், ஹோசியரி காம்ப்ளெக்ஸ், பேஸ்-2 பகுதியில் உள்ள மதர்சன் தொழிற்சாலை சுற்றுப்பகுதிகள், செக்டர் 60 மெட்ரோ நிலையம் அருகில் உள்ள பகுதிகள், செக்டர் 62 கோல் சக்கர், செக்டர் 63 மற்றும் செக்டர் 15 தொழிற்சாலைகள், மேலும் பேஸ்-1 பகுதி ஆகியவை அடங்கும்.

மதர்சன் நிறுவனம்

மதர்சன் நிறுவனத்தில் சம்பள உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், தொழிற்சாலைக்குள் திடீரென நுழைந்து மேலதிகாரிகள் வெளியேறுவதற்கு தடையாக இருந்தனர். சம்பவ நேரத்தில் போலீஸ் பாதுகாப்பு இல்லாதது நிலையை மேலும் பதற்றமாக்கியுள்ளது.

ஃபரிதாபாத் போராட்டம்

தற்போது சம்பள உயர்வு போராட்டம் நொய்டாவில் இருந்து ஃபரிதாபாத்-க்கும் பரவியுள்ளது. திங்கள்கிழமை ஃபரிதாபாத் செக்டர் 37 பகுதியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு, சாலைகளில் இறங்கி ஊதிய உயர்வு கோரி போராட்டம் நடத்தினர்.

போக்குவரத்து பெரும் பாதிப்பு

தொழிலாளர்களின் போராட்டம் தீவிரமடைந்ததால் நொய்டா நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. செல்லா எல்லை மற்றும் செக்டார் 62 ஆகிய இடங்களில் தொழிலாளர்கள் சாலைகளை மறித்ததால் காலை நேரப் போக்குவரத்தில் பெரும் டிராபிக் பிரச்சனை வெடித்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+