வேட்புமனு தாக்கல் முடிந்தது: ஓபிஎஸ்-இபிஎஸ் மட்டுமே களத்தில்: போட்டியின்றி தேர்வாகின்றனர்
அதிமுக உட்கட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் யாரும் செய்யாத நிலையில் இன்று காலை ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் நேரம் முடிவடைந்த நிலையில் வேறு யாரும் போட்டியிட வராத நிலையில் ஓபிஎஸ்-இபிஎஸ் தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.

அதிமுக உட்கட்சித்தேர்தல்
அதிமுகவில் உட்கட்சி தேர்தலை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் கட்டாயம் நடத்தி முடிக்கவேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனால் அதிமுக தலைமைக்கு சிக்கல் ஏற்பட்டது. கட்சிக்குள் நிலவும் பிரச்சினைகளை களைய கடந்த 3 நாட்களுக்கு முன் செயற்குழு கூடி கட்சி விதியில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதன்படி கட்சியில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர்கள் ஒன்றாக போட்டியிடுவார்கள் அவர்களை ஒற்றை வாக்கின் அடிப்படையில் கட்சி உறுப்பினர்கள் தேர்வு செய்வர் என திருத்தப்பட்டது.

வானளாவிய அதிகாரம் பெற்ற ஒருங்கிணைப்பாளர்கள்
கட்சி விதியை திருத்திய அடிப்படையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வை மாற்றவோ, விதிகளை திருத்தவோ பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை, ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் கட்சி விதிகளை மாற்றும் அதிகாரம் உள்ளவர்கள் என திருத்தப்பட்டது. இதனால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி மிகுந்த அதிகாரம் பெற்றதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி அறிவிப்பு எதிர்த்து வழக்கு
உட்கட்சி தேர்தலை நடத்தும் வகையில் டிச.7 அன்று நடக்கும் வேட்பு மனுதாக்கல் 3, 4 தேதிகளில் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. தேர்தலை எதிர்த்த வழக்கு தள்ளுபடி, ஓபிஎஸ்-இபிஎஸ்சுக்கு நோட்டீஸ் இந்த தேர்தல் முறைகேடாக நடக்கிறது உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை, வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவில்லை ஆகவே தேர்தலுக்கு தடைவிதிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டது. ஆனாலும் முறைகேடு நடந்தால் தேர்தல் முடிவுக்கு தடைவிதிக்க நேரிடும் என எச்சரித்து ஓபிஎஸ், இபிஎஸ், பொன்னையன் உள்ளிட்டோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வேட்புமனுத்தாக்கல்
வேட்புமனு தாக்கல் செய்ய யாரும் இல்லை வந்தவருக்கும் அடி உதை வேட்புமனு தாக்கல் நேற்று காலை தொடங்கிய நிலையில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய வராத நிலையில் ஓட்டேரியைச் சேர்ந்த எம்ஜிஆர் காலத்து தொண்டர் ஓம்பொடி பிரசாத் சிங் (71) என்பவர் வேட்புமனுவை வாங்க வந்தார். அவரிடம் உரிய தகுதி இல்லாததால் திருப்பி அனுப்பினர். வெளியே வந்த அவர் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க தயாரானபோது தாக்கப்பட்டார், வாசல்வரை அவரை துரத்திச் சென்று தாக்கினர். போலீஸார் அவரை மீட்டு அழைத்துச் சென்றனர்.

ஓபிஎஸ்- இபிஎஸ் வேட்புமனு தாக்கல்
இந்நிலையில் இன்று காலை ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் கட்சித் தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகைக்கு வந்தனர். அவர்கள் வருவதை அறிந்து கட்சி அலுவலகத்துக்கு வந்த தொண்டர்கள் வரவேற்று கோஷமிட்டனர். சிலர் அவர்களுக்கு ஆரத்தி எடுத்தனர். கட்சியின் மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் தேர்தல் அதிகாரிகள் பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் முன்னிலையில் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். பின்னர் ஒருவரை ஒருவர் வாழ்த்தி கட்டி அணைத்துக் கொண்டனர்.

போட்டியின்றி தேர்வாகின்றனர்
மாலைவரை மனுத்தாக்கல் முடியும் வரை யாரும் எதிர்த்து போட்டியிடாததால் ஓபிஎஸ் -இபிஎஸ் இருவர் மட்டுமே போட்டிக்களத்தில் உள்ளனர். இதனால் தேர்தல் நடத்தும் வாய்ப்பில்லாமல் போகிறது. நாளை வேட்புமனு பரிசீலனை முடிந்தவுடன் ஓபிஎஸ்- இபிஎஸ் இருவரின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டால் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications