துடித்துக் கொண்டிருந்த "கை" விரல்.. அலறியோடிய அதிகாரிகள்! மோடி பிரான்ஸ் சென்ற சமயத்தில் நடந்த பகீர்
பாரீஸ்: பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றிருந்த சமயத்தில், அந்நாட்டின் அதிபருக்கு மிகவும் பயங்கரமான ஒரு கிப்ட் அனுப்பப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றிருந்தார். அப்போது பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உடனும் தனிப்பட்ட முறையில் மீட்டிங்கை நடத்தினார்.

பிரதமரின் இந்தப் பயணித்ததில் பாதுகாப்பு, டெக்னாலஜி என்று பல்வேறு துறைகளில் இரு நாட்டிற்கும் இடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. குறிப்பாக இந்தியாவின் யுபிஐ முறையை பிரான்ஸ் நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
கைவிரல்: இதற்கிடையே அங்கே ஒரு பகீர் சம்பவம் நடந்துள்ளது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பார்சல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. விளக்கக் குறிப்பு எதுவும் இல்லாமல் பிரான்ஸ் அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான எலிஸி கோட்டைக்கு இது அனுப்பப்பட்டுள்ளது. இதனை போலீசார் சோதனை செய்த போதுதான் அவர்கள் மிரண்டோ போய்விட்டனர்..
உள்ளே மனித விரலை வைத்து அனுப்பியுள்ளனர். அதிபருக்கு அனுப்பப்பட்ட பார்சலில் இப்படி மனித கைவிரல் இருந்ததால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய நபரை போலீசார் இன்னும் அடையாளம் காணவில்லை. பிரான்ஸ் அதிபரை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதாக இவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சோதனை: அந்த விரல் அழுகிப் போகும் முன்பு அதைச் சோதனை செய்ய வேண்டும் என்பதற்காக போலீசார் உடனடியாக அங்கிருந்த மினி பிரிட்ஜில் வைத்துள்ளனர். இந்த மினி பிரிட்டிஜில் தான் போலீசார் தங்கள் சினாக்ஸ்களை வைத்திருப்பார்களாம். இருப்பினும், விரல் அழுக தொடங்கிவிட்டால் அதில் இருந்து ஆதாரத்தைக் கண்டுபிடிப்பது சிரமம் என்பதில் அதை உடனடியாக அங்கிருந்த பிரிட்ஜில் வைத்துள்ளனர்.
இதனை மருத்துவர்கள் சோதனை செய்த நிலையில், அது உயிருள்ள மனிதருக்குச் சொந்தமானது என்பதை அவர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து அந்த விரலுக்குச் சொந்தமான மனிதரைக் கண்டுபிடித்த பிரான்ஸ் அதிகாரிகள் அவருக்குச் சிகிச்சைகளை அளித்தனர். இருப்பினும், அவராகவே விரலை அதிபருக்கு அனுப்பினாரா.. இல்லை அவரது விரல் வலுக்கட்டாயமாகக் கட் செய்யப்பட்டதா என்பது போன்ற தகவல்களை பிரான்ஸ் அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை.
எதிர்ப்பு: மேலும், மருத்துவ காரணங்களுக்காக அவரது பெயர் உள்ளிட்ட தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.. வலதுசாரி தலைவரான பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுக்கு எந்தளவுக்கு அங்கே ஆதரவு இருக்கிறதோ.. அதே அளவுக்கு எதிர்ப்பும் இருக்கிறது. இதனால் கடந்த காலங்களில் பல முறை அவருக்கு இதுபோன்ற விரும்ப தகாத கிப்ட்கள் வந்துள்ளன. இருப்பினும், மனித விரல் ஒன்று அவருக்கு பார்சலில் வருவது இதுவே முதல்முறையாகும்.
நேற்றைய தினம் அங்கே பிரான்ஸ் நாட்டில் பாஸ்டில் தின கொண்டாட்டம் நடந்தது. இந்த கொண்டாட்டத்திற்கு சில மணி நேரத்திற்கு முன்பு தான் இந்த விபரீத பார்சல் அவருக்கு வந்துள்ளது. இந்த பாஸ்டில் தின கொண்டாட்டத்தில் தான் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சிறப்பு விருந்தினராகக் கொண்டுள்ளார். இதில் இந்தியாவின் ரபேல் விமானங்களும் போர்க் கப்பல்களும் கூட கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
-
PM Modi: துரந்தர் பிஜிஎம் போட்டு மோடியை வரவேற்ற பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்! பரவும் வீடியோ! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications