Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஆணுறுப்பை காணோம்.." அலட்சியமாக இருந்த மருத்துவர்கள்.. அலறிய நோயாளி.. இடையில் வந்த இளம் மனைவி

Subscribe to Oneindia Tamil

பாரீஸ்: மருத்துவர்கள் அலட்சியமாகச் சிகிச்சை அளிப்பதாக நம்ம ஊரில் ஏகப்பட்ட புகார்கள் வரும். பிரான்ஸும் அதேபோலத் தான் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதில் மருத்துவர்களின் அலட்சியத்தால் இளைஞர் ஒருவர் தனது ஆணுறுப்பையே இழந்துள்ளார்.

பொதுவாக நாம் பெரிதும் நம்பும் நபர்களில் எப்போதும் முதன்மை இடத்தில் மருத்துவர்கள் இருப்பார்கள். நமக்கு உடலில் எதாவது பாதிப்பு ஏற்பட்டால் முழுக்க முழுக்க மருத்துவர்களையே நம்பி மருத்துவமனைகளுக்குச் செல்கிறோம்.

இருப்பினும், சில நேரங்களில் சில மருத்துவர்கள் காட்டும் அலட்சியத்தால் நிலைமை கையை மீறிச் செல்கிறது. இதனால் சில சமயங்கள் அப்பாவி நோயாளிகள் தங்கள் உயிரையே கூட இழக்க நேரிடுகிறது. இதற்கு நம்மைச் சுற்றியே இதற்கு ஏகப்பட்ட உதாரணங்கள் இருக்கவே செய்கிறது.

 தவறான சிகிச்சை

தவறான சிகிச்சை

ஜீன்ஸ் திரைப்படத்தில் நடிகை லட்சுமிக்கு மூலையில் தப்பான பக்கத்தில் ஆப்ரேஷன் செய்துவிடுவார்கள். இதைக் கண்டுபிடித்து ஹீரோ பிரசாந்த், மருத்துவமனை நிர்வாகத்திடம் சென்று முறையிடுவார். அதன் பின்னரே மீண்டும் அவர்களுக்கு ஆப்ரேஷன் செய்வார்கள். ஆனால், படத்தில் மட்டுமே இப்படி மீண்டும் ஆப்ரேஷன் செய்வதெல்லாம் நடக்கும் பெரும்பாலான நேரங்களில் இதனால் மோசமான பாதிப்புகளே ஏற்படும். அப்படித்தான் பிரான்ஸ் நாட்டில் இளைஞர் ஒருவருக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் அவர் முக்கிய உறுப்பையே இழந்துள்ளார்.

பிரான்ஸ்

பிரான்ஸ்

பிரான்ஸில் உள்ள ஒரு மருத்துவமனையில் மருத்துவர்கள் செய்த தொடர் தவறுகளால் இளைஞர் ஒருவர் தனது ஆணுறுப்பையே இழந்துள்ளார். இதையடுத்து அந்த மருத்துவமனை நிர்வாகம் நோயாளிக்கு பெரும் தொகை இழப்பீடாக வழங்கியுள்ளது. இது தொடர்பாக அந்த நபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம் $65,000 டாலர் அந்த நோயாளிக்கு அளிக்க உத்தரவிட்டது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.54 லட்சம் ஆகும். நான்டெஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

நோயாளி

நோயாளி

இந்தச் சம்பவம் நடந்த போது அந்த நோயாளிக்கு 30 வயது தான் ஆகியிருந்தது. அப்போது அவருக்குத் தோலின் எபிடெலியல் திசு அல்லது உள் உறுப்புகள் ஏற்படும் கேன்சர் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக அவர் நான்டெஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "நான் சிகிச்சையின் போது பல முறை சொன்னேன். ஆனாலும், மருத்துவர்கள் நான் சொல்வதைக் கேட்கவில்லை. என்னை வைத்து விளையாடிவிட்டார்கள்.

 ஏகப்பட்ட தவறுகள்

ஏகப்பட்ட தவறுகள்

இப்போது எனது ஆணுறுப்பை முழுமையாக நீக்கிவிட்டார்கள். ஆனாலும், ஆணுறுப்பு உணர்வை சென்சார்கள் மூலம் மாற்ற முடியாது" என்று வேதனையுடன் கூறுகிறார். அப்போது நான்டெஸ் பல்கலைக்கழக மருத்துவமனையின் சிறுநீரக மருத்துவர் ஒருவருக்கு இவருக்குச் சிகிச்சை அளித்துள்ளார். நோயாளியின் கட்டியை முடிந்தவரை அகற்ற முயன்றதாகவே மருத்துவமனை சார்பில் கூறுகின்றன. ஆனால் இந்த நடைமுறைகளில் தொடர்ச்சியாகப் பல தவறுகள் நடந்துள்ளன.

 ஆணுறுப்பில் வந்த கேன்சர்

ஆணுறுப்பில் வந்த கேன்சர்

இதனால் அந்த நோயாளியின் ஆணுறுப்பு முழுக்க கேன்சர் பரவியது. சிகிச்சைக்குப் பின்னர் அந்த நோயாளிக்குத் தொடர்ச்சியாக மிகக் கடுமையான வலி ஆணுறுப்பில் இருந்துள்ளது. எவ்வளவோ மத்திரை சாப்பிடும் அதைக் குறையவில்லை. ஆணுறுப்பு முழுக்க கேன்சர் பரவியதே இதற்குக் காரணம். ஒரு நாள் வலி அளவு கடந்து செல்லவே ஆணுறுப்பைத் துண்டித்துக் கொள்ளும் முடிவுக்கே அவர் வந்துவிட்டார். தனது வீட்டில் இருந்த கட்டரை எடுத்து ஆணுறுப்பைக் கட் செய்யவே போய்விட்டார்.

 இளம் மனைவி

இளம் மனைவி

நல்வாய்ப்பாக அப்போது அங்கிருந்த அவரது மனைவி அவரை தடுத்து நிறுத்துவிட்டார். இதையடுத்து சில ஆண்டுகளிலேயே ஆணுறுப்பில் பெரிய கட்டி ஏற்பட்டு, அந்த நபருக்கு வலி பல மடங்கு அதிகரித்துவிட்டது. இதனால் வேறு வழியின்றி மருத்துவர்கள் ஆணுறுப்பை அகற்றியுள்ளனர். ஆணுறுப்பை அகற்றவில்லை என்றால், அந்த நோயாளி உயிரையே இழக்கும் ஒரு சூழல் உருவானது. இதனால் வேறு வழியின்றி அந்த நோயாளியின் ஆணுறுப்பை அவர்கள் அகற்றியுள்ளனர்.

 இழப்பீடு

இழப்பீடு

தனக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மருத்துவமனை தான் காரணம் என்று அந்த நோயாளி வழக்கு தொடர்ந்தார். இருப்பினும், முதலில் மருத்துவமனை நிர்வாகம் தனது மீது எந்தவொரு தவறும் இல்லை என்றே தொடர்ந்து கூறி வந்தது. ஆனால், வழக்கு விசாரணையில் சிகிச்சையின் போது பல தவறுகள் இருந்தது உறுதியானது. இதையடுத்து தவறான சிகிச்சை அளித்ததற்கு $65,000, அதாவது இந்திய மதிப்பில் 54 லட்சம் இழப்பீடாக அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+