சைக்கோவிலும் சைக்கோ..72 ஆண்கள், 92 முறை! மனைவியை ‘அப்படி’ டார்ச்சர் செய்த கணவன்.. பகீர் சம்பவம்!
பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் தனது மனைவியை பல ஆண்டுகளாக 72 ஆண்கள் மூலம் 92 முறை பாலியல் வன்கொடுமை செய்ய வைத்ததோடு அவருக்கு போதை மருந்து கொடுத்து டார்ச்சர் செய்த சைக்கோ கணவன் தற்போது சிக்கி இருக்கிறார். ஆனால் தனக்கு இப்படி ஒரு கொடுமை நேர்ந்தது பல ஆண்டுகளாக அந்தப் பெண்ணுக்கு தெரியாது என்பதுதான் வேதனையிலும் வேதனை..
உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. பள்ளிகள், கல்லூரிகள், வேலை பார்க்கும் இடங்கள், ஏன் வீடுகளில் கூட பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் நடப்பது வேதனையிலும் வேதனை.

சில இடங்களில் குடும்ப வன்முறையிலும் பெண்கள் சிக்கித் தவிக்கிறார்கள். திரைப்படங்களில் வருவது போல சைக்கோ கணவனிடம் சிக்கி தவிக்கும் பெண்களின் எண்ணிக்கையை அவ்வளவு சீக்கிரம் சொல்லிவிட முடியாது. சைக்கோ கணவனின் கையில் சிக்கிவிட்டால் அதற்குப் பிறகு அந்த பெண்ணின் வாழ்க்கையை நரகம்தான்..
அப்படி ஒரு சம்பவம் தான் பிரான்ஸ் நாட்டில் அரங்கேறி இருக்கிறது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 71 வயதான டோமினிக் பெலிக்கோட் என்பவர் தனது மனைவி கிசெல் பெலிக்கோட்டை சுமார் 72 ஆண்களை வைத்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். போதை மருந்து கொடுத்து 92 முறை தன் மனைவியை அந்த ஆண்கள் மூலம் பாலியல் வன்கொடுமை செய்ய வைத்துள்ளது தெரிய வந்திருக்கிறது. அது மட்டுமில்லாமல் அந்த கொடுமையை வீடியோவாக பதிவு செய்து இருப்பதாக தற்போது தகவல் கிடைத்திருக்கிறது.
2011 ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் இந்த கொடுமையை டோமினிக் பெலிக்கோட் செய்து வந்திருக்கிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்ததாக டோமினிக்கை போலீசார் கைது செய்தனர். இதை அடுத்து அவரது மொபைல் மற்றும் வீடியோ கேமராக்களை ஆய்வு செய்த போது ஆயிரக்கணக்கான புகைப்படங்களும் வீடியோக்களும் இருப்பது தெரியவந்தது.

அந்த வீடியோக்களை ஆய்வு செய்தபோதுதான் தனது மனைவியை அவருக்கே தெரியாமல் போதை மருந்து கொடுத்து பல ஆண்களை அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்ய வைத்து வீடியோ எடுத்தது தெரிய வந்தது. அந்த வழக்கின் விசாரணையின் போது தான் தனது மனைவி கிசெல்லை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை ஒப்புக்கொண்டான் டோமினிக்.
அப்போது தான் இத்தனை ஆண்டுகளாக தன்னை பிற ஆண்களை வைத்து தனது கணவனை பாலியல் வன்கொடுமை செய்து வந்தது கிசெலுக்கு தெரிய வந்திருக்கிறது. சாலையில் வருவோர் போவோரை எல்லாம் அழைத்து வந்து தனது மனைவிக்கு போதை மருந்து கொடுத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்ய வைத்திருக்கிறார் டோமினிக் பெலிக்கோட்.
தனது நிறுவன உரிமையாளர், பத்திரிக்கையாளர். தீ அணைப்பு துறை வீரர், ஓட்டுநர், காய்கறி விற்கும் நபர், டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் வேலை பார்க்கும் பணியாளர் என பலர் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். திருமணமானவர்கள், திருமணம் ஆகாதவர்கள், விவாகரத்து பெற்றவர்கள், உறவினர்கள் என பலரை இந்த கொடூரமான செயலில் ஈடுபட்டு விட்டிருக்கிறார் டோமினிக் பெலிக்கோட்.

தற்போது டோமினிக் பெலிக்கோட் உள்ளிட்ட 51 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நிலையில் இருபது பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். மீதமுள்ளவர்கள் ஜாமினில் வெளியே வந்ததாக கூறப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்படும்போது அனைவருக்கும் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தனது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்யும் போது சில நிபந்தனைகளை விதித்திருக்கிறான் டோமினிக். கிசலை பாலியல் வன்கொடுமை செய்யும் போது அவரை எழுப்பக் கூடாது, எந்த விதமான வாசனை திரவியங்களையும் பயன்படுத்தக் கூடாது, சிகரெட் புகைத்த வாசனை வரக்கூடாது, மது அருந்தக்கூடாது, அவரது உடலில் கீறி வைக்கக்கூடாது, அவர்கள் பயன்படுத்தும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களை வேறு பகுதிகளில் நிற்க வேண்டும், படிக்கை அறையில் ஆடைகளை மறந்து விட்டு செல்லக்கூடாது என்பதற்காக அவர்கள் வீட்டு கிச்சனில் மட்டுமே உடைகளை மாற்ற வேண்டும் என பல்வேறு சைக்கோ தனமான நிபந்தனைகளை டோமினிக் பெலிக்கோட் விதித்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications