Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாரீஸ் ஒலிம்பிக் ஓவர்: கடைசி நாளில் எகிறி அடித்து சீனாவை பின்னுக்குத் தள்ளிய அமெரிக்கா! தங்க வேட்டை!

Subscribe to Oneindia Tamil

பாரீஸ்: ஜூலை 26 ஆம் தேதி தொடங்கிய பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. 40 தங்கம் உட்பட 126 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது. சீனா, பதக்க பட்டியலில் முதலிடத்தில் இருந்த நிலையில், கடைசி நாளான இன்று அதிக தங்கப் பதக்கங்களைக் குவித்து, முதலிடம் பெற்றது அமெரிக்கா.

33வது ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஜூலை மாதம் 26 ஆம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைந்துள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் திருவிழாவில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். பாரிஸ் ஒலிம்பிக் திருவிழாவில் 42 வகையான விளையாட்டுகளில், 329 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

paris olympic 2024 Olympic india 2024


கடந்த 16 நாட்களாக நடைபெற்ற வந்த ஒலிம்பிக் திருவிழா இன்றுடன் முடிவடைந்துள்ளது. நிறைவு நாளான இன்று 13 தங்கப் பதக்கங்களுக்கான போட்டி நடைபெற்றது. நேற்று வரை 39 தங்கப் பதக்கங்களுடன் சீனா முதலிடம் பெற்றிருந்தது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 2 தங்கப் பதக்கங்களைக் கைப்பற்றி அமெரிக்கா, பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

அமெரிக்கா மகளிர் கூடைப்பந்து அணி பிரான்ஸை எதிர்த்து ஆடிய இறுதிப் போட்டியில் பரபரப்பான வெற்றியைப் பெற்று பாரிஸில் இறுதித் தங்கத்தை வென்றது. இதன் மூலம், தங்கப் பதக்க பட்டியலில் சீனாவை சமன் செய்து, ஒட்டுமொத்த பதக்க பட்டியலில் முதலிடத்தைப் பதிவு செய்தது.

பதக்கப் பட்டியலில் அமெரிக்கா 40 தங்கப் பதக்கங்கள், 44 வெள்ளிப் பதக்கங்கள், 42 வெண்கலப் பதக்கங்களை வென்று மொத்தமாக 126 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்துள்ளது. சீனா 40 தங்கப் பதக்கங்கள், 27 வெள்ளி, 24 வெண்கலத்துடன் இரண்டாவது இடத்திலும் ஜப்பான் 20 தங்கப் பதக்கங்களுடன் 45 பதக்கங்களைக் கைப்பற்றி மூன்றாவது இடத்திலும் உள்ளன.

இந்தியாவில் இருந்து 16 வகையான விளையாட்டுகளில் 112 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர். இதில் இந்தியா ஒரு வெள்ளி, 5 வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மனு பாகர் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். மேலும் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் சரப்ஜோத் சிங்குடன் இணைந்து மனுபாகர் வெண்கலப் பதக்கம் கைப்பற்றியிருந்தார்.

ஆடவருக்கான துப்பாக்கி சுடுதலில் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷனில் ஸ்வப்னில் குசாலே வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். ஆடவர் ஹாக்கியில் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது. ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார், ஆடவருக்கான மல்யுத்தத்தில் அமன் ஷெராவத் வெண்கலப் பதக்கம் வென்றார்.

மல்யுத்தம் 50 கிலோ பெண்கள் பிரிவில் வினேஷ் போகத், இறுதிப் போட்டிக்கு தேர்வாகி இருந்த நிலையில், வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனை, இறுதிப்போட்டிக்குச் செல்வதற்கு முன் நடந்த சோதனையில் 100 கிராம் உடல் எடை அதிகமாக இருந்ததாகக்கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால், அவருக்கு பதக்கம் கிடைக்காத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, தனக்கு கூட்டு வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் எனக் கோரி வினேஷ் போகத், விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வினேஷ் போகத் மேல்முறையீடு குறித்து ஒலிம்பிக் விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தின் (சிஏஎஸ்) இன்று தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று இரவு 12.30 மணி அளவில் பிரம்மாண்டான நிறைவு விழா 80 ஆயிரம் பேர் அமரக்கூடிய தி ஸ்டேட் டி பிரான்ஸ் ஒலிம்பிக் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் நடைபெறும் அணிவகுப்பில் இந்திய தேசியக் கொடியை துப்பாக்கிசுடுதல் வீராங்கனையான மனு பாகரும், ஹாக்கி வீரரான பி.ஆர்.ஸ்ரீஜேஷும் ஏந்திச் செல்கின்றனர். நிறைவு விழாவின் இறுதியில் ஒலிம்பிக் கொடி இறக்கப்பட்டு அடுத்த ஒலிம்பிக் (2028) நடைபெறும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் போட்டி அமைப்பாளர்களிடம் ஒப்படைக்கப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+