Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடியுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்.. அமெரிக்க துணை அதிபரின் மகனுக்கு பிரதமர் கொடுத்த கிப்ட்

Subscribe to Oneindia Tamil

பாரிஸ்: பிரதமர் மோடி பிரான்ஸின் 3 நாள் சுற்றுப்பயணத்தை இன்று முடித்து அமெரிக்கா செல்ல உள்ளார். முன்னதாக நேற்று பிரான்ஸில் அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது ஜேடி வான்ஸின் மகன் விவேக் பிரதமர் மோடியுடன் பிறந்தநாள் கொண்டாடினார். பிரதமர் மோடி அவருக்கு கிப்ட் கொடுத்தார்.

இந்தியா - பிரான்ஸ் இடையே நீண்ட காலமாக நல்ல உறவு என்பது உள்ளது. குறிப்பாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் நல்ல நண்பர்களாக உள்ளனர். உலக அரங்கில் இருநாடுகளும் ஒன்றையொன்று விட்டு கொடுக்காமல் செயல்பட்டு வருகின்றன.

narendra modi france jd vance

இந்நிலையில் தான் பிரதமர் மோடி 3 நாள் பயணமாக நேற்று டெல்லியில் இருந்து பிரான்ஸ் புறப்பட்டு சென்றார். பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நேற்று முன்தினம் இறங்கிய பிரதமர் மோடியை, அந்த நாட்டின் பாதுகாப்பு படை அமைச்சர் செபாஸ்டியன் லெகோர்னு வரவேற்றார். அதன்பிறகு பிரதமர் மோடி ஹோட்டலுக்கு சென்ற நிலையில் அங்கு வசித்து வரும் இந்திய மக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

அதன்பிறகு இரவு நேரத்தில் பிரதமர் மோடிக்கு, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் டின்னர் விருந்து வைத்தார். நேற்று பாரீஸ் நகரில் ஏஐ உச்சி மாநாடு (AI Action Summit)நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இமானுவேல் மேக்ரானுடன், பிரதமர் மோடி தலைமை வகித்தார். இந்த மாநாட்டில் ‛‛ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சி என்பது கட்டாயம் தேவை. இது மக்களின் வேலைவாய்ப்புகளை பறிக்காது'' என்று கூறினார்.

இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். அதன்பிறகு பிரதமர் மோடி, இமானுவேல் மேக்ரான் ஆகியோர் தனியாக சந்தித்து இருதரப்பு உறவு பற்றி பேசினார். இன்று காலையில் மார்செய்லே நகரில் போர் நினைவு இடத்துக்கு முதலாம் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போரில் கலந்து கொண்டு உயிர் நீத்த இந்திய வீரர்களுக்காக பிரதமர் மோடி, இமானுவேல் மேக்ரான் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஏஐ உச்சி மாநாட்டுக்காக அமெரிக்காவில் இருந்து துணை அதிபர் ஜேடி வான்ஸ் பங்கேற்க வந்திருந்தார். நேற்று முன்தினம் டின்னர் பார்ட்டியில் இருவரையும் சந்திக்க வைத்து இமானுவேல் மேக்ரான் அறிமுகம் செய்து வைத்தார். நேற்றைய தினம் பிரதமர் மோடி மற்றும் ஜேடி வான்ஸ் ஆகியோர் சந்தித்து இருநாடுகள் இடையேயான உறவு பற்றி விவாதித்தனர். அப்போது எனர்ஜி மற்றும் நியூக்ளியர் டெக்னாலஜி சார்ந்த விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.

இந்த விவாதத்தின்போது ஜேடி வான்ஸின் மனைவியும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான உஷா வான்ஸ் அருகே இருந்தார். நேற்றைய தினம் ஜேடி வான்ஸ் - உஷா வான்ஸ் தம்பதியின் மகன் விவேக்கிற்கு பிறந்தநாளாகும். இதையடுத்து விவேக்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். விவேக்கிற்கு பிரதமர் மோடி கிப்ட்டுகள் வழங்கினார். அதன்பிறகு அவர்கள் ஒன்றாக அமர்ந்து தேநீர் அருந்தினர்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்துடனான சந்திப்பு நல்ல முறையில் இருந்தது. பல்வேறு விஷயங்கள் பற்றி இருவரும் விவாதித்தோம். அவர்களின் மகன் விவேக்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றதில் மகிழ்ச்சி'' என்று கூறியிருந்தார். அதேபோல் அமெரிக்காவின் துணை அதிபர் ஜேடி வான்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛பிரதமர் மோடி அன்பானவராகவும், கனிவானவராகவும் இருந்தார். அவரது பரிசால் எனது குழந்தைகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவருடன் நல்லபடியாக அமைந்த உரையாடலுக்கு நன்றி சொல்லி கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

பிரதமர் மோடியின் 3 நாள் பிரான்ஸ் பயணம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து மோடி பிரான்ஸில் இருந்து நேரடியாக அமெரிக்கா புறப்பட்டு செல்ல உள்ளார். அமெரிக்காவில் பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக செல்கிறார். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ள நிலையில் பிரதமர் மோடி அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார். அதோடு இருநாடுகள் இடையேயான உறவு பற்றி இருதலைவர்களும் விவாதிக்க உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+