மோடியின் அல்டிமேட் திட்டம்.. ஜி7 மாநாட்டில் எழப்போகும் காஷ்மீர் பிரச்சனை.. டிரம்ப்புடன் சந்திப்பு!

பிரதமர் மோடி இன்று நடக்கும் ஜி7 உச்சி மாநாட்டில் ஜம்மு காஷ்மீர் பிரச்சனையை எழுப்ப வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    PM Narendra Modi may raise Jammu Kashmir issue in G7 summit

    பாரீஸ்: பிரதமர் மோடி இன்று நடக்கும் ஜி7 உச்சி மாநாட்டில் ஜம்மு காஷ்மீர் பிரச்சனையை எழுப்ப வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்ப் இருவரும் இன்று சந்திப்பு நடத்தினார்கள்.

    பிரான்சில் இன்று நடக்கும் ஜி7 மாநாடு உலகம் முழுக்க பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி பிரான்ஸ் சென்று உள்ளார்.

    அவர் தற்போது மூன்று நாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். முதலில் பிரான்ஸ் சென்ற அவர் பின் பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுவிட்டு தற்போது மீண்டும் பிரான்ஸ் வந்துள்ளார்.

    கலந்து கொள்கிறார்

    கலந்து கொள்கிறார்

    இன்று பிரான்சில் நடக்கும் ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். உலகின் பொருளாதாரத்தை பெருமளவில் கையில் வைத்திருக்கும் நாடுகளான பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள்தான் ஜி7 நாடுகள் ஆகும். இதில் இந்தியா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    சிறப்பு அழைப்பு

    சிறப்பு அழைப்பு

    இந்த குழுவில் இந்தியா இல்லை என்றாலும் பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரூன் சிறப்பு அழைப்பு விடுத்துள்ளார். அவருடைய அழைப்பின் பெயரில் பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றுள்ளார். இன்று பிரான்சில் நடக்கும் மாநாட்டில் பிரதமர் மோடி பேச இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சந்திக்கிறார்

    சந்திக்கிறார்

    இந்த மாநாட்டின் போது பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டிரம்பும் ஒன்றாக சந்திப்பு நடத்தினார்கள் . இவர்கள் இருவரும் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார்கள். பிரதமர் மோடி டிரம்ப்பிடம் காஷ்மீர் பிரச்சனை குறித்து பேசினார். காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்ட பின் இவர்கள் முதல்முறை இப்படி சந்திக்கிறார்கள்.

    வேறு என்ன

    வேறு என்ன

    அதேபோல் ஜி7 மாநாட்டில் அவர் பேசும் போதும் கூட காஷ்மீர் பிரச்சனையை எழுப்புவார் என்று கூறுகிறார்கள். உலகின் ஏழு முக்கிய நாடுகளுக்கு முன்னிலையில் காஷ்மீர் பிரச்சனை கொண்டு வரப்பட்டால் அது இந்தியாவிற்கு பெரிய சாதகமாக மாறும். இதனால் இன்று பிரதமர் மோடியின் பேச்சு அதிக கவனம் பெறுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+