உக்ரைன், காசாவில்.. அமெரிக்காவுக்கு ஆப்பு வைத்த டெலிகிராம்! பாவெல் துரோவ் கைதுக்கான காரணமே இதுதான்
பாரிஸ்: டெலிகிராம் செயலியின் நிறுவனர் பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டது உலகம் முழுவதும் பெரும் விவாதங்களை கிளப்பி இருக்கிறது. இந்நிலையில் இவரது கைதுக்கு காரணம், உக்ரைன் மற்றும் காசா போரில் அமெரிக்காவுக்கு எதிராக பரப்பப்பட்ட தகவல்கள்தான் என்று சொல்லப்படுகிறது.
பாவெல் துரோவ் அடிப்படையில் ரஷ்ய நாட்டை சேர்ந்தவராவார். ஆனால் ரஷ்யாவுக்கும் இவருக்குமே பெரிய அளவில் செட் ஆகாது. காரணம் டெலிகிராம்தான். ஊருக்குள்ள பத்து பதினஞ்சு ஆப் வெச்சிருக்கிற கூகுள் கூட நிம்மதியா இருக்கான்.. ஒரே ஒரு ஆப் வெச்சிக்கிட்டு.. என துரோவ் புலம்புவதற்கு முதல் காரணம் ரஷ்யாதான்.

அதாவது கடந்த 2010ம் ஆண்டு, உக்ரைனில் டெலிகிராம் பயன்படுத்துபவர்கள், எந்த செய்திகளை பகிர்ந்துக்கொள்கிறார்கள்? என்கிற விவரங்களை ரஷ்யா கேட்டு ஏழரையை கூட்டியது. ஆனால், பயனாளர்களின் பிரைவசி ரொம்ப முக்கியம். எனவே, எங்களால் தகவல்களை தர முடியாது.. என துரோவ் வெளிப்படையாக மறுத்துவிட்டார். மட்டுமல்லாது, உள்ளூரில் இனி கடையை வைத்திருந்தால் நம்மை காலி செய்துவிடுவார்கள் என்று உணர்ந்த அவர், அமெரிக்காவுக்கு ஜம்ப்பாகிவிட்டார்.
அமெரிக்கா மட்டும் என்ன உத்தம புத்திரரா? கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி, டிரம்ப் ஆதரவாளர்கள் கேப்பிட்டல் ஹாலுக்குள் நடத்திய கலவரம் டெலிகிராமில்தான் திட்டமிட்டதாக கூறி, குற்றம் சாட்டப்பட்ட அந்த தனிநபர் தகவல்களை தங்களுக்கு தருமாறு கேட்டது ஜோ பைடன் நிர்வாகம். ஒருமுறை தகவல்களை கொடுத்துவிட்டால், எல்லா முறையும் இதையே மேற்கோள் காட்டி தகவல்களை பெற, பல்வேறு நாடுகளின் அரசுகள் முயற்சிக்கும் என்பதை உணர்ந்த துரோவ், அமெரிக்க அரசின் கோரிக்கையை நிராகரித்து அங்கிருந்து வெளியேறிவிட்டார். தற்போது துபாயில் டெலிகிராம் தலைமை அலுவலகத்தை வைத்து நடத்தி வருகிறார்.
இதுதான் அவருடைய பின்னணி. இப்படி இருக்கையில் சமீபத்தில் பிரான்ஸ் வந்திருந்த அவர், அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். பண மோசடி, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆபாச பதிவுகள் போன்றவற்றிற்கு டெலிகிராம் செயலி காரணமாக இருக்கிறது என, ஏற்கெனவே பிரான்ஸ் அரசு அவர் மீது குற்றம் சுமத்தி இருந்தது. இதையடுத்து கடந்த 24ம் தேதி அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இருப்பினும் துரோவ் கைது செய்யப்படுவதற்கு இது உண்மையான காரணம் இல்லை என்று சொல்லப்படுகிறது.
அப்படியெனில் உண்மை காரணம் என்ன? இதற்கு மூன்று விடைகள் சொல்லப்படுகிறது. முதல் விடை பாலஸ்தீனம்-இஸ்ரேல் போர். இந்த போரின் பின்னணி பொதுவாக எல்லோருக்கும் தெரியும். ஆக்கிரமிப்பு நோக்கத்துடன் செயல்படும் இஸ்ரேல், அதற்கு அமெரிக்கா முழு உதவி அளித்து வருகிறது என்றும், காசாவில் அப்பாவி பொதுமக்கள் தாக்குதல் நடத்தப்படுகிறது எனவும் உலகம் முழுவதும் விமர்சனம் கிளம்பியுள்ளது. இதற்கு டெலிகிராம் முக்கிய காரணம்.
அதாவது காசாவில் அப்பாவி மக்கள் மீதும், பத்திரிகையாளர்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு ஆதாரங்களாக வீடியோ இருக்கிறது. இந்த வீடியோக்கள் மேற்கத்திய நாட்டு ஊடகங்களில் அடிக்கடி வெளியாகி உலக நாடுகள் மத்தியில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த வீடியோக்கள் முழுக்க முழுக்க டெலிகிராம் மூலமாகவே லீக் செய்யப்படுகின்றன. இதை அமெரிக்காவால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இரண்டாவது காரணம் உக்ரைன்-ரஷ்யா போர். இந்த போரில் உக்ரைனுக்கு, அமெரிக்கா ஆயுத உதவியை செய்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும், இந்த போரில் அமெரிக்கா நேரடியாக பங்கேற்கவில்லை என்று கூறி வருகிறது. ஆனால்.. உக்ரைன் போர் முனையில் உயிரிழந்த நேட்டோ வீரர்களின் படங்கள் டெலிகிராமில் பகிரப்பட்டு வருகிறது.
அதாவது உக்ரைன் போரில் எங்கள் பங்களிப்பில்லை என்று அமெரிக்கா கூறிக்கொண்டே, எல்லைக்கு தொடர்ந்து வீரர்களை அனுப்புகிறது என ரஷ்யா, டெலிகிராம் உதவியுடன் ஆதாரப்பூர்வமாக நிரூபித்து வருகிறது. இதனால், போர் குறித்து ரஷ்யாவுககு எதிரான கருத்தாக்கங்களை அமெரிக்காவால் உருவாக்க முடியவில்லை. இது சிஐஏவுக்கு பெரிய தோல்வி.
மூன்றாவது காரணம் ஆப்பிரிக்காவில் பிரான்ஸ் படைகள் செய்த அட்டூழியம். இது தொடர்பான அனைத்து தகவல்களும் களத்திலிருந்து, எடுத்து டெலிகிராம் வழியாக உலக மக்களிடையே, ஆப்பிரிக்கா மக்கள் அம்பலப்படுத்தினர். இது பிரான்ஸுக்கு பேரடி. இதெல்லாம்தான், துரோவை கைது செய்ய காரணமாக அமைந்துள்ளது என்று சொல்லப்படுகிறது.
தற்போது துரோவை மீட்க ரஷ்யா தீவிரமாக முயன்று வருகிறது. ஆனால், துரோவிடம் பிரான்ஸ் குடியுரிமை இருப்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க எங்களுக்கு முழு உரிமை இருக்கிறது என பிரான்ஸ் கூறியுள்ளது.
இதையெல்லாம் துரோவ் எதிர்பார்த்ததுதான். எலான் மஸ்க், மார்க் ஜுகர்பெர்க் போன்று தனக்கு அங்கீகாரம் கிடைக்காது என்பதை துரோவ் ஏற்கெனவே உணர்ந்திருந்தார். இப்படி இருக்கையில் அவர் எதிர்பார்த்ததை போன்ற சம்பவம் நடந்திருக்கிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications