ஓஹோ.. புதின் திடீர் திடீரென போரை நிறுத்தியது இவர் சொல்லிதானா.. உலகம் கவனிக்க தவறிய "தனி ஒருவன்"!
பாரீஸ்: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதற்கு உலக நாடுகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாதிமர் புதினுடன் இப்போதும் தொடர்பில் இருப்பவர் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன்தான்.
ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுப்பதை நிறுத்த உலக நாடுகள் தொடர்ந்து முயற்சி செய்தன. ஆனால் போரை நிறுத்த முடியவில்லை. இருநாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தை முன்னெடுத்தன. ஆனாலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இந்நிலையில் போரைத் தடுப்பதற்கான வேலைகளில் இறங்கினார் பிரான்ஸ் அதிபர் மக்ரோன். இவரது அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தாலும், அவரது முயற்சியை கைவிடவில்லை.

இம்மானுவேல் மக்ரோன்
உக்ரைன் ரஷ்யா போர் நிறுத்தப்படவேண்டும் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தொடர்ந்து முயற்சி செய்துள்ளார். ரஷ்யப் படைகள் பிப்ரவரி 24 அன்று உக்ரைனைத் தாக்கத் தொடங்கியது. அதில் இருந்து நான்கு முறை ரஷ்ய அதிபருடன் தொலைபேசியில் பேசி இருக்கிறார். போருக்கு முன் 11 முறையும் பேசினர். மக்ரோன் தொலைபேசியில் பேசியதோடு புதினை சந்தித்திருக்கிறார். மற்றும் இஸ்ரேலிய பிரதம மந்திரி நஃப்தலி பென்னட்டும், போர் நிறுத்தும் முயற்சியில் மத்தியஸ்தராக மாறி, சனிக்கிழமையன்று மாஸ்கோ சென்று புதினை சந்தித்தார்.

போர் நிறுத்தம்
பிரான்ஸ் அதிபர் மக்ரோன் தொடர்ச்சியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என ரஷ்ய அதிபருடன் உரையாடி வருகிறார். ஒரு போரை நிறுத்த போராடுவதை ஐரோப்பாவின் பாரம்பர்யம் என கூறுகிறார்கள். அதோடு, அமெரிக்காவின் போக்கில் இருந்து மாறி, அவர்களை கண்மூடித்தனமாக நம்ப மறுக்கும் பிரான்ஸ் நாட்டின் மனநிலையையும் மக்ரோனின் நடவடிக்கை காட்டுகிறது என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.

விளாதிமிர் புதின்
பாரிஸில் உள்ள அட்லாண்டிக் கவுன்சிலின் ஐரோப்பாவின் மூத்த இயக்குநரும் உறுப்பினருமான பெஞ்சமின் ஹடாட், கூறுகையில், ''ரஷ்ய அதிபர் புதின் இந்த நெருக்கடியில் இருந்து வெளியேற விரும்பினால், மேற்கு நாடுகளுக்கு உண்டான கதவை திறந்தே வைத்திருக்கிறார்'' என்றார். விளாதிமர் புதினும் இம்மானுவேலும் மொழிப்பெயர்ப்பாளர்கள் உதவியுடன் பேசி வருகிறார்களாம்.

போர் நிறுத்தம்
உக்ரேனிய அதிபர் ஜெலென்ஸ்கியின் சார்பாக, ரஷ்ய அதிபர் புதினிடம், மக்ரோன் பல கருத்துக்களை எடுத்துப் பேசியுள்ளார். உள்ளூர் போர் நிறுத்துங்கள், உக்ரைனில் சிக்கி இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற உதவ வேண்டும் என்பது போன்ற உக்ரைன் அதிபரின் கோரிக்கைகளை புதினிடம் மக்ரோன் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரஷ்யாவும் தற்காலிகமாக போரை நிறுத்தியுள்ளது. உக்ரைனில் உள்ள கீவ், கார்கிவ், மரியபோல், சுமி ஆகிய நான்கு நகரங்களில் போர் நிறுத்தப்பட்டிருந்தது. இதன் பின்னணியில் இருந்தது மக்ரோன் என்ற இந்த சமாதான தூதர்தான்.

மாற்றம்
பிரான்ஸ் அதிபர் தொடர்ந்து பேசிவந்தாலும், ரஷ்ய அதிபர் போரை நிறுத்தும் அளவுக்கு மனமாறுவாரா என்பது தெரியாது. இருநாட்டு அதிபர்களும் தாங்கள் பேசிக்கொண்டதை ரகசியமாக வைக்காமல், இதுதான் பேசினோம் என வெளியில் சொல்கிறார்கள். மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து, உக்ரைனை பலப்படுத்தினாலும், ரஷ்யாவிடம் பிரான்ஸ் இப்படித்தான் நடந்துகொள்ளும் என பிரான்ஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா
அமெரிக்கா, இங்கிலாந்து என சில நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளன. நேட்டோ வாக்கெடுப்பில் பொருளாதார தடைக்கு பிரான்ஸ் ஆதரவு கொடுத்தது. ரஷ்ய அதிபருடன் தொடர்பில் இருப்பதற்காக, மக்ரோனிடம், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் நேரடியாக பேச பிரான்ஸ் வர உள்ளார். மக்ரோனின் முயற்சிகள் அமெரிக்காவுக்கும் தெரியும், ஆனால் இவரது முயற்சிகள் எந்த அளவு ரஷ்யாவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அமெரிக்காவுக்கும் தெரியாது.

பேச்சுவார்த்தை
உக்ரைனில் ஏற்பட்டிருக்கும் அழிவுக்கு ரஷ்யா தான் காரணம் என்பது மக்ரோனுக்கும் தெரியும். உக்ரைனில் இருந்து போர் காரணமாக ஒரு மில்லியன் மக்கள் வெளியேறி இருக்கும் நிலையில், மக்ரோனை அழைத்துப் பேசினார் புதின். உக்ரைனில் ராணுவ நடவடிக்கை "திட்டத்தின்படி நடக்கிறது" என்று மக்ரோனிடம் புதின் கூறினார்.
Recommended Video

போர்குற்றம்
மக்ரோனுடனான பேச்சுவார்த்தையில் உக்ரேனியர்கள் போர்க்குற்றங்கள் செய்திருக்கிறார்கள் என புதின் விவரித்திருக்கிறார். புதின் அவர்களை "நாஜிக்கள்" என்று அழைத்ததாக, பிரான்ஸ் அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். அந்த செய்தி தற்போது வெளியாகியுள்ளது. உக்ரைனுடன் இனி பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியமில்லை என புதின் கூறியுள்ளார். மக்ரோனிடம் போர் குறித்து புதின் பேசும்போது உண்மையையே பேசுவதாகவும், போர் நிறுத்த வேண்டும் என மக்ரோன் சொன்னபோது, அதை புதின் மறுத்துவிட்டதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார். எனினும் விக்ரம்-வேதாளம் கதையாக, மக்ரோன், அமைதி தூதராக தொடர் முயற்சிகளை விடாமல் எடுத்து வருகிறாராம்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications