ஐ.சி.யூவில் கணவர்.. அருகில் இருந்த மனைவிக்கு.. பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர்.. இது பீகார் கொடுமை!
பாட்னா: கொரோனாவுக்கு சிகிச்சை பெரும் கணவருக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்றும், மருத்துவமனை ஊழியர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் பீகாரை சேர்ந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியா முழுவதும் இடைவிடாமல் தாக்கி வரும் கொரோனா தொற்று பல்வேறு மாநிலங்களில் மரண ஓலங்களை ஏற்படுத்தி வருகிறது.
பல மாநிலங்களில் பல்வேறு மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி விட்டதால் சிகிச்சை பெற முடியாமல் கொரோனா நோயாளிகள் தவித்து வருகின்றனர்.

பெண் கண்ணீர்மல்க புகார்
நிலைமை இப்படி இருக்க தனியார் மருத்துவமனையில் தனது கணவருக்கும், அம்மாவுக்கும் சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்றும் தனக்கு மருத்துவமனை ஊழியர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் ஒரு பெண் பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளார். இதயத்தை நொறுங்கக் செய்யும் வகையில் சுமார் 12 நிமிடம் ஓடும் வீடியோவில் அந்த பெண் கண்ணீர்மல்க கூறியதாவது:-

கொரோனா பாதிப்பு
நானும் என் கணவரும் நொய்டாவில் தங்கி இருந்தோம். நாங்கள் ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்கு பீகார் வந்தோம். கடந்த ஏப்ரல் 9-ம் தேதி எனது கணவர் நோய்வாய்ப்பட்டார். அவருக்கு அதிக காய்ச்சல் இருந்தது. நாங்கள் இரண்டு முறை கொரோனா வைரஸை சோதித்தோம்,. ஆனால் தொற்று இல்லை. நாங்கள் ஆர்டி-பி.சி.ஆர் சோதனை முடிவுகளுக்காகக் காத்திருந்தபோது, மருத்துவர் ஒருவர் சி.டி. ஸ்கேன் எடுக்கச் சொன்னார்.

மருந்து கொடுக்கவில்லை
இதனை தொடர்ந்து தொற்று உறுதியானதால் பாகல்பூரில் குளோபல் மருத்துவமனையில் எனது கணவரை முதன் முதலாக கிச்சைக்காக சேர்த்தோம். எனது அம்மாவையும் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக அனுமதித்தோம். டாக்டர்கள் சில நிமிடங்களுக்குள் வந்துவிட்டு சென்று விடுவார்கள். நர்ஸுகள் எனது கணவருக்கு தேவையான மருந்துகளை கொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் எனது அம்மா ஓரளவு தேறினார். ஆனால் எனது கணவரால் பேசக் கூட முடியவில்லை.

துப்பட்டாவை இழுத்தார்
அவர் தண்ணீருக்காக சமிக்ஞை செய்வார். ஆனால் மருத்துவமனை டாக்டர்கள், நர்ஸுகள் யாரும் அவருக்கு எதுவும் கொடுக்கவில்லை. எனது கணவர் படுத்திருந்த அழுக்கடைந்த பெட்சீட்களை கூட அவர்கள் மாற்றவில்லை. அப்போது குளோபல் மருத்துவமனையில் உதவியாளராக இருந்த ஜோதி குமார் என்பவர் கணவருக்கு உதவி செய்வதாக கூறினார். ஒரு கட்டத்தில் நான் கணவர் அருகில் நின்றபோது எனது துப்பட்டாவை யாரோ இழுப்பது போல் தெரிந்தது.

இடுப்பில் கைவைத்தார்
நான் அதிர்ச்சி அடைந்து திரும்பி பார்த்தபோது, ஜோதி குமார் என்பவர் எனது இடுப்பில் கைவைத்து கொண்டு சிரித்தார். நான் அவரிடம் இருந்து எனது துப்பட்டாவை பறித்தேன். எனது கணவரும், அம்மாவையும் ஏதும் செய்து விடுவார்கள் என்று கருதி அப்போது நான் ஏதும் சொல்லவில்லை என்று அந்த பெண் கண்ணீர்மல்க கூறினார். இந்த மருத்துவமனை தவிர வேறு ஒரு இரண்டு மருத்துவமனை மீதும் அந்த பெண் குற்றம்சாட்டி உள்ளார்.

ஆகிசிஜன் கொடுக்கவில்லை
பாகல்பூர் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த மருத்துவர்கள் நாங்கள் வேண்டுகோள் விடுத்த போதிலும் எனது கணவருக்கு சிகிச்சை அளிக்கவோ , அவருக்கு ஆக்ஸிஜன் கொடுக்கவோ மறுத்துவிட்டதாக கூறியுள்ளார். பாட்னா நகரத்தில் உள்ள ராஜேஸ்வர் மருத்துவமனையில், கணவரின் ஆக்ஸிஜன் அளவு ஆபத்தான அளவில் குறைந்துவிட்டபோதிலும், மருதத்துவமனை ஊழியர்கள் அவருக்கு சிகிச்சை அளிப்பதில் அலட்சியம் காட்டினர் என்று அந்த பெண் குற்றம்சாட்டி உள்ளார். இந்த பெண்ணின் குற்றச்சாட்டை தொடர்ந்து குளோபல் மருத்துவமனை பாலியல் புகாருக்கு ஆளான ஊழியரை இடைநீக்கம் செய்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications