Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பீகார் ஓவர்.. தமிழ்நாட்டிற்கு படையெடுங்கள்.. மொத்தமாக பெரும் டீமை அனுப்பும் அமித் ஷா.. பெரிய பிளான்!

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகார் தேர்தலில் NDA வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாட்டில் பாஜக பெரிய அளவிலான கட்சி விரிவாக்கத்திற்கு தயாராகி வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பல பாஜக தலைவர்களையும், வியூக நிபுணர்களையும் அடுத்த சில மாதங்களுக்கு தமிழகத்தில் கவனம் செலுத்த அறிவுறுத்தியுள்ளதாக டெல்லியில் உள்ள மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.

கட்சி வட்டாரங்களின்படி, பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்ட பல முக்கிய பாஜக தலைவர்கள், இப்போது தமிழகத்திற்கு மாற்றப்படவுள்ளனர். இந்தத் தலைவர்கள் களப்பணி, வாக்குச்சாவடி மேலாண்மை, வாக்காளர் ஆலோசனை மற்றும் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு ஆகியவற்றை மேற்பார்வையிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தில் கட்சியின் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க பாஜக முயற்சிப்பதால், வலுவான கள இருப்பு வெற்றிக்கு வழிவகுக்கும், வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்க உதவும் என்று கட்சி நம்புகிறது.

Bihar Election 2025 2025 Bihar Election Results 2025 2025

படையெடுக்கும் தலைகள்

டெல்லியை சேர்ந்த பல பாஜக தலைவர்களிடம்.. தமிழ்நாடு செல்லுங்கள்.. பணிகளை தொடங்குங்கள்.. உங்களுக்கான குழுக்கள் அமைக்கப்படும் என்று பாஜக மேலிடம் உத்தரவிட்டு உள்ளதாம். டெல்லியைச் சேர்ந்த தலைவர்கள் படிப்படியாக தமிழகம் வருவார்கள் என உள்விவர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பீகார் தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி (NDA) பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. பீகாரில் பாஜக - ஜேடியூ கூட்டணி 202 இடங்களில் வெற்றியை பெற்று உள்ளது. பாஜக 89 இடங்களிலும் , ஜேடியு 85 இடங்களிலும் வென்றுள்ளது.

பீகாரில் காங்கிரஸ் கட்சி மிக மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளது. அங்கு 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், வெறும் 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கூட்டணி கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் 25 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.

தமிழ்நாட்டிற்கு பிளான்

நிதிஷ் குமாரின் 'தஸ் ஹசாரி சுனாவு ஹை, தூஸ்ரி தரஃப் கட்டா சர்க்கார் ஹை' ( ₹10,000 கொடுக்கும் அரசு வேண்டுமா? இல்லை சட்டம் ஒழுங்கு இல்லாத அரசு வேண்டுமா) என்ற முழக்கம் பரவலாக மக்களை சென்றடைந்தது. குறிப்பாக ₹10,000 திட்டம் 1.3 கோடி பெண்களுக்கு நேரடியாகப் பயனளித்ததால், பெண் வாக்காளர்களிடையே நிதிஷின் செல்வாக்கு வலுப்பெற்றது. இது 71 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் வாக்களித்ததற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

நிதிஷ் குமாரின் ₹10,000 திட்டம் ஏற்கனவே பெண்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டிருந்ததால், தேஜஸ்வி யாதவின் மாதந்தோறும் ₹2,500 வழங்கும் வாக்குறுதியை விட நிதிஷ் குமார் மீதான அவர்களின் நம்பிக்கை அதிகரித்தது. இது NDA-வின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியது.

பிரதமர் மோடி தனது தேர்தல் பிரச்சாரங்களில் 'கட்டா, துனாலி, ரங்தாரி' (துப்பாக்கிகள் மற்றும் சட்டம் ஒழுங்கு இல்லாத நிலை வேண்டுமா?) என்று பேசியது, ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பீகாரில் 'ஜங்கிள் ராஜ்' (வனராஜ்ஜியம்) திரும்பும் என்ற பயத்தை வாக்காளர்களிடையே ஏற்படுத்தியது. மோடியின் பிரச்சனை இத்தகைய பதற்றத்தை மக்கள் மனதில் ஆழமாகப் பதிய வைத்தது.

125 யூனிட் வரையிலான இலவச மின்சாரம், கிராமப்புறங்களில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. மின் கட்டணம் செலுத்த வேண்டிய தேவை இல்லாததால், கிராம மக்கள் இதை ஒரு வரப்பிரசாதமாகக் கருதினர். இதனுடன், 1.2 கோடி முதியோர்களுக்கான ஓய்வூதியத்தை ₹400-லிருந்து ₹1,100 ஆக உயர்த்திய நிதிஷ் குமாரின் அறிவிப்பு, முதியவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தத் திட்டத்தை அவர்கள் நிதிஷின் பெரிய பரிசாகக் கருதினர்.

முக்கியமாக அங்கே யாதவ் ஜாதியினருக்கு எதிரான வாக்குகளை மொத்தமாக பாஜக - ஜேடியூ அள்ளி இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். பீகாரில், வழக்கமான நிலவரப்படி, யாதவ் வாக்குகளின் பெரும்பகுதி லாலுவின் ஆர்ஜேடி கட்சிக்கே செல்கிறது. பிற சமூகங்களிடையே, அந்தக் கட்சிக்கு 5% வாக்குகள்கூட கிடைப்பதில்லை; அது ஒரு சாதி அடிப்படையிலான கட்சியாகவே செயல்படுகிறது. ஆனால் இதற்கு எதிர் வாக்குகளை பாஜக - ஜேடியூ அள்ளி உள்ளது.

இதேபோன்ற முக்கியமான வாக்குறுதிகளை , அரசியல் திட்டங்களை தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் பாஜக செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பல முக்கிய தலைகள் டெல்லியில் இருந்து தமிழ்நாட்டிற்கு விரையும் வாய்ப்புகள் உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+