Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்பவே 16 அடி பாய்ந்த ராம்விலாஸ் பாஸ்வான்.. மகன் சிராக் 32 அடி பாய்ந்தே ஆகணும்.. சாதிப்பாரா?

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகார் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் லோக் ஜனசக்தியின் தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வான் காலமானார். பீகார் தேர்தல் களங்களில் எப்போதும் திரும்பிப் பார்க்க வைக்கும் வியூகங்களை கையில் எடுக்கும் பாஸ்வான் இப்போதைய தேர்தல் களத்தில் இல்லாத சூழ்நிலையில் அவரது மகன் சிராக் பாஸ்வான் என்ன செய்யப் போகிறார்? என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

1970களில் இந்திய அரசியலில் பேரெழுச்சியாக வெளிப்பட்ட ஜெயபிரகாஷ் நாராயண் இயக்கத்தில் இருந்து அரசியலுக்கு வந்தவர் ராம்விலாஸ் பாஸ்வான். ஒவ்வொரு தேர்தல் களத்திலும் வெற்றி கூட்டணியுடன் கை கோர்ப்பது, மத்திய அரசில் இணைந்து கொள்வது இதுதான் பாஸ்வானின் வியூகமாக இருந்தது.

பீகாரில் தலித்துகளின் வாக்கு வங்கியை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டவர். 2000ம் ஆண்டு லோக்ஜனசக்தி (எல்ஜேபி) என்ற தனிக்கட்சியை தொடங்கியபோதும் இந்த ஆதரவு அவரைவிட்டுப் போகவில்லை. பீகாரில் 10%-க்கும் அதிகமான வாக்கு வங்கியை பாஸ்வானின் லோக்ஜனசக்தி தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. குறிப்பாக ஐக்கிய ஜனதா தளத்தின் (ஜேடியூ) தேர்தல் வெற்றி தோல்விகளை கடந்த சில தேர்தல்களில் தீர்மானிக்கும் சக்தியாகவும் லோக் ஜனசக்தி இருந்து வருகிறது.

ஜேடியூ-எல்ஜேபி மோதல்

ஜேடியூ-எல்ஜேபி மோதல்

உதாரணமாக 2010 சட்டசபை தேர்தலில் 28 தொகுதிகளில் ஜேடியூ- எல்ஜேபி நேருக்கு நேர் மோதின. இதில் 27 தொகுதிகளில் ஜேடியூ வென்றது. இதில் 19 தொகுதிகளில் 10%க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் ஜேடியூ வென்றது. 5 தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் 5%-10% வரை இருந்தது. 3 தொகுதிகளில் 5%-க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் ஜேடியூ வென்றது. 2015- தேர்தலில் 22 தொகுதிகளில் ஜேடியூவுடன் நேரடியாக எல்ஜேபி மோதியது.

பாஸ்வான் காலத்து தேர்தல் வியூகங்கள்

பாஸ்வான் காலத்து தேர்தல் வியூகங்கள்

2015 தேர்தலில் ஜேடியூவுக்கு எதிராக போட்டியிட்ட 22 தொகுதிகளில் 21-ல் தோல்வியைத் தழுவியது அந்த கட்சி. 12 தொகுதிகளில் 10%க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் ஜேடியூ வென்றது. 5 தொகுதிகளில் 5%-10% வாக்குகளிலும் 4 தொகுதிகளில் 5%க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலும் ஜேடியூ வென்றது. இப்போது மீண்டும் ஜேடியூவுக்கு எதிராக களத்தில் நிற்கிறது எல்.ஜேபி. இவை அனைத்துமே ராம்விலாஸ் பாஸ்வான் என்ற ஆளுமை கோலோச்சிய காலத்தில் நிகழ்ந்தவை.

பாஸ்வான், சிராக் பாஸ்வான்

பாஸ்வான், சிராக் பாஸ்வான்

இப்போது ராம்விலாஸ் பாஸ்வான் மறைந்துவிட்டார். அவரது மகன் சிராக் பாஸ்வான்தான் கட்சியின் தலைவராக இருக்கிறார். பாஸ்வானால் பல்லாயிரக்கணக்கான மக்களை அணிதிரட்ட முடிந்தது. ஆனால் சிராக் பாஸ்வான், மாஜி நடிகர் என்ற அடையாளத்தை தவிர தலித் மக்களுக்கான தலைவர் என்ற தகுதியை இன்னமும் எட்டவில்லை. இதனால் மக்களை பெரிய அளவில் திரட்டவும் முடியாத சூழ்நிலைதான் இருந்து வருகிறது.

ஜேடியூவுக்கு எதிராக போட்டி

ஜேடியூவுக்கு எதிராக போட்டி

இந்த நிலையில் தற்போதைய தேர்தலில் ஜேடியூவுக்கு எதிராக போட்டியிடுவது என்பதில் சிராக் பாஸ்வான் உறுதியாக நிற்கிறார். அக்டோபர் 28-ல் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 71 தொகுதிகளில் 42-க்கான வேட்பாளர்களை சிராக் பாஸ்வான் அறிவித்திருக்கிறார். இவை அனைத்துமே ஜேடியூ போட்டியிடும் தொகுதிகள். பாஸ்வான் இல்லாத சூழ்நிலையில் கடந்த காலங்களைப் போல ஜேடியூவுக்கு நெருக்கடியை கொடுக்க எல்ஜேபியால் இம்முறை முடியுமா? இல்லை வழக்கம் போல ஜேடியூவிடம் தோல்வியை தழுவுமா எல்ஜேபி? சிராக் பாஸ்வானை மக்கள் தலைவராக உருவாக்க தன்னுடைய வாக்குகளை கூட்டணி கட்சியான ஜேடியூவுக்கு போடாமல் எல்ஜேபிக்கு அளிக்குமா பாஜக? என்கிற பல கேள்விகளை கொண்டதாக இந்த தேர்தல் களம் இருக்கிறது.

தேர்தல் முடிவுகளில் எதிர்காலம்

தேர்தல் முடிவுகளில் எதிர்காலம்

ஒருவேளை தேர்தலில் படுதோல்வியை எல்ஜேபி தழுவினால் சிராக் பாஸ்வானின் அரசியல் எதிர்காலம் எப்படியானதாக இருக்கும்? பாஸ்வான் என்ற மாபெரும் ஆளுமையின் மறைவோடு அந்த கட்சியின் சகாப்தமும் முடிவுக்கு வருமா? என்பது எல்லாம் பீகார் தேர்தல் முடிவுகள்தான் சொல்லக் காத்திருக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+