Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கணவனின் கள்ளக்காதலியின் கணவனை கல்யாணம் செய்த மனைவி.. அவரே சொன்ன காரணம்

பீகாரில் மனைவியை கல்யாணம் செய்தவரை பழிவாங்குவதற்காக அவரது மனைவியை கல்யாணம் செய்திருக்கிறார் ஒருவர்.

Subscribe to Oneindia Tamil

பாட்னா: மனைவி தன்னை விட்டுவிட்டு கள்ளக்காதலனோடு ஓடிப்போனதால் ஆத்திரம் அடைந்த கணவன், மனைவியின் கள்ளக்காதலனை பழிவாங்குவதற்காக அவரது மனைவியை திருமணம் செய்திருக்கிறார். இந்த சம்பவம் பீகாரில் நடந்திருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பீகாரின் ககாரியா மாவட்டத்தில் திருமணமான பெண் ஒருவர் வேறொரு ஆணுடன் ஓடிப்போய்விடவே, பழிவாங்குவதற்காக அவரது கணவர், மனைவியின் காதலனின் மனைவியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

ரூபி தேவி என்ற பெண் நீரஜ் என்பவரை 2009 இல் திருமணம் செய்து கொண்டார். தம்பதியருக்கு நான்கு குழந்தைகள் இருந்தனர். இருப்பினும், நீரஜ் மனைவி முகேஷ் என்ற நபருடன் திருமணத்திற்கு புறம்பான தொடர்பு வைத்திருந்திருக்கிறார். முகேஷுக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றனர்.

விசாரணை

விசாரணை

பிப்ரவரி 2022 இல், ரூபியும் முகேஷும் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டனர். இதையறிந்த நீரஜ், முகேஷ் மீது தனது மனைவியைக் கடத்தியதாக போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் அவர்கள் குடும்பத்தினரை நேரில் அழைத்து விசாரணை நடத்தி இருவரையும் தேடி வந்தனர்.

திருமணம்

திருமணம்

இதற்கிடையே இந்த விவகாரத்தைப் பேசி தீர்ப்பதற்காக கிராமப் பெரியோர்கள், இரு குடும்பத்தாரையும் அழைத்தனர். ஆனால், அதற்கு நீரஜ் ஒப்புக்கொள்ளாமல் தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில், முகேஷைப் பழிவாங்க நினைத்த நீரஜ், முகேஷின் மனைவியைத் திருமணம் செய்துகொண்டார்.

பழிவாங்க திருமணம்

பழிவாங்க திருமணம்

இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், முகேஷ் மனைவியின் பெயரும் ரூபி தேவிதானாம். முகேஷின் மனைவி ரூபி தேவியும், தன்னை ஏமாற்றிவிட்டுச் சென்ற தன்னுடைய கணவரைப் பழிவாங்கும் நோக்கில், நீரஜைத் திருமணம் செய்துகொண்டதாக கூறியிருக்கிறார்.

90ஸ் கிட்ஸ் வேதனை

90ஸ் கிட்ஸ் வேதனை

இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. 90களில் பிறந்த நெட்டிசன் ஒருவர் இப்படி, ரூபிகளுக்கு தான் தெரியும் யாருடன் வாழ வேண்டும் என்று.. ரூபிகள் தங்கள் கணவன்களை மாற்றி கொண்டிருக்கிறார்கள். நானோ இன்னமும் கல்யாணமே செய்யாமல் சுற்றிக்கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார். ரூபிக்களின் செயலால் அவர்களின் குழந்தைகள் மிகவும் குழப்பமடைவார்கள் என்று இன்னொரு நெட்டிசன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+