பீகார் 2ஆம் கட்ட தேர்தல்.. 122 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்! ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்!
பாட்னா: பீகார் சட்டசபைத் தேர்தலின் இரண்டாம் கட்ட மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. தேர்தலில் மொத்தம் 1,302 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர், இதில் 136 பேர் பெண்கள். இந்த தேர்தலில் 122 தொகுதிகளில் 3 கோடியே 70 லட்சம் பேர் வாக்களிக்கின்றனர். காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
மொத்தம் 243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டசபையில், இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக கடந்த 6ஆம் தேதி 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் 65.08 சதவீதம் வாக்குகள் பதிவாகின. அதனைத் தொடர்ந்து, இன்று இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 122 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த 122 தொகுதிகள் பீகாரின் 20 மாவட்டங்களைச் சேர்ந்தவை. மொத்தம் 3.7 கோடி வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக உரிமையை இன்று செலுத்தவுள்ளனர். இதில் 1.95 கோடி ஆண்கள், 1.74 கோடி பெண்கள், மேலும் 943 மூன்றாம் பாலினத்தவர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

பீகார் தேர்தல்
இரண்டாம் கட்டத் தேர்தலில் மொத்தம் 1,302 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர், இதில் 136 பேர் பெண்கள். வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். பாதுகாப்பு காரணங்களுக்காக சில பதட்டமான பகுதிகளில் வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கே நிறைவடையும். இதற்காக 45,399 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய ராணுவப் படைகள், மாநில போலீஸார், ஊர்காவல்படை ஆகியவை இணைந்து பணியாற்றுகின்றன. மொத்தம் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பலத்த பாதுகாப்பு
பீகாரின் 7 மாவட்டங்கள் நேபாள எல்லையுடன் ஒட்டியுள்ளன. தேர்தல் நாளையொட்டி 726 கிலோமீட்டர் நீளமான நேபாள எல்லை முழுவதும் மூடப்பட்டுள்ளது. நேபாளம் வழியாக எந்த வாகனங்களும் பிகாருக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேபாள எல்லை மட்டுமின்றி, மாநிலத்தின் பல முக்கிய இடங்களிலும் கூடுதல் போலீஸ் படை நியமிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லியில் நேற்று ஏற்பட்ட கார் குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து, பிஹாரிலும் உயர் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தொகுதி நிலவரம்
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடர்பான செயல்பாடுகள் பாட்னாவில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏற்கனவே தீவிரமாக தொடங்கப்பட்டுள்ளன. 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டசபைத் தேர்தலின் போது, இந்த 122 தொகுதிகளில் பாஜக அதிகபட்சமாக 42 இடங்களில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சியான ஜேடியூக்கு 20 இடங்கள் கிடைத்தன. எதிர்க்கட்சியான ஆர்ஜேடி 33 இடங்களிலும், காங்கிரஸ் 11 இடங்களிலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் 5 இடங்களிலும் வெற்றி பெற்றன.
தேசிய ஜனநாயக கூட்டணி
இம்முறை அந்த நிலையைத் தக்க வைத்துக் கொள்ளவும், கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெறவும் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) மற்றும் மெகா கூட்டணி (மகாகட்பந்து) தலைவர்கள் கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது. அதன் முன் நாள்களில் ஆளும் கூட்டணிக்காக முதல்வர் நிதிஷ் குமார், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பிரச்சாரம் செய்தனர்.
சீமாஞ்சல் பகுதி
மறுபுறம் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் எதிர்க்கட்சிகளுக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். சீமாஞ்சல் பகுதி பீகார் மாநிலத்தில் சுமார் 17 சதவீதம் முஸ்லிம் மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. இவர்களின் வாக்குகளைப் பெற மெகா கூட்டணி மற்றும் ஒவைசியின் AIMIM கட்சிக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.
-
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்? -
ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல்.. மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.. தேர்தல் ஆணையம்












Click it and Unblock the Notifications