பாஸ்வான் மகனுக்கு இன்னிக்கு முட்டுக் கொடுங்க-படகு மூழ்கும்போது தெரியும்-பாஜகவுக்கு ஜேடியூ எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் லோக் ஜனசக்தி (எல்ஜேபி) தலைவர் சிராக் பாஸ்வானுக்கு பாஜக தலைவர்கள் மறைமுகமான ஆதரவை தருவதால் ஜேடியூ கடும் அதிருப்தியில் இருக்கிறது.

பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக-ஜேடியூ கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில் ஜிதன் ராம் மாஞ்சி கட்சி, விஐபி கட்சி ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. இக்கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்து வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.

எல்ஜேபி நிலை

எல்ஜேபி நிலை

இத்தனை கட்சிகளையும்விட பீகார் தேர்தலில் லோக் ஜனசக்தியின் செயல்பாடுகள்தான் விவாதப் பொருளாகி இருக்கிறது. பாஜக-ஜேடியூ கூட்டணியில் இருந்து விலகியது எல்ஜேபி. ஆனால் பாஜகவுடன் எங்கள் கூட்டணி தொடரும்; ஜேடியூவைத்தான் எதிர்க்கிறோம். நிதிஷ்குமாரை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்பது எல்ஜேபி நிலைப்பாடு.

எல்ஜேபியை ரசிக்கும் பாஜக

எல்ஜேபியை ரசிக்கும் பாஜக

அத்துடன் நிற்காமல் ஜேடியூவுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது எல்ஜேபி. ஆனால் எல்ஜேபியின் இந்த அரசியல் சேட்டைகளை பாஜக மவுனமாக ரசித்துக் கொண்டுதான் இருக்கிறது. பாஜகவில் ஒரு பிரிவினர் சிராக் பாஸ்வானின் இந்த விளையாட்டை முழுமையாக ஆதரிக்கவும் செய்கின்றனர். பாஜகவைப் பொறுத்தவரையில் தங்களைவிட ஜேடியூ அதிக இடங்களில் ஜெயித்துவிடக் கூடாது; அதற்காக எல்ஜேபி வாக்குகளை பிரிக்க உதவும் என கணக்குப் போடுகின்றனர் பாஜக தலைவர்கள்.

ஜேடியூ அதிருப்தி

ஜேடியூ அதிருப்தி

இதனால் கடுப்பாகிப் போன ஜேடியூ தலைவர்கள், பாஜகவுக்கு நெருக்கடி கொடுத்தனர். இதையடுத்து எல்ஜேபி, பிரதமர் மோடி படத்தை பயன்படுத்தக் கூடாது என்று பட்டும் படாமல் ஒரு கட்டளை பிறப்பித்தது. ஆனால் சிராக் பாஸ்வானோ, பிரதமர் மோடி என் நெஞ்சில் இருக்கிறார். வேண்டுமானால் ஹனுமனைப் போல நெஞ்சை கிழித்து காட்டட்டுமா? என வசனம் பேசுகிறார். இதையும் பாஜக ரசித்துக் கொண்டிருக்கிறது.

எச்சரிக்கும் ஜேடியூ

எச்சரிக்கும் ஜேடியூ

இப்படி பாஜக- எல்ஜேபி விளையாடும் கண்ணாமூச்சி ஆட்டத்தால் உச்ச கோபத்தில் இருக்கிறது ஜேடியூ. மேலும், இப்போது சிராக் பாஸ்வானை ஆதரித்து உங்கள் விளையாட்டை காண்பியுங்கள்.. ஒட்டுமொத்தமாக பாஜக-ஜேடியூ கூட்டணி எனும் படகே மூழ்கும் போதுதான் விபரீதத்தையே புரிந்து கொள்வீர்கள் எனவும் காட்டமாக கூறியிருக்கின்றனர் ஜேடியூ தலைவர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+