நெகிழ்ச்சி! உயிரை பிடித்துக் கொண்டிருந்த தாய்.. மகளின் திருமணத்தை பார்த்துவிட்டு கண்ணை மூடிய தாய்
பாட்னா: பீகார் மாநிலத்தில் தாயார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதே ஐசியு வார்டில் வைத்து அவரது மகளுக்குத் திருமணம் நடந்துள்ளது. மகளை மனதார ஆசீர்வாதம் செய்த அவரது தாய், திருமணம் முடிந்து கொஞ்ச நேரத்தில் உயிரிழந்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
திருமணங்கள் பொதுவாக மகிழ்ச்சி துக்கம் என இரண்டையும் தரும் நிகழ்வுகளாகவே உள்ளன. இரண்டு நபர்கள் தங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை ஒன்றாகத் தொடங்குவதே திருமணம். இது ஒரு பக்கம் நிச்சயம் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது.
அதேநேரம் பெண்கள் தங்கள் பெற்றோரை, தான் பிறந்து வளர்ந்த குடும்பத்தை விட்டு வெளியேற வேண்டியிருப்பதால் இது சோகத்தையும் தருகிறது. இப்படி திருமணம் இரண்டு கலந்த ஒன்றாகவே எப்போதும் இருந்து வந்துள்ளது.

பீகார்
சுற்றும் நட்பும் வாழ்த்த மகிழ்ச்சியான ஒரு திருமணத்தை நடத்த வேண்டும் என்பதே இங்கு அனைவரது விருப்பமாக உள்ளது. இருப்பினும், கெடுவாய்ப்பாக அனைவருக்கும் இதுபோன்ற கனவு திருமணங்கள் அமைவதில்லை. பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் நடந்த ஒரு திருமணம், உயிருக்குப் போராடிய ஒரு தாய்க்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் அளித்தது.. ஏனென்றால் அவர் படுத்த படுக்கையாகச் சிகிச்சை பெற்று வந்த போதும், அவரது மகளுக்குத் திருமணத்தை நடத்திவிட வேண்டும் என்பதே அவரது கடைசி ஆசையாக இருந்தது.

ஐசியு அறையில்
படுத்த படுக்கையாக இருந்த போதிலும், அவர் தன் மகளுக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அவரது கடைசி ஆசை விருப்பப்படியே நிறைவேறியது. ஆனால், திருமண மண்டபத்தில் இல்லை, தனியார் மருத்துவமனையின் ஐசியு அறையில்.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாய் முன்னிலையிலேயே அந்த பெண் திருமணம் செய்து கொண்டார்.. இது அங்கிருந்த அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. பீகாரின் கயா மாவட்டத்தில் உள்ள பாலி கிராமத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

உயிரிழக்கக் கூடும்
அந்த கிராமத்தில் வசிக்கும் பெண் பூனம் வர்மா... சில காலமாகவே பூனம் வர்மா மோசமான இதய கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.. கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது. இதையடுத்து பூனத்தை அவரது குடும்பத்தினர் கயாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும், அவரது உடல்நிலை மிக மோசமாகவே இருந்தது. இதனால் அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் பதற்றமாகவே இருந்தனர். மருத்துவர்களும் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும், ஒரு கட்டத்தில், அவர் எந்த நேரத்திலும் உயிரிழக்கக் கூடும் என்று அதிர்ச்சி தகவலைக் கூறியுள்ளனர்.

கடைசி ஆசை
மருத்துவரின் இந்த பேச்சைக் கேட்டாரா இல்லை எப்படியும் தன்னால் உயிர் பிழைக்க முடியாது என நினைத்தாரோ தெரியவில்லை.. பூனம் உடனடியாக தனது மகள் சாந்தினி குமாரிக்கு உடனடியாக திருமணம் செய்ய வேண்டும் என்றும் அது தான் தனது கடைசி ஆசை என்றும் கூறியுள்ளார். சாந்தினிக்கு கடந்த டிசம்பர் 26ஆம் தேதி தான் நிச்சயதார்த்தம் நடந்திருந்த போதிலும், தான் இருக்க போதே திருமணத்தைப் பார்த்துவிட வேண்டும் என நினைத்துள்ளார் பூனம். அவரது குடும்பத்தினரும் இந்த கடைசி ஆசையை நிறைவேற்ற முடிவு செய்துள்ளனர்.

நிம்மதி
மருத்துவமனையில் பூனம் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கேயே திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பொறியாளரான சுமித் கௌரவுடன் சாந்தினிக்கு ஐசியு வார்டிலேயே திருமணம் நடைபெற்றது. தனது மகளின் திருமணம் கண் முன்னே நடந்ததைக் கண்டு கண் கலங்கிப் போனார் பூனம். அது அவரது கண்களிலேயே தெளிவாகத் தெரிந்தது. அந்த ஜோடியை மகிழ்ச்சியாக ஆசீர்வாதம் செய்தார். தனது தாயின் கண்களில் தெரிந்த மகிழ்ச்சியால் சாந்தினி பூரித்துப் போனார்.

இரண்டே மணி நேரத்தில்
மகளுக்குத் திருமணம் நடந்துவிட்டதை நினைத்து மகிழ்ச்சியுடன் இருந்த பூனம், மகளுக்குத் திருமணம் நடந்த இரண்டே மணி நேரத்தில் கண்ணை மூடினார். உயிரிழக்கும் முன்பு தனது மகளின் திருமணத்தைப் பார்த்துவிட வேண்டும் என இருந்த கடைசி ஆசை நிறைவேறியதால், நிம்மதியுடன் கண்ணை மூடியுள்ளார் பூனம். தாயார் உயிரிழந்ததைப் பார்த்து அந்தப் பெண் கதறி அழுதார். இருப்பினும், அவரது கடைசி ஆசையை நிறைவேற்றிய நிம்மதி அவர்களிடம் இருந்தது.. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட்












Click it and Unblock the Notifications