திமுகவை காப்பியடித்த பாஜக.. பீகார் தேர்தல் வாக்குறுதியாக என்னவெல்லாம் சொல்லி இருக்காங்கனு பாருங்க
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலையொட்டி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த தேர்தல் அறிக்கையில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் காலை உணவு வழங்கப்படும். ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களின் குழந்தைகளுக்கு எல்கேஜி முதல் பட்ட மேற்படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும். 125 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். 1 கோடி வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று பல்வேறு அம்சங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் திமுக கூறிய சில திட்டங்களை அப்படியே பாஜக காப்பியடித்துள்ளது. அதுபற்றி இங்கு பார்க்கலாம்.
பீகார் சட்டசபை தேர்தலையொட்டி இன்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்பட கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
மேடையில் ஜேபி நட்டா - நிதிஷ் குமாருடன் கூட்டணி கட்சி தலைவர்களும் இருந்தனர்.
அதன்படி மத்திய அமைச்சரும், எச்ஏஎம் (எஸ்) கட்சியின் தலைவருமான ஜிதன் ராம் மஞ்சி, மத்திய அமைச்சரும் எல்ஜேபி (ராம்விலாஸ்) கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான், ஆர்எல்எம் கட்சியின் தலைவர் உபேந்திரா உள்பட கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் உடன் இருந்தனர்.

அனைவரும் சேர்ந்து கூட்டாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். இந்த தேர்தல் அறிக்கை என்பது பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், நலத்திட்டங்கள், உள்கட்டமைப்புகளை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
* பீகார் பள்ளிகளில் மதிய உணவுடன் சேர்த்து காலை உணவு வழங்கப்படும்.
* பீகாரில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
* ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு பட்ட மேற்படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும்.
* கடவுள் ராமர் மனைவி சீதா தேவியின் பிறந்த இடத்தில் உலக தரம் வாய்ந்த ஆன்மிக தலம் அமைக்கப்படும்.
* மாநிலம் முழுவதும் 125 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும்.
* 50 லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.
* இதில் Panchamrit Guarantee திட்டத்தின் கீழ் 5 முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரவிக்கப்பட்டுள்ளது.அதன்படி பீகாரில் இலவச ரேஷன் திட்டம், வீட்டுக்கு மாதந்தோறும் 125 யூனிட் இலவச மின்சாரம், ரூ.5 லட்சம் வரையிலான இலவச சுகாதார திட்டம், 50 லட்சம் கான்கிரீட் வீடுகள், தகுதியான குடும்பங்களுக்கு சமூக பாதுகாப்பு பென்ஷன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
* அனைத்து மாவட்டங்களில் திறன் மேம்பாட்டு மையம் திறக்கப்படும். மாநிலம் முழுவதும் இளைஞர்களின் திறமைகள் அடையாளம் கண்டு அதற்கேற்ப பயிற்சி கொடுத்து வேலைவாய்ப்புகளை பெற வாய்ப்பு வழங்கப்படும்.
* ‛முக்கிய மந்திரி மகிளா ரோஜ்கார் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். இந்த திட்டம் என்பது பெண்கள் சுயதொழில் தொடங்கும் வகையில் உள்ளது.
* மாநிலத்தில் ஒரு கோடி பெண்களை லட்சாதிபதியாக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை வருமானம் ஈட்டும் வகையில் வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுக்கப்படும்.
* பீகாரில் மிகவும் பின்தங்கிய வகுப்பை( Extremely Backward Classes or EBCs) சேர்ந்த குடும்பங்களுக்கு ரூ10 லட்சம் நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் கமிட்டி அமைத்து இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்கும்.
Karpoori Thakur Kisan Samman Nidhi என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகள் ஆண்க்கு பெறும் ரூ.3 ஆயிரம் நிதியுதவி ரூ.9 ஆயிரமாக அதிகரித்து வழங்கப்படும்.
* நெல், கோதுமை, பருப்பு, சோளம் உள்ளிட்டவற்றை ஒவ்வொரு பஞ்சாயத்துகளிலும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் பயிர்களுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்யும் வகையில் எம்எஸ்பி திட்டம் செயல்படுத்தப்படும்.
* விவசாய உள்கட்டமைப்புகளுக்காக ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும். இதன்மூலம் நீர்ப்பாசன வசதி, குடோன்கள், உணவு யூனிட்டுகள் அமைக்கப்படும்.
* கிராமங்களின் பொருளாதாரத்தை வளர்க்கும் வகையில் பீகார் மில்க் திட்டம் கொண்டு வரப்படுகிற. இதற்காக ஒவ்வொரு பிளாக்கிலும் பால் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும்.
* மீனவர்களுக்காக மீன் சேமிப்பு கிடங்குகள் உருவாக்கப்படும். மார்க்கெட் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் இந்த மீன் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும்.
* பீகாரில் 7 புதிய எக்ஸ்பிரஸ் சாலைகள் அமைக்கப்படும். மேலும் தற்போதைய சாலைகள் மேம்படுத்தப்படும். 3,600 கிலோமீட்டர் தொலைவிலான தண்டவாளங்கள் நவீனப்படுத்தப்படும். இவை பீகார் காதி சக்தி மாஸ்டர் பிளான் திட்டத்தில் மேற்கொள்ளப்படும்.
* 4 புதிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும். அதேபோ் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் நமோ ரேபிட் ரயில் சர்வீஸ்கள் விரிவுப்படுத்தப்படும்.
* தலைநகர் பாட்னா அரகே புதிய பசுமை விமான நிலையம் அமைக்கப்படும். டர்பங்கா, புர்னியா,பஹல்பூரில் உள்ள விமான நிலையங்கள் சர்வதேச தரத்துக்கு தரம் உயர்த்தப்படும். உள்நாட்டு விமான சேவைகள் 10 புதிய நகரங்களுக்கு விரிவு செய்யப்படும்.
* பீகாரில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் புதிய தொழிற்சாலைகள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். புதிதாக 10 தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்படும். இது வேலைவாய்ப்புகளை உருவாக்கப்படும் என்பன போன்ற பல அம்சங்கள் உள்ளன.
தமிழகத்தில் மதிய உணவுடன் பள்ளி மாணவர்களுக்கு கலை உணவு வழங்கப்படுகிறது. அதேபோல் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனை அப்படியே பாஜக கூட்டணி காப்பியடித்து தேர்தல் வாக்குறுதியாக அளித்துள்ளது. பீகாரில் கடந்த முறை பாஜக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் தனித்தனியாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டன. ஆனால் இந்த முறை அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரே தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளன. முன்னதாக எதிர்க்கட்சிகளான ‛மகாகத் பந்தன்' கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.












Click it and Unblock the Notifications