"வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை".. பீகாரில் காங். கூட்டணியின் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி! மக்கள் ஹேப்பி
பாட்னா: பீகாரில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் ஆர்ஜேடி கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். இதற்காக 20 நாட்களில் புதிதாக சட்டம் இயற்றப்பட்டு அடுத்த 20 மாதங்களில் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று கூறியுள்ளார். இது ஆட்சியை தக்க வைக்க நினைக்கும் பாஜக - நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கூட்டணிக்கு பெரிய சிக்கலாக மாறி உள்ளது.
பீகாரில் பாஜகவின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார். தற்போது பீகாரில் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.

முதற்கட்டமாக நவம்பர் 6ம் தேதியும், 2வது கட்டமாக நவம்பர் 11ம் தேதியும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு நவம்பர் 14ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
பீகாரை எடுத்து கொண்டால் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 122 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். மொத்தம் 7.42 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
பீகாரில் தற்போது பாஜக கூட்டணியில் பாஜக, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக்ஜன சக்தி (ராம்விலாஸ்), முன்னாள் முதல்வரும், தற்போதைய மத்திய அமைச்சருமான ஜிதன் ராம் மஞ்சியின் எச்ஏஎம் எனும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிகள் உள்ளன.
எதிர்க்கட்சிகளின் ‛மகாபந்தன்' கூட்டணயில் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடிஎனும் ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் லிபரேஷன் - சிபிஐஎம்எல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதுதவிர பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிசோரின் ஜன்சுராஜ், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி மற்றும் அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் பீகார் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
ஒவ்வொரு கட்சிகளும் தேர்தல் வாகுறுதிகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் எதிர்க்கட்சியான ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் முக்கிய வாக்குறுதியை இன்று அளித்தார்.
இதுதொடர்பாக அவர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, ‛‛பீகாரில் மீண்டும் எங்களின் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். ஆட்சி அமைந்த 20 நாளுக்குள் இதற்காக புதிய சட்டம் இயற்றப்படும். அதன்பிறகு அடுத்த 20 மாதத்தில் அனைத்து வீட்டிலும் ஒருவர் அரசு பணியில் இருப்பார்'' என்று கூறியுள்ளார்.
இதனால் பீகார் மக்கள் ஹேப்பியாகி உள்ளனர். பீகாரில் ஏராளமான மக்கள் கூலி தொழிலை செய்து வருகின்றனர். பலரும் வேலை வாய்ப்பு இன்றி வெளிமாநிலங்களில் புலம்பெயர்ந்து கூலி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேஜஸ்வி யாதவின் இந்த அறிவிப்பால் மக்கள் ஹேப்பியாகி உள்ளனர். இது எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு பாசிட்டிவாக பார்க்கப்படுகிறது.
அதேவேளையில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் செயல்பட்டு வரும் பாஜக - நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு இந்த அறிவிப்பு புதிய தலைவலியை ஏற்படுத்தலாம்.












Click it and Unblock the Notifications