பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பீகாரில் ஆட்சியை தீர்மானிக்குமா இந்த 0.39% வாக்குகள்? தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளி விவரம்!

Google Oneindia Tamil News

பாட்னா: கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும் 2015ம் ஆண்டு தேர்தலை ஒப்பிடும் போது, 2020ம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலில் வாக்களிப்பு 0.39% அதிகம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

Recommended Video

    Bihar-ல் ஆட்சியை தீர்மானிக்குமா இந்த 0.39% வாக்குகள்? | Oneindia Tamil

    பீகாரில் சட்டசபை தேர்தல் மூன்று கட்டமாக நடந்த பின்னர் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகளின்படி, இந்த முறை ஒட்டுமொத்தமாக வாக்களித்த வாக்காளர் எண்ணிக்கை 57.05% ஆக உள்ளது.

    இது 2015 சட்டமன்றத் தேர்தலில் 56.66% ஐ விட 0.39% அதிகம். 2019 நாடாளுமன்றத் தேர்தலில், சுமார் 54.90% ஆண்களும், 59.58% பெண் வாக்காளர்களும் தங்கள் உரிமையைப் பயன்படுத்தி இருந்தார்கள்

     பீகாரில் உஷார் நிலையில் காங்.- மேலிட தலைவர்கள் முகாம்- எம்.எல்.ஏக்களை பாதுகாக்க தீவிரம் பீகாரில் உஷார் நிலையில் காங்.- மேலிட தலைவர்கள் முகாம்- எம்.எல்.ஏக்களை பாதுகாக்க தீவிரம்

    குறைக்கப்பட்ட வாக்காளர்கள்

    குறைக்கப்பட்ட வாக்காளர்கள்

    கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுவதற்காக அமைக்கப்பட்ட அதிகமான வாக்குச் சாவடிகளுக்கு வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணம் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறினார்கள். இது தொடர்பாக மூத்த தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், "வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 2015 இல் 72,723 ஆக இருந்தது. அது 2020ல் 1,06, 515 ஆக உயர்த்தப்பட்டது. அதேபோல், சமூக வாக்குப்பதிவு மற்றும் கோவிட் வழிகாட்டுதல்களைப் பராமரிப்பதற்காக ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்காளர்களின் எண்ணிக்கை சராசரியாக 1400 லிருந்து 1000 ஆகக் குறைக்கப்பட்டது. இதுவே வாக்குப்பதிவு அதிகரிக்க காரணம்.

    வாய்ப்பை பயன்படுத்தினர்

    வாய்ப்பை பயன்படுத்தினர்

    கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் வாக்களிக்கும் பணியில் அதிகபட்ச மக்கள் பங்கேற்பை உறுதி செய்வதற்காக தீவிர வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட்டது. எந்தவொரு வாக்காளரும் வாக்களிக்காமல் இருந்துவிடக்கூடாது என்பதை உறுதிப்படுத்த நாங்கள் முயற்சித்தோம் அல்லது உரிமையைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை இழக்க கூடாது என்று பிரச்சாரம் செய்தோம்.

    பாதுகாப்பான வாக்குப்பதிவு

    பாதுகாப்பான வாக்குப்பதிவு

    சுமார் 7.3 கோடி வாக்காளர்கள் உள்ள பீகார் மாநிலத்தில் நியாயமான மற்றும் அமைதியான வாக்குப்பதிவை உறுதி செய்வதற்காக மொத்தம் 5.31 லட்சம் வாக்குப்பதிவாளர்கள் மற்றும் 1.80 லட்சம் பாதுகாப்புப் பணியாளர்கள் மக்களிடம் வாக்குபதிவை உறுதி செய்யும் பணியில் ஈடுபட்டனர். வாக்குப்பதிவு செய்பவர்கள் மற்றும் வாக்காளர்களின் பாதுகாப்பிற்காக முககவசம், கையுறைகள், வெப்ப திரையிடல், போன்றவை வழங்கப்பட்டது" என்றார்.

    2020ல் அதிகரித்த வாக்குகள்

    2020ல் அதிகரித்த வாக்குகள்

    கடந்த முறையைவிட இந்த முறை 0.39% வாக்குகள் அதிகம் பதிவாகி இருப்பது யாருக்கு சாதகமாக இருக்கும் என்கிற கேள்வி எழுகிறது. ஆளும் நிதீஷ் குமார் கூட்டணிக்காக அல்லது எதிர்க்கட்சி தலைவரான தேஜஸ்விக்கா என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்து விடும். ஏனெனில் இந்த 0.39% வாக்குகள் கூட ஆட்சியை தீர்மானிக்கும் வாக்குகளாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது.

    English summary
    Bihar Assembly Election Results 2020 Live News Updates in Tamil: The voter turnout in the 2020 state assembly polls was more compared to the 2015 election despite Covid-19 fear, the Election Commission (EC) said on Monday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X