பீகாரில் 133-148 இடங்களை வெல்லும் பாஜக கூட்டணி.. பிரசாந்த் கிஷோர் நிலை என்ன? People’s Insight சர்வே
பாட்னா: பீகார் சட்டசபைத் தேர்தலில் என்டிஏ கூட்டணி ஆட்சியே மீண்டும் அமையும் என்று People's Insight எக்ஸிட் போல் சர்வேவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் என்டிஏ கூட்டணிக்கு 133 முதல் 148 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்றும், இந்தியா கூட்டணிக்கு 87 முதல் 102 தொகுதிகள் வரை வெற்றி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் இரு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. நவம்பர் 6ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் 121 தொகுதிகளுக்குத் தேர்தல் நடந்தது. இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 122 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. காலை முதலே பொதுமக்கள் ஆர்வமாகத் தேர்தலில் வாக்களித்தனர். மாலை 5 மணி வரை 67.14 சதவிகிதம் வரை வாக்குகள் பதிவாகியுள்ளது.

மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வரிசையில் நிற்கும் வாக்காளர்கள் கடைசி நேரத்தில் வாக்களித்து வருகின்றனர். பீகார் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14ம் தேதி நடைபெறுகிறது. அங்கு ஜேடியு - பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும், ஆர்ஜேடி- காங்கிரஸின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் கடும் போட்டி இருக்கிறது.
நீண்ட ஆண்டுகளாக நிதீஷ் குமார் முதல்வராக இருப்பதால், அவர் மீது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. அதேபோல் தேஜஸ்வி யாதவின் எழுச்சியும், இளைஞர்கள் மத்தியில் அவருக்கும் இருக்கும் ஆதரவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி இருக்கின்றன.
அதன்படி People's Insight எக்ஸிட் போல் சர்வேவில் என்டிஏ கூட்டணிக்கு 133 முதல் 148 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்றும், இந்தியா கூட்டணிக்கு 87 முதல் 102 தொகுதிகள் வரை வெற்றி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சிக்கு 0-2 இடங்கள் வரை கிடைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற கட்சிகள் 3 முதல் 6 தொகுதிகள் வரை வெல்லலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் பீகாரில் மீண்டும் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஆட்சியே நீடிக்கும் என்று பார்க்கப்படுகிறது. பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகளில் என்டிஏ கூட்டணியின் ஆட்சியே அமையும் என்று கூறப்பட்டுள்ளதால், பாஜகவினர் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications