சிறுமி பாலியல் பலாத்காரம்.. 5 தோப்புக்கரணம் போதும்! "ஷாக்" தீர்ப்பு வழங்கிய பீகார் கிராம பஞ்சாயத்து
பாட்னா: பீகார் மாநிலத்தில் 5 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 5 தோப்புக்கரணம் போட்டால் போதும் என பஞ்சாயத்தில் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கட்டப் பஞ்சாயத்து அமைப்பு முறை குறித்து பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், பஞ்சாயத்தில் இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய நிலையில் இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பீகார்
பீகார் மாநிலத்தின் நவாடா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தியாவில் ஆண்டு தோறும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு பாலியில் குற்றங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களின் வரிசையில் பீகார் மாநிலமும் முன்னிலையில் உள்ளது. கடந்த 2021ம் ஆண்டில் மட்டும் இம்மாநிலத்தில் சுமார் 786 பேர் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டு பதிவான குற்றங்களை விட அதிகமாகும்.

பாலியல் பலாத்காரம்
இவ்வாறு இருக்கையில்தான் சில நாட்களுக்கு முன்னர் நவாடா கிராமத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கிராமத்தில் உள்ள இளைஞன் ஒருவன் தனது வீட்டினருகே விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமியிடம் சாக்லேட் வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய சிறுமி இளைஞனுடன் சென்றுள்ளார். இளைஞன் சிறுமியை கடைக்கு அழைத்துச் செல்லாமல் அங்கிருந்து கோழிப்பண்ணைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். பின்னர் சிறிது நேரம் கழித்து வீடு திரும்பிய சிறுமி தொடர்ந்து அழுதுகொண்டே இருந்திருக்கிறார்.

தட்டிக்கழிப்பு
இது குறித்து பெற்றோர் விசாரிக்கையில் சிறுமி தனக்கு நேர்ந்ததை மழலை மொழியில் கூறியிருக்கிறார். இதனையடுத்து பெற்றோர் தங்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் ஒன்று திரண்ட உறவினர்கள் சம்பந்தப்பட்ட இளைஞனை பிடித்து பஞ்சாயத்தில் ஒப்படைத்துள்ளனர். ஆனால் பஞ்சாயத்தில் இடம்பெற்றிருந்த ஊர் பெரியவர்கள் இதுகுறித்து பெரியதாக கண்டுகொள்ளவில்லை. சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தரப்பில் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ஊர் பெரியவர்கள் அதை காதுகொடுத்து கேட்காமல் தட்டிக்கழித்தனர்.

தோப்புக்கரணம்
பெற்றோரும் உறவினரும் விடாமல் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததையடுத்து பஞ்சாயத்து தலைவர்கள் இந்த குற்றச்சாட்டை அடியோடு மறுத்து, சிறுமியை மறைவான இடத்திற்கு கொண்டு சென்றதுதான் குற்றம் என்றும், சம்பந்தப்பட்ட இளைஞன் வேறு எதையும் செய்யவில்லை என்றும் கூறி மறைவான இடத்திற்கு குழந்தையை அழைத்துச் சென்றதற்காக ஐந்து தோப்புக்கரணம் போட்டால் போதும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதனையடுத்து அந்த இளைஞனும் 5 தோப்புகரணத்தை போட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கிருப்பவர்களால் வீடியோவாக ரெக்காட் செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளது.

விளக்கம்
தற்போது இந்த வீடியோ பரவலாக பரவிய நிலையில் சம்பவம் பலர் இந்த வீடியோவை அம்மாநில முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு அனுப்பி, இந்த குற்றத்திற்கு தண்டனை இவ்வளவுதானா? என்று கேள்வியெழுப்பியுள்ளனர். மேலும், இவ்வாறான மோசமான குற்றத்தில் ஈடுபட்டவர் தண்டிக்கப்படமாட்டாரா? எனவும் கேள்வியெழுப்பியுள்ளனர். இந்த விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, சம்பவம் குறித்து FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றமிழைத்தவர்கள் மீதும், குற்றத்தை மூடி மறைக்க முயன்றவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை கண்காணிப்பாளர் கவுரவ் மங்லா கூறியுள்ளார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications