போலி மருத்துவமனைகள் பற்றி செய்தி வெளியிட்ட செய்தியாளர்.. பீகாரில் எரித்துக் கொலை.. உடல் கண்டெடுப்பு!
பாட்னா: பீகாரில் செய்தியாளரும், தகவல் அறியும் உரிமை சட்ட போராளியுமான புத்திநாத் ஜா என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவினாஷ் ஜா என்று அழைக்கப்படும் புத்திநாத் ஜா பீகாரில் உள்ள தனியார் செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மதுபானி மாவட்டத்தை சேர்ந்த இவர் உள்ளூர் செய்திகளை தொடர்ந்து நேர்மையாக வெளியிட்டு வந்து இருக்கிறார்.
சமீபத்தில் மதுபானி மாவட்டத்தில் செயல்படும் பொய்யான மருத்துவமனைகளை கண்டுபிடித்து பட்டியல் வெளியிட்டுள்ளார். அனுமதி இன்றி இயங்கும் மருத்துவமனைகள் பட்டியலை இவர் பேஸ்புக்கில் ஆதாரத்தோடு வெளியிட்டுள்ளார்.

சீல்
இதையடுத்து உடனடியாக செயல்பட்ட மாவட்ட நிர்வாகமும், சுகாதார துறையும் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சீல் வைத்தது. அனுமதி இன்றி செயல்படும் மருத்துவமனைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. பல மருத்துவமனைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் இந்த செய்தியை வெளியிட்ட புத்திநாத் ஜாவிற்கு நிறைய மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.

மிரட்டல்
போனில் சில மருத்துவமனை நிர்வாகிகள் இவரை மிரட்டி உள்ளனர். இது நிலையில்தான் புத்திநாத் ஜா கடந்த செவ்வாய்க்கிழமை இரவு காணாமல் போனார். அன்று இரவு இவர் போன் பேசியபடி 10 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்று இருக்கிறார். அருகில் இருக்கும் மார்க்கெட் ஒன்றிற்கு சென்றவர் அங்கு ஒருவரை சந்தித்துள்ளார்.

போலீசார்
இதுவரை சிசிடிவி காட்சிகள் பதிவாகி உள்ளது. அதன்பின் இவர் எங்கே சென்றார் என்பது தெரியவில்லை. இந்த நிலையில் போலீசார் கடந்த 4 நாட்களாக இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வந்தனர். மூடப்பட்ட மருத்துவமனைகளின் நிறுவனர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவரின் போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் இவர் எங்கே இருக்கிறார் என்பதில் குழப்பம் நிலவியது.

உடல்
இதையடுத்து நேற்று அதிகாலை மர்ம உடல் ஒன்று பேட்டூன் என்ற அருகாமை கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டது. உடல் முழுக்க தீயில் கருகி மோசமான நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த உடலில் இருந்த மோதிரத்தை வைத்து அது புத்திநாத் ஜா என்று உறவினர்கள் உறுதி செய்தனர். உடலுக்கு தீ வைத்து சாலை ஓரத்தில் புத்திநாத் ஜாவை வீசியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

பீகார்
பீகாரை இந்த சம்பவம் உலுக்கி உள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். உடலில் தீ வைப்பதற்கு முன் இவர் மோசமாக தாக்கப்பட்டதற்கான அடையாளம் பிரேத பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலி மருத்துவமனைகள் குறித்து செய்தி வெளியிட்டதற்காக இவர் கொல்லப்பட்டு இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
-
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
எய்ட்ஸ் பெண் டீ குடிக்க கூப்பிட்டாராம்.. உடனே கிளம்பிய முதியவர்.. லேப்டாப்பை திறந்த போலீசுக்கு ஷாக் -
தோசைக்கல்லை எடுத்து வந்த மனைவி.. அடுத்த நொடியே வாயடைத்து போன வடமதுரை.. திடுக் திண்டுக்கல் -
பீகார் முசாபர்பூர் மருத்துவமனையில் அதிகாலை தீ விபத்து.. 10 பேர் பலி.. ICU-வில் நடந்த கொடூரம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications