பீகார் சட்டசபையில் சமஸ்கிருதத்தில் பதவியேற்ற காங்.-ன் முஸ்லிம் எம்.எல்.ஏ.!
பாட்னா: பீகார் சட்டசபையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முஸ்லிம் எம்.எல்.ஏ. சமஸ்கிருதத்தில் பதவியேற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
17-வது பீகார் சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டம் நவம்பர் 27-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இன்று முதல் நாளில் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர். முன்னாள் எம்.எல்.ஏ. ஜிதராம் மஞ்சி, தற்காலிக சபாநாயகராக இருந்து பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பீகாரில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் மைதிலி, உருது, ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பதவி பிரமாணம் ஏற்றுக் கொண்டனர். அதேபோல் அந்த அந்த பிராந்தியங்களை குறிக்கும் வகையிலான உடைகளையும் எம்.எல்.ஏ.க்கள் அணிந்து வந்தனர்.
காஸ்பா தொகுதியில் வெற்றி பெற்ற காங். எம்.எல்.ஏ. ஷகீல் அகமது கான் சமஸ்கிருதத்தில் பதவி ஏற்றார். இது தொடர்பாக ஷகீல் அகமது கான் கூறுகையில், அனைத்து மொழிகளுக்கு சமஸ்கிருதம் தாய்மொழி. சமஸ்கிருதத்தில் பதவி ஏற்றதை நான் பெருமையாக கருதுகிறேன். நமது கலாசாரம் மிகவும் அழகானது என்பதை ஓவைசியின் மஜ்லிஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் எடுத்துச் சொல்லவே சமஸ்கிருதத்தில் பதவியேற்றேன் என்றார்.












Click it and Unblock the Notifications