காங்கிரஸ்காரர்கள் - போலீஸ் மோதல்.. தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய காவல்துறை.. பரபரக்கும் பீகார்
பாட்னா: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்யக்கோரி பீகார் தலைநகர் பாட்னாவில் காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் தண்ணீரை பீய்ச்சியடித்து போராட்டக்காரர்களை விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்யக்கோரி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் , பீகார் உள்பட பல இடங்களில் இநத போராட்டம் நடந்து வருகிறது.
அந்த வகையில் பீகார் தலைநகர் பாட்னாவில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் திரண்டு ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோஷமிட்டனர். இந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சியினரை கலைந்து செல்லும்படி போலீசார கூறினர்.
ஆனால் அவர்கள் கேட்கவில்லை. இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார், போராட்டக்காரர்கள் மீ தண்ணீரை பீய்ச்சியடித்து அங்கிருந்து விரட்டினர்.


Click it and Unblock the Notifications
