நள்ளிரவில் பரபர.. 5 முறை பறந்த போன் கால்.. காத்திருந்த லாலு பிரசாத் யாதவ்.. கைவிரித்த நிதிஷ்குமார்?
பாட்னா: பீகார் மாநிலத்தில் இப்போது மிகப் பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், நிதிஷ்குமார் கூட்டணியை முறித்துக் கொள்ளாமல் இருக்க லாலு பிரசாத் யாதவ் எடுத்த கடைசிக்கட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
பீகார் மாநிலத்தில் இப்போது ஜேடியு- ஆர்ஜேடி- காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. அங்கே ஜேடியு தலைவர் நிதிஷ்குமார் முதலமைச்சராக இருக்கிறார்.

அவர் இதற்கு முன்பு நீண்ட காலமாக பாஜகவுடன் கூட்டணியை வைத்திருந்தார். இருப்பினும், கடந்த 2022இல் தான் அவர் திடீரென பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்து இந்த கூட்டணியை அமைத்தார். இருப்பினும், முதல்வர் பதவியில் தொடர்ந்தார்.
பீகார் குழப்பம்: இந்தச் சூழலில் பீகார் மாநிலத்தில் மீண்டும் இப்போது அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நிதிஷ்குமார் இந்த கூட்டணியில் இருந்து வெளியேறி மீண்டும் பாஜக கூட்டணியில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை அவர் பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வராகப் பதவியேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கே மிகப் பெரிய குழப்பம் நிலவி வருகிறது. இதற்கிடையே பீகார் அரசியல் நெருக்கடி குறித்து இப்போது மற்றொரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
கடைசிக்கட்ட பரபரப்பு: அதாவது பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறி மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே நிதிஷ்குமாரின் முடிவை மாற்ற லாலு பிரசாத் அவரை தொடர்பு கொள்ள முயன்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் ஐந்து முறை நிதிஷ்குமாருக்கு லாலு பிரசாத் யாதவ் தரப்பு கால் செய்ததாக அம்மாநில வட்டாரங்கள் கூறுகின்றனர்.
நிதிஷ்குமாரின் அலுவலகத்திற்கு மட்டுமின்றி அவரது லேண்ட் லைனுக்கும் லாலு பிரசாத் யாதவ் கால் செய்துள்ளார். லாலு பிரசாத் யாதவ் மொத்தம் ஐந்து முறை கால் செய்துள்ளார். இருப்பினும், பீகார் முதல்வரும் ஜேடியு தலைவருமான நிதிஷ்குமார் லாலு பிரசாத் யாதவிடம் பேச மறுத்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அரசியல் குழப்பம்: பீகார் மாநிலத்தில் இப்போது மிகப் பெரிய அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. அங்கே நிதிஷ்குமார் மீண்டும் பாஜகவுடன் கை கோர்க்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த தகவல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதை நிதிஷ்குமார் தரப்பு உறுதி செய்யவில்லை. அதேநேரம் பாஜக உடனான கூட்டணி குறித்த தகவல்களை நிதிஷ்குமார் மறுக்கவும் இல்லை. இதனால் பீகார் அரசியலில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.
இதற்கிடையே இந்த குழப்பத்தை நிதிஷ்குமார் போக்க வேண்டும் என்றும் அவரது திட்டம் என்ன என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் ஆர்ஜேடி எம்பி மனோஜ் ஜா வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. நிதிஷ்குமார் மீண்டும் பாஜவுக்குச் சென்றால் அது பீகார் மாநிலத்தில் மட்டுமின்றி.. ஒட்டுமொத்தமாக எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணியில் மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும்.
ஏனென்றால் இந்தியா கூட்டணியை உருவாக்கக் காரணமாக இருந்தவரே இந்த நிதிஷ்குமார் தான். அவர் பாட்னாவில் நடத்திய முதல் கூட்டத்தில் தான் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் வந்தது. அப்படியிருக்கும் போது திடீரென அவர் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறினால் அது எதிர்க்கட்சிகளுக்குப் பெரிய இழப்பாகவே இருக்கும்.












Click it and Unblock the Notifications