Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசியல் சித்தாந்தம் vs தேர்தல் வியூகம்! பீகார் தேர்தலில் பாஜக வென்றது இப்படித்தான்!

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகார் தேர்தலில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த தேர்தலில் வெற்றிக்கு நெருக்கமாக வந்தபோது எவ்வளவு வாக்கு சதவிகிதத்தை ராஷ்டிரிய ஜனதா தளம் பெற்றிருந்ததோ, அதே அளவுக்கு இந்தமுறையும் வாக்குகளை பெற்றிருக்கிறது. இருப்பினும் கடும் தோல்வியை சந்திருக்கிறது. இது எப்படி சாத்தியமானது?

இந்த தேர்தலில் வெற்றிப்பெற பாஜக முக்கியமான பார்முலாவை பின்பற்றியிருக்கிறது. வழக்கமாக ஒரு கட்சி தேர்தலில் வெற்றிப்பெறுகிறது எனில், போட்டியளரை விட கூடுதலாக ஒரு வாக்கு பெற்றால் கூட போதும். இருவர் மட்டும் போட்டியிடுகிறார் எனில் வெற்றி இப்படித்தான் தீர்மானிக்கப்படும். ஆனால், கூட்டணி இருக்கும்போது குறிப்பிட்ட அளவு சதவிகிதத்தை பெற்றால்தான் வெற்றியை நெருங்க முடியும். இந்த குறிப்பிட்ட அளவு வாக்கு சதவிகிதத்தை பாஜக தற்போது உயர்த்தியிருக்கிறது.

Bihar Election 2025 2025 Bihar Election Results 2025 2025

பாஜக செய்த சம்பவம்

உதாரணமாக கடந்த 2020ம் ஆண்டு பீகார் சட்டமன்ற தேர்தலை எடுத்துக்கொள்வோம். ஒரு வேட்பாளர் குறைந்தபட்சம் 35% வாக்குகளை பெற்றிருந்தால் அவர் பெற்றி பெற்றிருப்பார். ஆனால் இந்த முறை இந்த சதவிகிதத்தை 47.8% ஆக பாஜக உயர்த்தியுள்ளது. கடந்த தேர்தலில் என்டிஏ கூட்டணியின் வாக்குகள் சிதறியிருந்தன. இந்த முறை இந்த வாக்குகள் ஒன்று சேர்ந்ததால் பாஜகவுக்கு வெற்றி சாத்தியமாகியிருக்கிறது.

வாக்குகள் சிதறியது எப்படி?

2025 தேர்தல் முடிவுகளை புரிந்துக்கொள்ள 2020 தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்வது அவசியம். என்டிஏ மற்றும் மகாபந்தன் என இரண்டு கூட்டணிகள் 2020ல் பிரதான கட்சிகளாக இருந்தன. 2020 என்டிஏ வெற்றி பெற்றாலும், மகாபந்தன் கூட்டணிக்கும், என்டிஏவுக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் வெறும் 0.03% தான். காரணம் வாக்கு பிரிப்பு.

வாக்கு பிரிப்பு

அதாவது, சிராக் பாஸ்வானின் LJP கட்சி கடந்த 2020ல், ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் சண்டை போட்டு விட்டு வெளியே வந்துவிட்டது. சைஸில் இந்த கட்சி சின்னதாக இருந்தாலும் அதற்கென சில குறிப்பிட்ட வாக்கு சதவிகிதத்தை இக்கட்சி கொண்டிருக்கிறது. இக்கட்சி 135 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. எனவே வாக்குகள் கணிசமாக பிரிந்தன. அப்புறம் என்ன, 2020 தேர்தல் முடிவில் இக்கட்சி 5.66% வாக்குகளை பெற்றது. இந்த வாக்குகள் அனைத்தும் என்டிஏ கூட்டணியின் வாக்குகள்தான். இந்த 5.66% வாக்குகள் காரணமாக என்டி கூட்டணி சுமார் 28 தொகுதிகளில் தோல்வியடைந்தது.

இரண்டு முக்கிய கட்சிகள்

LJP கட்சி இப்படி எனில், ராஷ்டிரிய லோக் சமதா கட்சி (RLSP) கட்சியும் முடிந்த அளவுக்கு வாக்குகளை பிரித்தது. இக்கட்சி 2020 தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் கிராண்ட் டெமாக்ரடிக் செக்குலர் ஃபிரண்ட் உடன் கூட்டணி வைத்தது. தேர்தல் முடிவில் சுமார் 3.5% வாக்குகளை இக்கட்சி பெற்றிருந்தது. இதுவும் முன்னதாக குறிப்பிட்டிருந்த 28 தொகுதிகளில் என்டிஏ தோல்விக்கு காரணமாக இருந்தது. மொத்தமாக பார்த்தால் 6.1% வாக்குகள் பிரிந்ததால் சுமார் 65 தொகுதிகளில் வெற்றி வித்தியாசம் மிகவும் குறைவாக இருந்தது.

என்டிஏ வென்றது எப்படி?

சரி 2025 தேர்தலுக்கு வருவோம். இந்த தேர்தலில் சிராக் பாஸ்வானின் LJP கட்சி மற்றும் ராஷ்டிரிய லோக் சமதா கட்சி (RLSP) ஆகியவை என்டிஏ கூட்டணியில் இணைந்தன. எனவே இயல்பாகவே என்டிஏவின் வாக்குகள் 46.6% ஆக அதிகரித்தது. ஆனால் மறுபுறம் மகாபந்தன் கூட்டணியின் வாக்கு சதவிகிதம் பெரிய அளவுக்கு உயரவில்லை. 37.9% ஆகவே இருந்துவிட்டது. இதனால் கடந்த தேர்தலில் 0.03% ஆக இருந்த வித்தியாசம் இந்த முறை 10% ஆக மாறியது. எனவே மகாபந்தன் கூட்டணியால் பெரிய அளவுக்கு வெற்றிப்பெற முடியவில்லை.

சிராக் பாஸ்வானின் LJP கட்சி மற்றும் ராஷ்டிரிய லோக் சமதா கட்சி (RLSP) ஆகியவை என்டிஏ கூட்டணியில் இணைந்ததால், வேட்பாளர்கள் வெற்றி பெற 47.8% வாக்குகள் தேவை என்கிற நிலைக்கு தள்ளப்பட்டனர். எனவே நேரடி போட்டியிருந்த இடங்களில் மகாபந்தன் கூட்டணியால் வெல்ல முடியவில்லை.

  • 2020ல் நேரடி போட்டி இருந்தபோது RJD 40, JD(U) 21 என்று வெற்றி பெற்றன
  • 2025ல் நேரடி போட்டி இருந்தபோது RJD 9, JD(U) 50 என்று வெற்றி பெற்றன

இப்படித்தான் பீகாரில் அரசியல் சித்தாந்தத்தை விட சிறப்பான வியூகம் வகுப்பே வெற்றியை தீர்மானித்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+