BIHAR SIR: 52 லட்சம் வாக்காளர்கள் பெயர் பட்டியலிலிருந்து நீக்கம்.. தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு
பாட்னா: பீகாரில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக வாக்காளர் பெயர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் சுமார் 52 லட்சம் வாக்காளர்களின் பெயர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
நீக்கப்பட்டவர்களில் பலர் உயிரிழந்திருக்கின்றனர், வேறு மாநிலத்திற்கு இடம் பெயர்ந்திருக்கின்றனர், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்துள்ளதாக ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

52 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்படும் என்று ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், இன்று இது தொடர்பான முழு அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது.
அதில் இன்றைய தேதி வரை 98.01 சதவீத வாக்காளர்கள் இந்த சிறப்பு தீவிர திருத்தப் (SIR) பணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த திருத்தப் பணியின் மூலம் சுமார் 20 லட்சம் வாக்காளர்கள் உயிரிழந்திருக்கின்றனர் என்றும் 28 லட்சம் பேர் நிரந்தரமாக முகவரி மாறிச் சென்றவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், 7 லட்சம் வாக்காளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்திருப்பதும், 1 லட்சம் வாக்காளர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. சுமார் 15 லட்சம் வாக்காளர் படிவங்கள் திரும்பப் பெறப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயல்பாட்டில் மொத்தம் 7.17 கோடி வாக்காளர் படிவங்கள் பெறப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. இது மொத்த எண்ணிக்கையில் 90.89% ஆகும்.
பீகாரில் 22 வருடங்களுக்குப் பிறகு இதுபோன்ற திருத்தப் பணி நடைபெறுவது இதுவே முதல் முறை. தகுதியற்ற, இரட்டைப் பதிவுகள் மற்றும் இல்லாத வாக்காளர்களை நீக்குவதன் மூலம் வாக்காளர் பட்டியலைச் சுத்தப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் என்று தேர்தல் ஆணையம் கூறி வருகிறது.
இந்த திருத்த பணியின்போது ஆதார், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரேஷன் கார்டு போன்ற ஆவணங்கள் காட்டப்பட்டாலும் அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று தேர்தல் ஆணைய முன்பு கூறியிருந்தது. ஆனால் இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு சென்ற பின்னர், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மேற்குறிப்பிட்ட ஆவணங்களையும் பரிசீலிக்க கூறியிருந்தது.
திருத்தப்பட்டியல் இஸ்லாமிய மக்களை குறி வைத்தே மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. மேற்கு வங்கத்தின் எல்லையை ஒட்டி பகுதியில் இஸ்லாமியர்கள் அதிக அளவில் இருக்கின்றனர். பான்டா போன்ற நகரங்களில் ரேஷன் அட்டையை ஆதாரமாக ஏற்றுக்கொள்ளும் தேர்தல் ஆணையம், எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்களிடம் இந்த ஆதாரங்கள் போதாது என்று கூறியிருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்த திருத்த நடவடிக்கையை பாஜக வரவேற்றிருக்கும் நிலையில், அதன் கூட்டணியில் உள்ள ஜேடியு எம்பி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications