Bihar SIR: வரைவு வாக்காளர் பட்டியல்.. ஆட்சேபனை தெரிவிக்காத அரசியல் கட்சிகள்! என்ன நடக்கிறது பீகாரில்?
பாட்னா: பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், வாக்காளர் பட்டியலை முழுமையாகத் திருத்துவதற்காக இந்தியத் தேர்தல் ஆணையம் 'சிறப்புத் தீவிர திருத்த' நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் அடிப்படையில் வெளியான வரைவு வாக்காளர் பட்டியல் மீது எந்த அரசியல் கட்சிகளும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.
சிறப்பு தீவிர திருத்தம் எனில், பழைய வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தாலும், புதிய பட்டியல் தயாரிப்பின் போது அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. மாறாக புதியதாக பட்டியல் உருவாக்கப்படும். இதற்காக வீடு வீடாக தேர்தல் அதிகாரிகள் வந்து ஆய்வை மேற்கொள்வார்கள். போதுமான ஆவணங்களை காட்டிய பின்னர்தான் புதிய பட்டியலில் உங்கள் பெயரை அவர்கள் இணைப்பார்கள்.

பிரச்சனை என்னவெனில் குறைந்த காலத்தில் அவசர அவசரமாக இந்த சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்றும், இதனால் பலர் வாக்காளர் பட்டியலிலிருந்து விடுபட்டுபோகலாம் எனவும் எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இந்நிலையில் ஆக.1ம் தேதி 'சிறப்புத் தீவிர திருத்த' நடவடிக்கையின் ஒரு பகுதியாக வரைவு வாக்காளர் பெயர் பட்டியல் வெளியானது. பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், ஏதேனும் தவறு இருப்பினும் அது குறித்து தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு வரலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அக்.1 வரை இதற்காக கால வரையறை கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றைய தேதி வரையில், எந்த அரசியல் கட்சிகளும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என இந்திய தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications