பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சி.. என்டிஏ 202 தொகுதியில் வெற்றி! 35 தொகுதியில் முடங்கிய காங்., கூட்டணி
பாட்னா: பீகார் மாநிலத்தின் 243 தொகுதிகளுக்கும் நவ.6 மற்றும் நவ.11 என இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்தது.கடந்த 2020 தேர்தலை காட்டிலும் இந்த ஆண்டு தேர்தலில் மக்கள் அதிக அளவில் வாக்களித்திருந்தனர். இதனால் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று தேஜஸ்வி யாதவ் எதிர்பார்த்திருந்தார். ஆனால் களம் மாறியிருக்கிறது. குறிப்பாக என்டிஏ கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி 35 தொகுதிகளில் முடங்கி உள்ளது.
தபால் வாக்குகள் எண்ணிக்கையில் நிதிஷ்குமார் தலைமையிலான என்டிஏ கூட்டணி 132 இடங்களிலும், ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைமையிலான மகாபந்தன் கூட்டணி 66 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 3 இடங்களிலும் முன்னிலை பெற்றது.

அதேபோல மின்னணு வாக்குப்பெட்டியில் பதிவான வாக்குகள் எண்ணிக்கையில் என்டிஏ கூட்டணி 204 இடங்களிலும், மாகபந்தன் கூட்டணி 33 இடங்களிலும் முன்னிலை பெற்றது.
- பாஜக-92
- ஐக்கிய ஜனதா தளம்-82
- ராம் விலாஸ் பஸ்வானின் LJPRV கட்சி - 21
- இந்துஸ்தான் அவாம் மோர்சா - 4
- ராஷ்டிரிய லோக் மோர்சா - 4
என என்டி கூட்டணி கட்சிகள் முன்னிலை வகித்தது. அதேபோல மகாபந்தன் கூட்டணியை பொறுத்தவரை,
- ஆர்ஜேடி - 26
- காங்கிரஸ் - 4
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல் - 4
- சிபிஎம் - 1
தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது.தேபோல வாக்கு சதவிகிதத்தை பொறுத்த அளவில்
- ஐக்கிய ஜனதா தளம் - 18.5%
- பாஜக - 22%
- ராம் விலாஸ் பஸ்வானின் LJPRV கட்சி - 5.5%
- ஆர்ஜேடி - 23%
- காங்கிரஸ் - 8%
காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 122 தொகுதிகளை கைப்பற்றும் கட்சி ஆட்சியை அமைக்கலாம். கடந்த தேர்தலை காட்டிலும் இந்த முறை அதிக அளவில் மக்கள் வாக்களித்துள்ளனர். வழக்கமாக வாக்கு எண்ணிக்கை அதிகமாக இருந்தால் ஆட்சி மாற்றம் நடக்கும் என்கிற கணிப்பு இருந்தது.இதனால் தேஜஸ்வி யாதவ் குஷியாக இருந்தார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
இன்று இரவு 11 மணிக்கு தேர்தல் முடிவு முழுவதுமாக வெளிவந்தது. இதில் பாஜக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஆட்சியை பிடிக்க 122 தொகுதிகள் வேண்டும் என்ற நிலையில் பாஜக கூட்டணி 202 தொகுதிகளை கைப்பற்றி அசத்தியது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அதிகபட்சமாக பாஜக 89 தொகுதியிலும், நிதிஷ் குமாரின் ஜேடியூ கட்சி 85 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதன்மூலம் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சியை தக்க வைத்துள்ளது.
அதேவேளையில் எதிர்க்கட்சிகளின் ‛மகாகத்பந்தன்' கூட்டணி படு தோல்வியடைந்துள்ளது. இந்த கூட்டணி மொத்தம் 35 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி எனும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி 25 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் ‛மகாகத்பந்தன்' கூட்டணி இந்த தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளது. இதுதவிர, அசாதுதீன் ஓவைசியின் கட்சியை சேர்ந்த ஏஐஎம்ஐஎம் கட்சியினர் 5 தொகுதிகளிலும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
மேலும் தேஜஸ்வி யாதவை முதல்வராக முன்னிறுத்தி ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணியான மகாபந்தன் கூட்டணியும், நிதிஷ்குமாரை முதல்வராக முன்னிறுத்தி பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் என்டிஏ கூட்டணியும், தனியாக பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும், அசாதுதீன் ஓவைசியின் கிராண்ட் டெமாக்ரடிக் கூட்டணியும் களத்தில் இருந்தன.
தேஜஸ்வி யாதவை பொறுத்த அளவில் அவர் ரகோபூர் தொகுதியில் போட்டியிட்டிருந்தார். இந்த தொகுதி ஆர்ஜேடியின் கோட்டை. அதில் அவர் வெற்றி பெற்றார். முதலில் பின்னடைவை அவ்வப்போது சந்தித்து கடையில் வெற்றி பெற்றார்.












Click it and Unblock the Notifications