பீகாரில் சர்ச்சையை கிளப்பும் இந்திய தேர்தல் ஆணையம்! என்ன பிரச்சனை? காரணம் இதுதான்
பாட்னா: பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் செய்யும் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருக்கிறது. ஆனால் இது பல்வேறு சலசலப்புகளை கிளப்பியிருக்கிறது. ஏன் இந்த பிரச்சனை? பீகாரில் என்ன நடக்கிறது என்பதை விவரிக்கிறது இந்த செய்தி.
பீகார் சட்டமன்றத் தேர்தல்கள் இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளன. இந்த பின்னணியில், இந்திய தேர்தல் ஆணையம் மாநில வாக்காளர் பட்டியலை சிறப்பு திருத்தும் பணியை மேற்கொண்டிருக்கிறது.

வாக்காளர் பட்டியலில் உள்ள அனைத்து தகுதியான குடிமக்களின் பெயர்களும் சேர்க்கப்படுவதை உறுதி செய்வதற்காகவும், இதன் மூலம் அவர்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெற வேண்டும் என்பதற்காகவுமே இந்த சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
தகுதியற்ற வாக்காளர்கள்
மேலும், "தகுதியற்ற வாக்காளர்கள்" வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதைத் தடுப்பதையும் தேர்தல் ஆணையம் நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறது.
ஆனால் தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்திருக்கின்றன. வாக்காளர் பட்டியல் திருத்தம் என்கிற பெயரில் பலரின் வாக்கு உரிமையை தேர்தல் ஆணையம் பறிக்க முயற்சிக்கிறது என்பதுதான் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக இருக்கிறது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு நியாயமான காரணங்கள் இருப்பதாகவே தெரிகிறது.
இந்திய தேர்தல் ஆணையம்
அதாவது, செப்டம்பர் மாதம் 30ம் தேதியுடன் இறுதி வாக்காளர் பெயர் பட்டிலை தேர்தல் ஆணயைம் வெளியிட இருக்கிறது. இது மிக குறைவான காலக்கட்டம். இதற்குள் நிச்சயம் பட்டியலை வெளியிட முடியாது. அப்படியும் வெளியாகிறது எனில், அதில் பல பெயர்கள் விடுபட்டிருக்கும் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்திருக்கின்றன.
போதுமான ஆதாரங்கள்
அதாவது பீகாரில், குறிப்பாக 'சீமாஞ்சல்' பகுதியில் வசிக்கும் மக்களிடம், தங்கள் குடியுரிமையை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் கிடையாது. போதாத குறைக்கு இந்திய தேர்தல் ஆணையம், ஆதார் அட்டை மற்றும் பேன் கார்டு போன்றவற்றை குடியுரிமைக்கான ஆதாரமாக ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று தெரிவித்துவிட்டது. எனவே, போதுமான ஆதாரங்கள் இல்லாததால், இந்த பகுதி மக்கள் தங்கள் வாக்குரிமையை இழக்க நேரிடலாம். இது அவர்களின் குடியுரிமையை இழப்பதற்கு ஈடானதாக பார்க்கப்படுகிறது.
எதிர்க்கட்சிகளின் விமர்சனம்
'சீமாஞ்சல்' பகுதி என்பது பூர்ணியா, கட்டிஹார், அராரியா, கிஷன்கஞ்ச் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய பகுதி. இந்த பகுதிகள் மேற்கு வங்காளம் மற்றும் நேபாளத்துடன் சர்வதேச எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது. இங்கு முஸ்லிம் மக்கள் தொகை அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.
இந்தியாவை பொறுத்தவரை, குடிமக்களை வாக்காளர்களாக மாற்றுவது என்பது சிக்கலான நடைமுறை. இந்த பணியை தேர்தல் நேரத்தில் பீகாரில் இந்திய தேர்தல் ஆணையம் கையில் எடுத்திருக்க கூடாது என்பதுதான் எதிர்க்கட்சிகளின் முக்கியமான விமர்சனமாக இருக்கிறது.
இந்திய குடிமகன், ஆனால் வாக்காளர் கிடையாது
தற்போது தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருக்கும் செயல்முறையானது, அசாம் மாநிலத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட, 'குடியுரிமை திருத்தச் சட்டம்-தேசிய குடிமக்கள் பதிவேடு' செயல்முறையை நினைவூட்டுவதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்திருக்கின்றன.
தேசிய குடிமக்கள் பதிவேடு செயல்முறையானது, இந்தியாவின் குடிமக்களிடமிருந்து, குடிமக்களாக இல்லாதவர்களை வேறுபடுத்துகிறது. அதேபோல தற்போது தேர்தல் ஆணையம், வாக்காளர்களிடமிருந்து, வாக்காளர் அல்லாதவர்களை வேறுபடுத்துகிறது. இப்போது கேள்வி என்னவெனில், ஒரு இந்திய குடிமகனை, அவர் வாக்காளர் கிடையாது என்று எப்படி கூற முடியும்? என்பதுதான்.
முக்கிய கேள்வி
"ஒரு குடிமகன் தகுதியற்ற வாக்காளராக அறிவிக்கப்பட்டால் என்ன விளைவுகள் ஏற்படும்? இந்த அறிவிப்பு அவர்களை சந்தேகத்திற்குரிய குடிமக்களாக கருதுமா? குடிமக்களாக அவர்களின் சட்டப்பூர்வ நிலை என்னவாகும்? இந்த கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் இல்லை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்திய அரசின் செயல்பாட்டு முறையைப் பார்க்கும்போது, இவர்கள் தடுத்து வைக்கப்பட்டு நாடு கடத்தப்பட வாய்ப்புள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் முஸ்லிம் விரோத கருத்துக்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளித்து, நாட்டில் சிறுபான்மையினரை நிரந்தரமாக பாதிக்கப்படக்கூடிய மக்களாக மாற்றும்" என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்திருக்கின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications