இந்த மனசுதான் கடவுள்! பீகார் ரயிலில் பிச்சையெடுத்த பெண்ணை திருமணம் செய்த இளைஞர்! தங்கமனசுக்காரர்!
பாட்னா: பீகாரில் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பெண்ணை இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் வைரலாகி வருகிறது. அந்த பெண்ணிடம் ரயிலில் வந்தவர்கள் தவறாக நடந்து கொண்டதை அடுத்து அவருக்கு பாதுகாப்பாக இருந்த அந்த இளைஞர், இறுதியில் தனது வீட்டுக்கே அழைத்துக் கொண்டு சென்றுவிட்டாராம்.
பிச்சை எடுப்பவர்களை ஏளனமாகவும் கேவலமாகவும் பார்க்கும் இந்த சமூகத்தில் அவர்களும் மனிதர்கள், அவர்களது இயலாமையால்தான் பிச்சை எடுக்கிறார்கள் என்பதை உணர்ந்து இந்த இளைஞர் நடந்து கொண்டதும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பக்ஸரைச் சேர்ந்த கோலு யாதவ். இவர் ரயில் பயணத்தின் போது பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணை பார்த்தார். அந்த பெண் இளம் வயது என்பதால் அவரிடம் சில பயணிகள் அவளிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், தேவையற்ற விதமாகப் பார்த்ததாகவும் தெரிகிறது.
இதனால் அந்த பெண் சங்கடமடைந்தார். பின்னர் அந்த பெண்ணுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணிய கோலு யாதவ், அவளைத் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தார்.
பக்ஸருக்குத் திரும்பியதும், கோலு யாதவ் அந்த பெண்ணின் நிலையைப் பற்றி தனது பெற்றோரிடம் விளக்கினார். அந்த பெண் எங்கிருந்து வந்தாள், அவளின் கஷ்டங்கள் என்ன என்று புரிந்து கொண்ட குடும்பத்தினர், அவளுக்கு அடைக்கலம் கொடுக்கச் சம்மதித்தனர்.
நாட்கள் செல்லச் செல்ல, பெற்றோரின் முழு சம்மதத்துடன், கோலு யாதவ் அந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதியின் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல பரவி, பலரின் கவனத்தை ஈர்த்தன. ரெடிட் தளத்தில், "இது ஒரு அழகான திரைப்படம் போல இருக்கிறது" என்ற தலைப்புடன் பகிரப்பட்ட இந்தப் படங்களைப் பார்த்த பலரும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்தனர்.
ஒரு பயனர், "அக்ஷய் குமார் இப்போது இந்தக் கதையைப் படமாக எடுப்பார்" என்று எழுதியிருந்தார். இன்னொருவர், "அவர் அந்தப் பெண்ணின் வாழ்க்கையைச் சரி செய்ததுடன், தங்கள் இருவரின் வாழ்க்கையையும் ஒன்றிணைத்தார். இது ஒரு பாலிவுட் படம் போலவே இருக்கிறது" என்று ஆச்சரியப்பட்டார்.
இன்னும் சிலர் ஜோடி பொருத்தம் நன்றாக இருக்கிறது என கருத்து பதிவிட்டுள்ளனர். யாசகம் கேட்போர் நம்மை தொட்டு யாசகம் கேட்டால் கூட அவர்களை பார்வையாலேயே சுட்டெரித்து விடுகிறோம். ஆனால் இந்த இளைஞருக்கு எத்தனை பெரிய மனம் வேண்டும்.
அதை விட அவரது பெற்றோர் இந்த பெண்ணை ஏற்றுக் கொள்ள எவ்வளவு பெரிய மனசு தேவை? காதலித்தாலே ஜாதி, அந்தஸ்து பார்த்து வரும் இந்த காலத்தில் பிச்சையெடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவருக்கு புது வாழ்வு கொடுத்த கோலு யாதவுக்கும் அந்த பெண்ணுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளலாம். வாழ்த்துக்கள் சகோதரா! இல்லறம் நல்லறமாகட்டும்!
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications