Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பீகார்: நேற்று, இன்று, நாளை.. மக்களாட்சி டூ மன்னராட்சி! அரசியலும், மதமும்!

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே அம்மாநிலம் கவனம் பெற்றிருக்கிறது. அரசியலை தாண்டி, பீகாரின் வரலாறு உள்ளிட்ட விஷயங்களை 'ஒன் இந்தியா தமிழ்' தொகுத்து வழங்கி வருகிறது. இதற்கு முன்னர் பீகாரில் மகாஜனபதங்கள் தோன்றியது பற்றி பேசியிருந்தோம். இன்று அது எப்படி அரசாட்சியாக வளர்ந்தது என்பது பற்றியும், பௌத்தம், சமண மதங்களின் தொடக்கம் பற்றியும் பார்ப்போம்.

பீகாரில் வேளாண் தொழில் செழிப்படைந்த பின்னர் மக்கள் தங்களின் மற்ற தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள தொடங்குகின்றனர். உதாரணத்திற்கு மக்கள் தச்சு, மண்பாண்ட உள்ளிட்ட தொழிலில் கைதேர்கின்றனர். வேளாண் துறையை தொடர்ந்து மற்ற துறைகளிலும் உற்பத்தியானது உபரி என்கிற நிலைக்கு செல்கிறது. இங்குதான் சொத்து உருவானது. சொத்தை பாதுகாக்க வம்சங்கள் உருவாக்கப்பட்டன. வம்சங்கள்தான பின்னாட்களில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது.

Bihar Election 2025 Bihar

பீகாரில் குறுநில மன்னர்கள்

ஆங்காங்கே வாழ்ந்த மக்கள் குழுக்களாக, வம்சமாக உருவானதைத்தான் மகாஜனபதங்கள் என்று கூறுகிறார்கள். மொத்தம் 16 மகாஜனபதங்கள் உருவாகின.

  • அங்கம்
  • மகதம்
  • காசி
  • கோசலம்
  • வஜ்ஜி
  • மல்லம்
  • சேதி
  • வத்சம்
  • குரு
  • பாஞ்சாலம்
  • மத்சயம்
  • சூரசேனம்
  • அஸ்மகம்
  • அவந்தி
  • காந்தாரம்
  • காம்போஜம்

இவைத்தான் அந்த 16 மகாஜனபதங்களாகும். ஒருவகையில் இதை குறுநில மன்னராட்சி என்றும் சொல்லலாம். இதில் மகதம் பிரிவை சேர்ந்த குறுநில மன்னர்கள் மற்ற பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருதில் தீவிரமாக இருந்தனர்.

ஆட்சியை விரிவாக்கும் முறை

அவர்கள் மற்ற 15 பகுதிகளின் மன்னர்களுடன் போரிட்டனர். இதில் வெற்றியும் பெற்றனர். இதனை தொடங்கி வைத்தவர் மகத மன்னரான 'பிம்பிசாரர்'தான். இவர் தனது ஆட்சியை விரிவுபடுத்த 3 முக்கிய முறைகளை கையாண்டார்.

1. திருமணம்
2. நட்பு
3. போர்

தொடர் வெற்றி

இவர் எடுத்த முதல் நடவடிக்கை கோசல மன்னரின் மகளை திருமணம் செய்துக்கொண்டதுதான். இந்த திருமணம் கோசலம்-மகதம் என இரண்ட குறுநில மன்னருக்கு இருந்த மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வந்தது. இவருக்கு பிறகு இவரது மகன் 'அஜாதசத்ரு' ஆக்ரோசமாக தனது எல்லையை விரிவுபடுத்த தொடங்கினார். இவர் 'வஜ்ஜி' குறுநில மன்னரை தோற்கடித்து அதன் ஆட்சி பகுதியை கைப்பற்றினார்.

தலைநகர் மாற்றம்

அஜாதசத்ருவின் மகன் 'உதயின்' தனது தாத்தா மற்றும் தந்தையின் வெற்றியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றார். அதாவது மகத ஆட்சியின் தலைநகரை ராஜகிருகத்திலிருந்து பாடலிபுத்திரத்திற்கு மாற்றினார். பாடாலிபுரம்தான் இன்றைய 'பாட்னா'. வர்த்தகத்திற்கு இந்த இடம்தான் சரியான என்பதை உணர்ந்து அவர் எடுத்த நடவடிக்கை, மகத வம்சத்தை மேலும் விரிவாக்கம் செய்தது. வணிகம் கொடி கட்டி பறந்தது.

அதன் பின்னர் 'சிசுநாகர்' வசம்த்தை தோற்கடித்தைது மகதத்திற்கும்-சிசுநாகர் வம்சத்திற்கும் இடையேயான 100 ஆண்டு போரை முடிவுக்கு கொண்டு வந்தார்.

மதங்களின் எழுச்சி

இந்த காலத்தில்தான் பீகாரில் மதங்கள் ஆழமாக வேரூன்றி வளர தொடங்கின. குறிப்பாக பௌத்தம் மற்றும் சமணம். மகத காலத்தில் வேத மதங்களின் தாக்கமும் இருந்தது. ஆனால் வேத சடங்குகள் சிக்கலானவை. ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே அந்த சடங்கை செய்ய வேண்டும். மற்ற பிரிவினரால் அதை செய்ய முடியாது. அதேபோல அந்த சடங்குகள் ரொம்பவும் காஸ்ட்லியாகவும் இருந்திருந்தது. எனவே சாமானிய மக்களால் இந்த மதத்தை பின்பற்ற முடியவில்லை.

வேத மதத்திற்கு மாற்று

இன்னொரு விஷயம் இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், மதகம் பலமாக வளர்ந்ததால், சத்திரியர்கள், வைசியர்கள் இந்த அமைப்பில் மிகுந்த கவனம் பெற்றிருந்தனர். காரணம் அரசாட்சியை விரிவாக்க போர் வீரர்கள் முக்கியம். இந்த பணியை சத்திரியர்கள் செய்தனர். அதேபோல வணிகமும் முக்கியம். இதை வைசியர்கள் மேற்கொண்டனர். எனவே வேத மதத்தை சேர்ந்த பிராமணர்களுக்கு போதுமான முக்கியத்துவம் கிடைக்கவில்லை.

பௌத்தம்

மட்டுமல்லாது மேலே சொன்ன இரண்டு பிரிவினரும் வேத மத சடங்குகளை கேள்வி எழுப்பினர். இதெல்லாம் சேர்ந்து புதிய மதங்கள் தோன்ற வழிவகுத்தது. அந்த மதத்தின் பெயர்தான் பௌத்தம் மற்றும் சமணம். இது வணிகர்களுக்கு ஏற்றதாக இருந்தது. இரண்டு மதங்களும் உயிர் கொல்லாமை, அகிம்சை உள்ளிட்ட வழிகளை போதித்தது. வேத காலத்தில் அப்போது உயிர் பலி முறை இருந்தது.

சமணம்

எனவே வணிகர்கள் புத்த மற்றும் சமண மதங்களை நோக்கி நகர தொடங்கினர். இந்த மதங்கள் சடங்கு சம்பிரதாயங்களை மறுத்து தனிமனித ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தது. மட்டுமல்லாது துறவறம் உள்ளிட்டவற்றையும் பேசியது. அப்புறம் என்ன? செலவு இல்லாத மதம் இது. எனவே எளிதாக மக்களிடம் போய் சேர்ந்தது. போதாத குறைக்கு மதக பேரரசர் பிம்பிசாரர், இந்த மதங்களுக்கு தனது ஆதரவை கொடுத்தார்.

மகத வம்சத்தை தவிர மற்ற வம்சங்கள் வேத மத தாக்கங்களில் இருந்தது. தலைமை பண்புக்கு வருவது உள்ளிட்டவை மத சடங்குகள் மூலம் நடந்தது. ஆனால் மதகத்தில் அப்படியில்லை. திறமை இருந்தால் மேலே வரலாம். இப்படிப்பட்ட அரசு, ஒரு மதத்தை முன்னிறுத்துகிறது எனில் மக்களுக்கு ஈர்ப்பு இருக்கத்தானே செய்யும்!

அடுத்த கட்டுரையில் பௌத்த, சமண மதங்களின் வளர்ச்சி மற்றும் மௌரிய பேரரசு தோற்றம் குறித்து பார்ப்போம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+