பீகார் மக்களை காங்., + திமுக அவமதிக்கிறது.. பீகார் பிரசாரத்தில் பட்டியலிட்டு பிரதமர் மோடி அட்டாக்
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி இன்று அங்கு பிரசாரம் செய்தார். அப்போது ‛‛காங்கிரஸ் பிற மாநிலங்களில் பீகார் மக்களை அவமானப்படுத்தி உள்ளது. பீகார் மக்களை மாநிலத்துக்குள் நுழைய விடமாட்டோம் என்று பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் கூறினார். தமிழ்நாட்டின் திமுக பீகார் மக்களை அவமானப்படுத்துகிறது'' என்று பிரதமர் மோடி பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
பீகார் சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி இன்று சாப்ரா என்ற இடத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி ‛இந்தியா' கூட்டணி கட்சியினரை கடுமையாக விமர்சனம் செய்தார்.

குறிப்பாக பீகார் மக்களை ‛இந்தியா'கூட்டணியில் உள்ள கட்சியினர் அவமரியாதை செய்து பேசியுள்ளதாக கூறினார். இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:
நண்பர்களே.. நான் உங்களுக்கு ஒன்றை நினைவுப்படுத்த விரும்புகிறேன். ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் அதன் ‛இந்தியா' கூட்டணி கட்சியினர் பீகார் மக்களை எப்படியெல்லாம் அவமானப்படுத்தினர் என்பதை சொல்கிறேன். கடந்த 2022ம் ஆண்டில் தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் முதல்வராக (சரண்ஜித் சன்னி) இருந்தவர் பொதுக்கூட்ட மேடையிலேயே பீகார் மக்களை பஞ்சாப்புக்குள் அனுமதிக்க மாட்டேன் என்று கூறினார். அப்போது காங்கிரஸ் கட்சியின் மகள் (பிரியங்கா காந்தி) இப்போது எம்பியாக இருப்பவர் அருகேயே இருந்து கைத்தட்டி அந்த பேச்சை ரசித்தார்.
தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர்கள் பீகார் மக்களை அவமானப்படுத்தி பேசினார்கள். அதேபோல் கடினமாக உழைக்கும் பீகார் மக்களை தமிழ்நாட்டில் திமுக அவமானப்படுத்தி உள்ளது. இந்த வேளையில் எல்லாம் ஆர்ஜேடி கட்சி அமைதியாக வேடிக்கையாக பார்த்து கொண்டிருந்து.
இந்த தேர்தலில் அவர்கள் எல்லை மீறி விட்டனர். பீகார் மக்களை அவமதித்த காங்கிரஸ் கட்சியின் அதே தலைவர்களை பிரசாரத்துக்காக ஆர்ஜேடி கட்சி பீகாருக்கு அழைத்துள்ளது. இது காங்கிரஸ் கட்சியின் திட்டமிட்ட சதி. ஆர்ஜேடி கட்சியை எவ்வளவு தூரம் இழிவுப்படுத்த முடியுமோ அதனை காங்கிரஸ் செய்கிறது.இது காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி இடையேயான பிரச்சனையை எடுத்து காட்டும் வகையில் உள்ளது.
இங்கு என்னை ஆசீர்வதிக்க எனது தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் அதிக அளவில் வந்துள்ளனர். இதனால் நான் ஆசீர்வதிக்கப்பட்டவனராக உணர்கிறேன். பீகார் இளைஞர்களுக்கு நான் ஒரு உத்தரவாதம் அளிக்கிறேன். உங்கள் கனவை நிறைவேற்றுவேன் என்று நான் உறுதியளிக்கிறேன். பீகார் முதல்வர் நிதீஷ் குமாரும், நானும் உங்கள் கனவுகளை நிறைவேற்ற எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். உங்கள் கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்றால் தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவது முக்கியம்' என கூறினார்.
பீகாரில் தற்போது பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக செயல்பட்டு வருகிறார். இதே கூட்டணி மீண்டும் களமிறங்கி உள்ளது. இந்த கூட்டணியில் மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக்ஜன சக்தி (ராம்விலாஸ்), முன்னாள் முதல்வரும், தற்போதைய மத்திய அமைச்சருமான ஜிதன் ராம் மஞ்சியின் எச்ஏஎம் எனும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிகளும் உள்ளன.
மறுபுறம் எதிர்க்கட்சிகள் ‛மகாகத்பந்தன்' என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடிஎனும் ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் லிபரேஷன் - சிபிஐஎம்எல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
பீகாரில் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக நவம்பர் 6ம் தேதியும், 2வது கட்டமாக நவம்பர் 11ம் தேதியும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு நவம்பர் 14ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. பீகாரை எடுத்து கொண்டால் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 122 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் தான் அரசியல் கட்சி தலைவர்கள் பீகாரில் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
-
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
பெரும் பணக்காரர்களுக்கு செல்வ வரி விதிக்கப்படுமா? நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. வில்சன் கேள்வி -
திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம்..விஜய் மைக்குடன் பிரச்சாரம் செய்யக் கூடாதா? தவெக அடுக்கடுக்காக கேள்வி -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
4 மண்டலங்களாக.. வகுக்கப்படும் தமிழ்நாடு.. திமுகவின் மிகப்பெரிய வாக்குறுதியே இதுதான்.. அடிதூள்! -
ஸ்டாலின் 6.. கனிமொழி கையில் எடுத்த மேஜிக்.. தேர்தல் போக்கையே மாற்றும் அந்த 6 வாக்குறுதிகள்? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?












Click it and Unblock the Notifications