‛‛வெட்கமே இல்லையா?’’ பாஜகவுடன் இணைந்த நிதிஷ் குமாரை விளாசிய லாலு.. தேஜஸ்வி யாதவும் விடலையே!
பாட்னா: பீகாரில் ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்து கொண்டு பாஜகவுடன் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் மீண்டும் இணைந்து முதல்வராகி உள்ளார். இந்நிலையில் தான் முதல் முறையாக நிதிஷ் குமாரை பார்த்து வெட்கமே இல்லையா? என லாலு பிரசாத் யாதவ் கேள்வி கேட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் தேஜஸ்வி யாதவுடம் அவரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
பீகாரில் 2020ல் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து பாஜக - ஐக்கிய ஜனதாதளம் (ஜேடியூ) கட்சி கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் முதல்வரானார். ஆனால் 2 ஆண்டுகளில் அவர் பாஜகவுடனான கூட்டணியை முறித்து வெளியேறினார்.

இதையடுத்து நிதிஷ் குமார், லாலுவின் ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தார். மீண்டும் நிதிஷ் குமார் முதல்வரானார். லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வரானார். இந்நிலையில் தான் கடந்த ஆண்டு இறுதியில் திடீரென்று நிதிஷ் குமார் மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்தார். ஆர்ஜேடி, காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்து பாஜகவுடன் சேர்ந்து மீண்டும் அதிகாரத்தை எட்டிப்பிடித்து முதல்வரானார்.
தற்போது பீகாரில் பாஜக மற்றும் நிதிஷ் குமாரின் ஜேடியூ கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக நிதிஷ் குமார் உள்ளார். இதனால் எதிர்க்கட்சியாாக லாலு பிரசாத்தின் ஆர்ஜேடி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் இன்று பீகாரில் ‛ஜன் விஸ்வாஸ்
மகா ரேலி' என்ற பெயரில் ஆர்ஜேடி கட்சி மிகப்பெரிய பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் ‛இந்தியா' கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமாரை கடுமையாக விமர்சனம் யெ்தார். வெட்கம் இல்லையா? என கேள்வி கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக லாலு பிரசாத் யாதவ் பேசியதாவது:
நிதிஷ் குமார் மீண்டும் 2017 ல் செய்த தவறை செய்துள்ளார். எங்கள் கூட்டணியை உடைத்து மீண்டும் பாஜகவுடன் சேர்ந்துள்ளார். இது ஏமாற்றம் அளிக்கிறது. அவரது துரோகத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி தோற்கடிக்கப்படும். எங்களுடன் முதலில் கூட்டணியை முறித்த பிறகு நாங்கள் நிதிஷ் குமாரை ஒருபோதும் திட்டவில்லை. ஆனாலும் 2வது முறையாக நாங்கள் தவறு செய்துவிட்டோம். அவரை கூட்டணி சேர்த்தது தான் தவறு. முந்தைய பீகார் அரசு எந்த தவறையும் செய்யவில்லை. இத்தகைய சூழலில் நிதிஷ் குமார் இப்படி கூட்டணி மாறுவதற்கு வெட்கம் இல்லையா?'' என விமர்சனம் செய்தார்.
அதேபோல் லாலு பிரசாத் யாதவின் மகனும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் பேசுகையில், ‛‛தற்போதைய சூழலில் பீகார் அரசுக்கு காப்பீடு செய்ய வேண்டும். ஏனென்றால் நிதிஷ் குமார் எப்போது வேண்டுமானாலும் கூட்டணியை மாற்றும் பயம் இருக்கிறது. நாங்கள் குடும்ப அரசியல் செய்வதாக பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால் பீகாரில் ராம் விலாஸ் பாஸ்வானின் சகோதரர் சாம்ராட் சவுத்ரி அரசியல் செய்கிறார். முன்னாள் முதல்வர் மஞ்சியின் மகன் அமைச்சராகி உள்ளார். அது அவரது கண்களுக்கு தெரியவில்லை'' என சாடினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications