அதிகாலையிலேயே குலுங்கிய பூமி.. பீகார், மேற்கு வங்க மாநிலங்களில் திடீர் நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்
பாட்னா: பீகார் மாநிலம் அராரியா மற்றும் மேற்கு வங்க மாநிலம் சிரிகுரி பகுதிகளில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.3 என பதிவான இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர்.
வெளிநாடுகளிலும், இந்தியாவிலும் பல்வேறு இடங்களில் தற்போது அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்தியாவை பொறுத்தமட்டில் நிலநடுக்கங்கள் என்பவை சக்தி வாய்ந்ததாக இல்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம், சேதங்கள் ஏற்படுவது இல்லை.
இருப்பினும் கூட பல இடங்களில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது என்பது தொடர் கதையாக உள்ளன. குறிப்பாக வடஇந்திய மாநிலங்களில் ஆங்காங்கே மக்கள் நிலஅதிர்வை உணர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் தான் இன்று பீகார் மாநிலம் அராரியாவில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 5.35 மணிக்கு அராரியா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தை மக்கள் லேசாக உணர்ந்ததாக கூறப்படுகிறது.
மேலும் அராரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை தேசிய நிலஅதிர்வு மையமும் உறுதி செய்துள்ளது. இதுபற்றி அந்த மையம், ‛‛ இன்று காலை 5.35 மணிக்கு அராரியாவில் பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 4.3 என்ற அளவில் பதிவாகி உள்ளது'' என தெரிவித்துள்ளது.
மேலும் இன்று அதிகாலை 5.35 மணிக்கு பீகாரை போல் அதே அளவில் மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது சிலிகுரியில் இருந்து தென்மேற்கு பகுதியில் 140 கிலோமீட்டர் ஆழத்தில் நிலை கொண்டிருந்ததாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலையில் பீகார், மேற்கு வங்காளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் அங்கு அதிர்ஷ்டவசமாக சேதம், உயிர் பலி எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் கூட மக்கள் பீதியடைந்துள்ளனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications