தமிழகத்தில் வட இந்தியர்கள் கொல்லப்படுவதாக வதந்தி கிளப்பிய யூடியூபர் மணீஷ் காஷ்யப் பாஜகவில் ஐக்கியம்!
பாட்னா: தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர்கள் (புலம் பெயர் தொழிலாளர்கள்) அடித்து படுகொலை செய்யப்படுவதாக வதந்தி பரப்பியதால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பீகார் யூடியூபர் மணீஷ் காஷ்யப் பாஜகவில் இணைந்துள்ளார்.
கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர்கள் படுகொலை செய்யப்படுவதாக வீடியோக்கள் மூலம் திடீரென வதந்தி பரவியது. இது தமிழ்நாட்டிலும் வட இந்தியாவிலும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. பீகார், ஜார்க்கண்ட் மாநில அரசுகள், தமிழ்நாட்டுக்கு அரசு குழுவை அனுப்பி ஆய்வும் செய்தது. திருப்பூர், கோவை உள்பட பல இடங்களில் பணி செய்யும் பீகார் மாநில தொழிலாளர்களை அந்தக் குழுவினர் சந்தித்தனர். அப்போது பீகார் தொழிலாளர்கள் நலமாக உள்ளதாகவும், எந்த அச்சுறுத்தலும், தாக்குதலும் நடைபெறவில்லை எனவும் திட்டவட்டமாகவே தெரிவித்தனர்.

இது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டன. இந்த விசாரணைகளின் போது பாஜகவினரே திட்டமிட்டு பொய்யான இத்தகைய வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டிருப்பது தெரியவந்தது. இத்தகைய
வீடியோக்களை திட்டமிட்டு பரப்பியவர்கள் மீதும் நடவடிக்கை பாய்ந்தது.
இதன் ஒருபகுதியாக பீகாரில் யூடியூபர் மணீஷ் காஷ்யப் தமிழ்நாடு போலீசாரால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
வட இந்தியாவில் இத்தகைய மணீஷ் காஷ்யப்புகளை சில அரசியல் கட்சிகள் வதந்திகளை பரப்புவதற்காகவே பணம் கொடுத்து அமர்த்தி இருப்பதும் பின்னர் தெரியவந்தது.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் நடந்தது. தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர்கள் கொல்லப்படுவதாக வதந்தி பரப்பியதால்தான் மணீஷ் காஷ்யப் மீது பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது என தமிழ்நாடு அரசு ஆணித்தரமாக வாதிட்டது.
இந்த வழக்குகளில் ஜாமீன் பெற்ற மணீஷ் காஷ்யப் டெல்லியில் இன்று பாஜகவில் இணைந்தார். டெல்லி பாஜக எம்பி மனோஜ் திவாரி முன்னிலையில் மணீஷ் காஷ்யப், பாஜகவில் இணைந்தார்.
இது தொடர்பாக மணீஷ் காஷ்யப் கூறுகையில், நான் சிறையில் இருந்து வெளியே வர காரணமே பாஜக எம்பி மனோஜ் திவாரிதான். ஆகையால்தான் பாஜகவில் நான் இணைந்துள்ளேன். எனக்கு ஜாமீன் மட்டும் கிடைக்கவில்லை. என் மீதான அனைத்து வழக்குகளும் கைவிடப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழும் விடுவிக்கப்பட்டுள்ளேன். சனாதன தர்மத்தை யார் இழிவுபடுத்தினாலும் அவர்களுக்கு எதிரான என் போராட்டம் தொடரும் என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications