பக்கத்தில் யாருமே இல்லை.. தானாகவே மேலே போகுதாம்.. கீழே வருதாம்.. என்னாச்சு.. பரபர வீடியோ
ஜான்சி பூங்காவில் பேய் இருப்பதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது
பாட்னா: தானாகவே மேலே போகுதாம்.. கீழே வருதாம்.. ஒரு பார்க்கில் வைக்கப்பட்டிருந்த புல்-அப் மிஷின்களை கண்டு பொதுமக்கள் அலறி ஓடி உள்ளனர்.. பேய்கள் வந்து எக்சர்ஸைஸ் செய்வதாக வாட்ஸ்அப்களில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.. உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் எடுக்கப்பட்ட வீடியோ இது. ஜான்சி, நந்தன்பூராவில் கன்ஷிராம் என்ற பார்க் உள்ளது.. இங்கு 2 புல் - அப்ஸ் இயந்திரங்கள் தானாகவே மேலே போய் கீழே இறங்கி கொண்டிருக்கின்றன.

பக்கத்தில் யாருமே இல்லை.. அதை பார்த்து பார்க்கில் இருந்த மக்கள் அலறி அடித்து கொண்டு ஓடி உள்ளனர்.. ஆனால் ஓடவும், ஒளியவும் முடியாமல் அந்த பூங்காவில் உள்ள செக்யூரிட்டிகள் மிரண்டு வியந்து அவைகளை பார்த்து கொண்டு நின்றிருக்கிறார்கள்.. இந்த வீடியோ மொத்தம் 20 செகண்ட் ஓடுகிறது.
வெயிட் அதிகமாக உள்ள புல்-அப்ஸ் மிஷினை மனிதர்களால்தான் அசைக்க முடியும். ஆனால் இது எப்படி தானாகவே மேலேயும், கீழேயும் போய் கொண்டிருக்கின்றன என தெரியவில்லை.. வாட்ஸ்அப், ஃபேஸ்புக் என எல்லா சோஷியல் மீடியாவிலும் இந்த வீடியோதான் வேகமாக பரவி வருகிறது.. "பேய்கள் ஜிம் எக்ஸர்சைஸ் செய்கின்றன" என்று வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.
இந்த வீடியோ போலீசாரின் கவனத்துக்கும் போயுள்ளது.. அதனால் அந்த பார்க்கிற்கு உடனடியாக போலீசார் சென்றிருக்கிறார்கள்.. ஓபன் கிரவுண்டில் உள்ள அந்த 2 புல்-அப்ஸ் இயந்திரங்களுக்கு நிறைய கிரீஸ் பூசியிருக்கிறார்கள்.
அதனால்தான் ஒருமுறை இயக்கினாலேயே அந்த இழுவையால் அடுத்த சில வினாடிகளுக்கு அந்த இயந்திரம் மேலும் கீழுமாக அசைகிறது என்பது தெரியவந்தது.. இந்த வீடியோவை எடுத்து பேய் என்று சொன்னது யார்?
பேய்கள் ஜிம் பயிற்சி செய்கின்றன என்று அதற்கு ஒரு கேப்ஷனையும் போட்டு ஷேர் செய்தது யார்? என போலீசார் அவர்களைதான் தேடி கொண்டிருக்கிறார்கள். ஆனால் பேய் என்றதும் இந்த வீடியோ படுவைரலாகி வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications