கள்ளக் காதலால் உடைந்த லாலு பிரசாத் குடும்பம்.. பீகாரில் ஆர்ஜேடி தோல்விக்கு காரணமான சகோதர யுத்தம்
பாட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில், முன்னாள் முதலமைச்சர்களான லாலூ பிரசாத் யாதவ்-ராப்ரி தேவி குடும்பத்தின் அரசியல் செல்வாக்கு, அதன் உள்சண்டைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது தெளிவாகியுள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளத் (RJD) தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தைச் சுற்றியுள்ள பல்வேறு சர்ச்சைகள், குடும்ப உள்ளக பிரச்சனைகள், சட்டப் போராட்டங்கள் ஆகியவை, பீகார் 2025 தேர்தலின் அரசியல் சூழலிலும் RJD-யின் வாக்கு பங்கிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
தற்போதைய RJD தலைவர் தேஜஸ்வி யாதவும், அவரது சகோதரர் தேஜ் பிரதாப் யாதவும் இந்தத் தேர்தலில் ஒருவருக்கொருவர் எதிராக பிரச்சாரம் மேற்கொண்டு, RJD-வின் வாக்குகளை பிளவுபடுத்தியிருக்கின்றனர்.

லாலு குடும்ப சண்டை
2021-இல் தேஜஸ்வி திருமணம் செய்து கொண்ட ரேச்சல் கோடின்ஹோவின் பெயர் 'ராஜ்ஸ்ரீ யாதவ்' என மாற்றப்பட்டது தொடர்பான சர்ச்சை, மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கின் கேள்விகளால் மீண்டும் பரபரப்புக்கு உள்ளானது. இதற்கிடையே, இந்த ஆண்டு மே மாதம், லாலு தேஜ் பிரதாப்பை RJD-லிருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்கியது தலைமை.

கள்ள காதல்
2018-ல், ஐஸ்வரியா ராயுடன் தேஜ் பிரதாப் திருமணம் செய்தார். திருமணம் ஒரு பக்கம் என்றால், 'அனுஷ்கா யாதவ்' என்பவருடன் 12 ஆண்டுகளாக உறவு இருப்பதாக சமூக ஊடகத்தில் வெளியான தகவல்கள் தேஜ் பிரதாப் மீதான நடவடிக்கைக்கு காரணமாக அமைந்தது. இதன் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் மாதம் தேஜ் பிரதாப் 'ஜன்சக்தி ஜனதா தளம்' என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.
முன்னதாக, 2018-இல் அவரது திருமண விழாவில் ஏற்பாடு செய்யப்பட்ட 7,000 விருந்தினர்களுக்கு மேல் கூட்டம் வந்து, VIP பகுதியில் நுழைந்து கிண்ணங்கள், தட்டுகள் உள்ளிட்ட பாத்திரங்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் சர்ச்சையானது. குடும்பத்தின் மற்றொரு மகள் ரோகிணி அச்சார்யா, செப்டம்பர் மாதம் லாலு, தேஜஸ்வி ஆகியோரை சமூக ஊடகங்களில் அன்ஃபாலோ செய்து, தேஜஸ்வியின் நெருங்கிய ஆலோசகர் சஞ்சய் யாதவின் கட்டுப்பாட்டை எதிர்த்து குரல் எழுப்பினார்.
ஊழல் புகார்கள்
இதற்கிடையே, CBI லாலு குடும்பத்தினர் மீது பல வழக்குகளை முன்னெடுத்துள்ளது: 1996-இல் தொடங்கிய மாட்டு தீவன ஊழல், IRCTC ஹோட்டல் டெண்டர் ஊழல், ரயில்வே வேலைகளுக்கு நிலம் பரிமாற்றம் செய்த 'லேண்ட்-ஃபார்-ஜாப்' மோசடி ஆகியவை தொடர்ந்து நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ளன.

குறிப்பாக, அக்டோபர் மாதம், IRCTC வழக்கில் லாலூ, ராப்ரி, தேஜஸ்வி ஆகியோர் மீது ஊழல் மற்றும் குற்றச்சதி பிரிவுகளில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, நவம்பரில் 12 சாட்சிகளின் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து சம்பவங்களும் BJP மற்றும் JD(U) ஆகிய எதிர்க்கட்சிகளால் பயன்படுத்தப்பட்டு, RJD-வின் ஒற்றுமையை விமர்சிக்கும் கருவியாக அமைந்துள்ளது.
சகோதர யுத்தம்
மஹுவா, ராகோப்பூர் உள்ளிட்ட முக்கிய தொகுதிகளில், தேஜ் பிரதாப் தலைமையில் போட்டியிட்ட வேட்பாளர்கள் RJD வாக்குகளை மூன்று வழிகளில் பிளவுபடுத்தியதால், NDA கூட்டணி பல இடங்களில் முன்னணி பெற்றுள்ளது. 43 தொகுதிகளில் தேஜ் பிரதாப் வேட்பாளர்களை நிறுத்தியிருப்பது, RJD-வின் பாரம்பரிய யாதவர் ஆதரவையே கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. எனவே, லாலு குடும்பத்தின் அரசியல் எதிர்காலம், அவர்களின் தனிப்பட்ட உறவுகளின் நிலையைப் பொறுத்தே அமையும் என்ற முடிவுக்கு பீகார் மக்கள் வந்துள்ளனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications