10 ஆண்டில் 5 முறை கூட்டணி மாற்றம்! முதல்வர் பதவியை விடாமல் நிதிஷ் குமார் அடித்த அந்தர் பல்டி இதுதான்
பாட்னா: பீகாரில் ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை இன்று முறித்து கொண்ட நிதிஷ் குமார் பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இன்று மாலையில் மீண்டும் அவர் பாஜக கூட்டணியில் முதல்வராக பொறுப்பேற்க உள்ள நிலையில் தான் 2013 முதல் இன்று வரை கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை கூட்டணியை மாற்றி உள்ள தகவல் வெளியாகி உள்ளது.
பீகார் அரசியல் என்றதும் நமக்கு அனைவருக்கும் ஞாபகம் வருவது நிதிஷ் குமார் தான். ஏனென்றால் இவர் கடந்த 2005ம் ஆண்டு முதல் இன்று வரை பீகார் முதல்வராக இருந்தவர். இந்த காலக்கட்டத்தில் 2014 மே மாதம் முதல் 2015 பிப்ரவரி மாதம் மட்டும் ஜிதன் ராம் மஞ்சி முதல்வராக இருந்தார்.

இப்படி கடந்த 20 ஆண்டுகளாக பீகார் மாநிலத்தில் முதல் பதவியில் தொடர்ந்து அமர்ந்து கொண்டு அதிகாரத்தை அனுபவித்து வருபவர் தான் நிதிஷ் குமார். இத்தகைய சூழலில் தான் தற்போது நிதிஷ் குமார் இன்று மீண்டும் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பீகாரில் நிதிஷ் குமாரின் ஜேடியூ, லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியில் அவர் முதல்வராக இருந்து வந்தார். கடந்த 2022ம் ஆண்டு முதல் இந்த கூட்டணி மூலம் அவர் முதல்வர் நாற்காலியில் அமர்ந்த நிலையில் இன்று ராஜினாமா செய்துள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த ‛‛இந்தியா'' கூட்டணியில் இடம்பெற்றிருந்த நிதிஷ் குமாருக்கு அங்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்ற வருத்தத்தில் பீகாரில் கூட்டணியை விட்டு வெளியேறி பாஜகவுடன் இணைந்துள்ளார்.
மேலும் பாஜக உதவியுடன் இன்று மாலையில் நிதிஷ் குமார் மீண்டும் பீகார் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். பீகாரை பொறுத்தமட்டில் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஆட்சியை பிடிக்க 122 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும். தற்போது பாஜகவுக்கு 74 எம்எல்ஏக்கள், ஜேடியூவுக்கு 43 இடங்கள் உள்ளதால் இருக்கட்சிகளும் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. இதன்மூலம் பீகார் முதல்வராக மீண்டும் நிதிஷ் குமார் இன்று பதவியேற்க உள்ளார்.
சரி இது இருக்கட்டும். பீகாரில் நிதிஷ் குமார் கூட்டணியை மாற்றி கொள்வது இதுதான் முதல் முறை என நினைத்தால் அது முற்றிலும் தவறானது. ஏனென்றால் நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவிக்காக அடிக்கடி கூட்டணியை மாற்றி வந்துள்ளார். கூட்டணி எப்படி மாறினாலும் சரி அங்கு முதல்வராக இருப்பது என்னவோ நிதிஷ் குமார் தான். அந்த வகையில் பார்த்தால் கடந்த 2013ம் ஆண்டு முதல் இன்று வரை நிதிஷ் குமார் மொத்தம் 5 முறை தனது முதல்வர் பதவிக்காக கூட்டணியை மாற்றி உள்ளார்.
அதாவது முதல் முதலாக நிதிஷ் குமார் 2013ல் கூட்டணியை மாற்றினார். அப்போது பீகாரில் நிதிஷ் குமாரின் ஜேடியூ மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடந்தது. நிதிஷ் குமார் முதல்வராக இருந்தார். இந்த சமயத்தில் தான் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். இது நிதிஷ் குமாருக்கு பிடிக்கவில்லை. இதையடுத்து அவர் பாஜகவுடனான உறவை முறித்தார். 2014 லோக்சபா தேர்தலில் ஜேடியூ தோல்வியடைந்த நிலையில் அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஜித்தன் ராம் மஞ்சியை அவர் முதல்வாராக்கினார். இவர் 2014 மே மாதம் 2015 பிப்ரவரி மாதம் வரை முதல்வராக இருந்தார்.
அதன்பிறகு 2015 சட்டசபை தேர்தலில் நிதிஷ் குமார் கூட்டணியை மாற்றினார். லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரசுடன் இணைந்து போட்டியிட்டார். இந்த கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் நிதிஷ் குமார் முதல்வரானார். லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வரானார். அவருக்கு அப்போது வயது 26 தான். இது நிதிஷ் குமாருக்கு பிடிக்கவில்லை. மேலும் லாலு பிரசாத் யாதவுக்கு எதிரான ஊழல் வழக்குகளும் பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் கூட்டணியில் பிரச்சனை கிளம்பியது. இதையடுத்து மத்திய அரசு ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்தது. இதையடுத்து ஆர்ஜேடி, காங்கிரஸ் கூட்டணியை விட்டு விலகிய நிதிஷ் குமார் பாஜகவுடன் இணைந்து மீண்டும் முதல்வரானார்.
அதன்பிறகு மீண்டும் 2020ல் நடந்த தேர்தலில் பாஜகவுடன் சேர்ந்து நிதிஷ் குமார் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். இந்த கூட்டணி வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் பாஜக 74 தொகுதிகளிலும், ஜேடியூ 43 தொகுதிகளிலும் வென்றது. இதையடுத்து பாஜக உதவியுடன் மீண்டும் நிதிஷ் குமார் முதல்வரானார். ஆனால் 2022ல் நிதிஷ் குமாரிடம் இருந்து முதல்வர் பதவியை பறிக்க பாஜக நினைப்பதாக கருதிய அவர் இந்த கூட்டணியை முறித்தார்.
மாறாக அவர் ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தார். இதன்மூலம் மீண்டும் முதல்வரான நிதிஷ் குமார் தற்பாது அந்த கூட்டணியையும் முறித்து மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்துள்ளதோடு இன்று மீண்டும் முதல்வராக அவர் பொறுப்பேற்க உள்ளார். இப்படியாக தொடர்ந்து நிதிஷ் குமார் பீகாரில் கூட்டணியை மாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications