Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவையே உலுக்கிய போட்டோ.. 2 ரயில் பெட்டிகள் இடையே பிதுங்கி பலியான ரயில்வே ஊழியர்! காரணம் என்ன?

Subscribe to Oneindia Tamil

பாட்னா: ரயில் பெட்டி மற்றும் இன்ஜின் இடையே சிக்கிய ரயில்வே ஊழியர் உடல் நசுங்கி பலியான போட்டோ மற்றும் வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் பீகார் மாநிலத்தில் நடந்த நிலையில் தற்போது ரயில்வே ஊழியர் ரயில் பேட்டி - இன்ஜின் இடையே சிக்கி உடல் நசுங்கி பலியானதற்கான காரணம் குறித்த திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சக ஊழியருடனான ஒருங்கிணைப்பு இல்லாததே இந்த கோர விபத்துக்கு முக்கிய காரணம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து பீகார் மாநிலம் பராணிக்கு லக்னோ - பராணி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 15204 ) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நேற்று முன்தினம் பீகார் மாநிலம் பெகுசாராய் மாவட்டத்தில் உள்ள பராணி ரயில் நிலையத்துக்கு வந்தது.

bihar indian railway

அப்போது சமஸ்தீர்பூர் மாவட்டம் தால்சிங்சாராய் பகுதியை சேர்ந்த ரயில்வே ஊழியர் அருண் குமார் ராவத் (வயது 35),
முகமது சுலைமான் ஆகியோர் பாயிண்ட் மேன்களாக பணியில் இருந்தனர்.

இவர்கள் 2 பேரும் லக்னோ - பராணி ரயிலில் இருந்து கப்ளிங் பிரிக்கும் பணியை தொடங்கினர். அருண் குமார் ராவத் ரயிலில் பார்சல் பெட்டி மற்றும் இன்ஜினை இணைக்கும் வகையில் ‛கப்ளிங்கை' கழற்றினார். முகமது சுலைமான், அருண் குமார் ராவத்தின் பணி பற்றி ரயில் லோகோ பைலட்டுக்கு சிக்னல் கொடுத்து வந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக ரயில் இன்ஜினை இயக்கிய டிரைவர் முன்னோக்கி செல்வதற்கு பதில் பின்னோக்கி இயக்கினார். அப்போது இன்ஜின் மற்றும் ரயில் பெட்டிக்கு இடையே அருண் குமார் ராவத் சிக்கினார். அவரது உடல் நசுங்கியது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் நடந்த உடன் இன்ஜின் டிரைவர் உடனடியாக அங்கிருந்து ஓடிவிட்டார்.

bihar indian railway

ரயில் பெட்டி மற்றும் இன்ஜின் இடையே சிக்கி அருண் குமார் ராவத் பலியாகி இருக்கும் போட்டோ மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. இந்த போட்டோக்கள் அனைவரின் இதயத்தையும் நொறுக்கி உள்ளது. இதுபற்றி இதுபற்றி சோனப்பூர் டிஆர்எம் அதிகாரிகள் மட்ட அளவில் விசாரணைக்கு உத்தரவிட்டார். அதிகாரிகள் குழு விசாரணையை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 5 அதிகாரிகள் கையெழுத்திட்டு இந்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த அறிக்கையில் தான் தற்போது திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஊழியர்களிடையே தகவல் தொடர்பில் ஒருங்கிணைப்பு இல்லாததே விபத்துக்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு முகமது சுலைமானின் கவனக்குறைவால் தான் விபத்து ஏற்பட்டு அருண் குமார் ராவத் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது லக்னோ - பராணி எக்ஸ்பிரஸ் ரயில் காலை 8:10 மணிக்கு பராணி சந்திப்பிற்கு வந்தது. காலை 8:29 மணிக்கு இந்த விபத்து நடந்தது. இந்த விபத்து ரயில் நிலைய கேமராவில் பதிவாகி உள்ளது. இன்ஜின் மற்றும் பெட்டிகளின் நடுவே 'கப்ளிங்'கை கழற்றிய அருண் குமாரின் நிலை குறித்து சக பணியாளரான முகமது சுலைமான், இன்ஜின் டிரைவருக்கு உரிய தகவல் தரவில்லை. அவர் பணியில் அலட்சியமாக செயல்பட்டார். அதேபோல் 'அதேபோல், 'கப்ளிங்' கழற்றப்பட்டது தொடர்பான உறுதியான தகவலை பெறாமலேயே இன்ஜின் டிரைவர் ரயிலை இயக்கியுள்ளார்.

முகமது சுலைமான் மற்றும் இன்ஜின் டிரைவர் இடையிலான தகவல் தொடர்பில் ஒருங்கிணைப்பு இல்லாததால் அருண் குமார் பலியானார்' என, கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த விசாரணையின்போது முகமது சுலைமான் இன்ஜின் டிரைவர் மீது எழுத்துப்பூர்வமாக குற்றம்சாட்டி உள்ளார். அதாவது நான் கையால் எந்த சிக்னலும் கொடுக்கவில்லை. ஆனால் இன்ஜின் டிரைவர் ரயிலை பின்நோக்கி இயக்கி விபத்தை ஏற்படுத்தி உள்ளார். இதனால் அருண் குமார் உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே முகமது சுலைமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அருண் குமார் ராவத்தின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். இதையடுத்து உண்மையில் யார் மீது தவறு என்பதை கண்டறிய ரயில்வே நிர்வாகம் சார்பில் இன்னொரு அதிகாரிகள் அளவிலான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+