பெண் வாக்காளர்கள் டார்கெட்.. பீகாரில் நிதீஷ் குமார் - பாஜக கூட்டணி சாதித்தது எப்படி? 5 பாயிண்ட்
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ் குமார் - பாஜக கூட்டணி மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. பெண் வாக்காளர்களை குறிவைத்து என்.டி.ஏ கூட்டணி முன்னெடுத்த செயல்கள் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. பீகாரில் நிதீஷ் குமார் - பாஜக கூட்டணி சாதித்ததற்கான 5 முக்கிய காரணங்களை பார்க்கலாம்.
பீகாரில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 202 தொகுதிகளை தட்டி தூக்கி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. எதிர் கூட்டணியான தேஜஸ்வி யாதவ் - காங்கிரஸ் கூட்டணிக்கு வெறும் 37 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. இதனால் மீண்டும் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு ஆட்சியை தக்க வைத்துள்ளது.

நிதிஷ் குமார்
இந்தியாவின் பல்டுராம் என அழைக்கப்படும் நிதிஷ் குமார் முதல் முதலாக 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல்வராக பதவியேற்றார். ஆனால் அப்போது அவரால் 7 நாட்கள் மட்டுமே பதவி வகிக்க முடிந்தது. தொடர்ந்து பாஜக ஆதரவுடன் 2005 ஆம் ஆண்டு முதல்வரானார். இடையில் ஒரு ஆண்டை தவிர தொடர்ந்து அவரே அம்மாநிலத்தில் முதல்வராக தொடர்ந்து இருந்து வருகிறார்.
ஆனால் அவர், பாஜக, ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி என மாறி, மாறி கூட்டணி அமைத்து முதல்வர் பதவியை தக்க வைத்துகொண்டார். இதனாலேயே அவரை அரசியல் கட்சியினர், இந்தியாவின் பல்டுராம் என அழைக்கின்றனர். இந்த முறை நிதிஷ் குமாருக்கு எதிரான அலை வீசும் என நினைத்த தேஜஸ்வி யாதவின் கனவு பலிக்காமல் போனது.
அனுபவம் வென்றது
அனுபவமா இளமையா என்று பார்க்கும் போது நிதிஷ் குமாரின் அனுபவே பீகார் தேர்தலில் வெற்றி பெற வைத்தது என்று சொல்லலாம். அதே போல் பிரதமர் மோடியின் அலை இன்னும் பீகாரில் இருந்து வருகிறது என்பதே 202 தொகுதிகள் வெற்றியை காட்டுகிறது. பீகார் தேர்தலில் நிதிஷ் குமார் - பாஜக வெற்றி பெற பெண் வாக்காளர்களும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
அதாவது வழக்கமாக பீகார் சட்டசபை தேர்தலில் வாக்கு சதவீதம் அதிகரித்தால் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதே வரலாறு ஆகும். ஆனால் வரலாற்றில் இல்லாத அளவாக இந்த முறை பீகார் சட்டசபை தேர்தலில் வாக்கு சதவீதம் பதிவானது. ஆனாலும் ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை. என்.டி.ஏவுக்கு வெற்றி சாத்தியமாக முக்கிய 5 காரணங்களை பார்க்கலாம்.
பெண்களுக்கு ரூ.10 ஆயிரம்
* பெண் வாக்காளர்கள் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார்கள். இந்த தேர்தலில் பெண்களின் வாக்கு சதவீதம் 71.6 என பதிவானது. என்.டிஏ கூட்டணி வெற்றிக்கு இது மிகப்பெரிய காரணமாக பார்க்கப்படுகிறது. பல மாவட்டங்களில் பெண்கள் ஆண்களை விட அதிகமாக வாக்களித்தனர்.
இதற்கு முக்கிய காரணமாக தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்பு என்.டி.ஏ அரசு, பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் தொழில் நிதி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியதே.. 1 கோடியே 25 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அவர்களது வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டது. இதற்காக அந்த அரசு ரூ.12,500 கோடி செலவிடப்பட்டது.
பீகாரில் சராசரியாக ஏழைகள் குடும்பத்தில் ஒரு நபரின் மாதம் வருமானம் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் இருக்கும் சூழ்நிலையில், அவர்களது வீட்டு பெண்கள் வங்கி கணக்கில் ரூ.10 ஆயிரம் போட்டது, அவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி விட்டது.
சரியான தொகுதி பங்கீடு
* என்.டி.ஏ கூட்டணியின் மாபெரும் வெற்றிக்கு தொகுதி பங்கீடும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் நிதிஷ் குமார் மற்றும் பாஜக இரு கட்சிகளும் சரி சமமாக 101 தொகுதிகளை பகிர்ந்துகொண்டனர். இது கூட்டணியின் பிணைப்பை உறுதிப்படுத்தியது. சிறு கட்சிகளுக்கும் நியாயமான தொகுதி பங்கீடு வழங்கப்பட்டது. இதன் மூலம் வாக்குகள் சிதறாமல் தடுக்கப்பட்டன.
சாதி சமன்பாடு
* தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரீய ஜனதா தளம் பாரம்பரியமாக நம்பும் முஸ்லிம் - யாதவ் கூட்டணிக்கு எதிராக, என்.டி.ஏ கூட்டணி பெண்கள் மற்றும் நலிந்த பிரிவினரை இணைத்து ஒரு புது கூட்டணியை உருவாக்கியது இந்த தேர்தல் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.
நிதிஷ் குமார் தலைமை
* பீகார் என்றால் நிதிஷ் குமார் என்று சொல்லும் அளவுக்கு அரசியல் உணர்வு அங்கு பிரதிபலித்தது. நிதிஷ் குமார் என்ற நிலையான தலைமைக்கான நம்பிக்கை என்.டி.ஏ கூட்டணியின் வெற்றியை நிலைநிறுத்தியது.
லாலு பிரசாத் சட்ட முறைகேடு
* காட்டாட்சி நினைவுகளை முன்வைத்தது என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற ஒரு காரணமாக இருந்தது. 1990-2005 காலத்தில் லாலு பிரசாத் முதல்வராக இருந்த போது நிலவிய சட்டமுறைகேடு, கடத்தல்கள், வன்முறைகள் ஆகியவற்றை சொல்லி என்.டி.ஏ செய்த பிரசாரம் சாதகமாக அமைந்துள்ளது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications