அப்பா குடும்பத்தை விட்டே போறேன்.. லாலுவுக்கு ‛கிட்னி' கொடுத்த மகள் குட்பை.. அரசியலுக்கும் முழுக்கு
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் 202 தொகுதிகளை பாஜக கூட்டணி அள்ளி உள்ளது. மறுபுறம் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியடைந்தது. இந்நிலையில் தான் லாலு பிரசாத்தின் 2வது மகள் ரோகிணி ஆச்சாரியா அரசியலுக்கு முழுக்கு போட்டுள்ளார். அரசியலில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
பீகார் முன்னாள் முதல்வரும், மாஜி மத்திய அமைச்சருமாக இருந்தவர் லாலு பிரசாத் யாதவ். பீகாரில் ஆர்ஜேடி கட்சியை நடத்தி வருகிறார். வயது முதிர்வு, ஊழல் புகார், உடல் நலக்குறைவு உள்ளிட்டவற்றால் அவர் அரசியலில் இருந்து ஒதுங்கி உள்ளார். ஆர்ஜேடி கட்சியை தற்போது லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் வழிநடத்தி வருகிறார்.

இந்நிலையில் தான் பீகார் சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் தேஜஸ்வி யாதவ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெற்றிருந்த இந்த கூட்டணிக்கு ‛மகாகத் பந்தன்' என்ற பெயர் வைக்கப்பட்டு இருந்தது. எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று இந்த கூட்டணி முயன்றது. ஆனால் அது நடக்கவில்லை.
மாறாக பீகார் சட்டசபை தேர்தலில் அந்த கூட்டணி படுதோல்வியை அடைந்துள்ளது. வெறும் 35 தொகுதிகளில் மட்டுமே ‛மகாகத்பந்தன்' கூட்டணி வெற்றி பெற்றது. தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி எனும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி 25 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் உள்ள சிபிஐ(எம்எல்) (எல்) கட்சி 2 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஐஐபி எனும் இந்தியன் இன்க்ளூசிவ் கட்சி தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது.
இது தேஜஸ்வி யாதவிற்கு பேரிடியாக வந்துள்ளது. இதில் இருந்து இன்னும் ஆர்ஜேடி கட்சியினர் மீளவில்லை. ஆனால் அதற்குள் அடுத்த இடி விழுந்துள்ளது. அதாவது அரசியல் மற்றும் குடும்பத்தை விட்டு விலகுவதாக லாலு பிரசாத் யாதவின் 2வது மகள் ரோகிணி ஆச்சார்யா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ரோகிணி ஆச்சார்யா தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛நான் அரசியலை விட்டு விலகுகிறேன். என் குடும்பத்தை துறந்து செல்கிறேன்.
சஞ்சய் யாதவும், ரமீஸும் என்னிடம் இதை செய்ய சொன்னார்கள்.எல்லா பழிகளையும் நானே ஏற்றுக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார். இதன்மூலம் ரோகிணி ஆச்சார்யா அரசியலுக்கு மட்டுமின்றி, லாலுவின் குடும்பத்துக்கே குட்பை சொல்லி உள்ளார்.
இதில் ரோகிணி யாதவ் குறிப்பிட்டுள்ள சஞ்சய் யாதவ், தனது சகோதரும், ஆர்ஜேடி கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவின் நெருங்கிய ஆதரவாளர். இவர் ராஜ்யசபா எம்பியாக உள்ளார். இவர் தேஜஸ்வி யாதவுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அதேபோல் ரமீஸ், தேஜஸ்வி யாதவின் பழைய நண்பர் ஆவார்.
இவர் உத்தர பிரதேசத்தில் இருந்து வந்தவர். இவரும் தேஜஸ்வி யாதவும் மிகவும் நெருக்கமானவர்கள். இவர்கள் 2 பேருக்கும், ரோகிணி ஆச்சார்யாவுக்கும் பிரச்சனை இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வந்த நிலையில் திடீரென இப்படி பதிவு செய்துள்ளார்.
இருப்பினும் அரசியல் மற்றும் குடும்பத்தை விட்டு விலகுவதாக அறிவித்துள்ள ரோகிணி ஆச்சார்யாவின் முடிவுக்கு பின்னால் இருக்கும் சரியான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை. இருப்பினும் குடும்ப பிரச்சனை தான்முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த ரோகிணி ஆச்சார்யா தனது தந்தை லாலு பிரசாத் யாதவுக்கு மறுவாழ்வு கொடுத்தவர். லாலுவின் சிறுநீரகம் செயலிழக்கும் நிலைக்கு சென்றபோது மகள் என்ற முறையில் ரோகிணி ஆச்சார்யா தான் தனது ஒரு சிறுநீரகத்தை தந்தை லாலு பிரசாத் யாதவுக்கு தானமாக வழங்கியிருந்தார்.
ரோகிணி ஆச்சார்யா டாக்டர் படிப்பை முடித்தவர். சமீபத்தில் தான் அரசியலுக்கு வந்தார். கடந்த 2024ம் ஆண்டில் பீகாரின் சாரன் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பாஜக வேட்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடியிடம் அவர் தோல்வியடைந்தார்.
ஏனென்றால் சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே ரோகிணி ஆச்சார்யா தனது தந்தை லாலு பிரசாத் மற்றும் சகோதரர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை எக்ஸ் பக்கத்தில் ஃபாலோ செய்வதை நிறுத்தியிருந்தார். மேலும் அவ்வப்போது எமோஷனலாக ரோகிணி ஆச்சார்யா தனது சகோதரர் தேஜஸ்வி யாதவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவுகளை செய்து வந்தார்.
ஏற்கனவே லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜ் பிரதாப் யாதவ் ஆர்ஜேடி கட்சியில் இருந்து நீக்கப்பட்டு குடும்பத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். கள்ளக்காதல் விவகாரத்தில் தேஜ் பிரசாத் யாதவ் இந்த பிரச்சனையை எதிர்கொண்டார். இப்போது லாலு மற்றும் அவரது கட்சியை விட்டு அவரது மகள் ரோகிணி ஆச்சார்யா பிரிந்துள்ளார். இது லாலு பிரசாத் குடும்பத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications