அமலாக்கத்துறைக்கு எல்லாம் பயப்பட மாட்டேன்.. என் வீட்டில் கூட வந்து தங்குங்க.. தேஜஸ்வி யாதவ் சுளீர்
பாட்னா: "பாஜகவின் அச்சுறுத்தல்களுக்கு எல்லாம் அடிபணிய மாட்டேன்; அமலாக்கத்துறையினர் எனது வீட்டில் கூட வந்து தங்கிக் கொள்ளட்டும்; அதுபற்றி எனக்கு கவலையில்லை" என்று பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
பிகாரில் பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தார். பின்னர் தனது அரசியல் எதிரியான லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து மீண்டும் பிகார் முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்றுள்ளார். துணை முதல்வராக ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் பொறுப்பேற்றுள்ளார்.நிதிஷ் குமாரின் இந்த நடவடிக்கையால் பாஜக கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நிதிஷ் குமாருக்கு ஆதரவு அளித்ததற்காக ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர்கள் மீது வருமான வரி சோதனை உள்ளிட்ட நடவடிக்கைகள் பாயும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில், தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு தேஜஸ்வி யாதவ் இன்று பேட்டியளித்துள்ளார். அப்போது நெறியாளர், "நிதிஷ் குமாருடன் கூட்டணி அமைத்துள்ளதால் வருமான வரித் துறை, அமலாக்கத்துறை மூலம் உங்களுக்கு பாஜக நெருக்கடி கொடுக்கும் எனக் கூறப்படுகிறேதே?" என்று கேள்வியெழுப்பினார்.
அதற்கு பதிலளித்து தேஜஸ்வி யாதவ் கூறியதாவது:
அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித் துறை ஆகிய அமைப்புகள் பாஜகவின் கட்சிப் பிரிவுகள் போல செயல்படுகின்றன. யார் தங்களை எதிர்த்தாலும் உடனே அவர்கள் மீது இந்த அமைப்புகளை பாஜக ஏவி விடுவது வாடிக்கையாகி விட்டது. என்னை பொறுத்தவரை, பாஜகவின் இந்த அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் நான் அடிபணிய மாட்டேன்.
இந்தப் பேட்டியின் வாயிலாக அமலாக்கத்துறை, வருமானவரித் துறை ஆகியவற்றுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். ஏன் அடிக்கடி எனது வீட்டுக்கு வருவதும் போவதுமாய் இருக்கிறீர்கள்? இந்த அலைச்சல் உங்களுக்கு வேண்டாம். எனது வீட்டிலேயே நீங்கள் தங்கிக் கொள்ளலாம். அது உங்களுக்கு இன்னும் சவுகரியமாக இருக்கும் என அவர் கூறினார்.
ஏற்கனவே பல்வேறு ஊழல் வழக்குகளில் லாலு பிரசாத் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர் ரயில்வே அமைச்சராக இருந்த போது முறைகேடாக ஒப்பந்தங்களை வழங்கியதாக புதிய வழக்கு ஒன்றை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது.
இதில் லாலு பிரசாத்தின் மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ், மகள் மிசாபார்தி ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால் அவ்வப்போது அவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications