“புலி தனது வேட்டையை நிறுத்தவில்லை” நிதிஷ்குமாரை கொண்டாடும் தொண்டர்கள்! ஜேடியு கரை சேருமா?
பாட்னா: பீகாரில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கிறது. இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. மீண்டும் நிதிஷ்குமார் முதலமைச்சராக வெற்றி பெறுவார் என்று ஐக்கிய ஜனதா தளம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. கட்சியின் தொண்டர்கள், "புலி தனது வேட்டையை நிறுத்தவில்லை" என நிதிஷ்குமாரை புகழ்ந்து போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று கணிப்புகள் வெளியாகியுள்ளன. என்டிடிவியின் எக்சிட் போல்களில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் இந்த கூட்டணி 147 இடங்களைக் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சியான மகாபந்தன் 90 இடங்களையும், ஜன சூராஜ் கட்சி ஒரு இடத்தையும் மட்டுமே பெறும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

பீப்பிள்ஸ் பல்ஸ் என்ற ஆய்வு நிறுவனம், தேசிய ஜனநாயக கூட்டணி 133 முதல் 159 தொகுதிகளிலும், மகாபந்தன் 75 முதல் 101 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கணித்துள்ளது. பிரசாந்த் கிஷோரின் ஜன சூராஜ் கட்சிக்கு 0 முதல் 5 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே நிதிஷ்குமாரின் வெற்றி உறுதி செய்யப்பட்டிருப்பதாக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மறுபுறம் பாஜகவும் வெற்றி கொண்டாட்டத்திற்கு ரெடியாகியுள்ளது. பாட்னாவில், லட்டுகளும் பிரமாண்ட விருந்துகளுக்கும் ஏற்பாடுகள் வருகின்றன. பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணா சிங் கல்லு, 500 கிலோ லட்டுகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளார். பெரிய சமையல் பாத்திரத்தின் முன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோரின் படங்களை வைத்து லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.
இது குறித்து கட்சியினர் கூறுகையில், "நாங்கள் லட்டு தயாரிக்கும் இடத்தில் எலுமிச்சை மற்றும் மிளகாயை கட்டி வைத்திருக்கிறோம். தீய சக்தியை விரட்டும் வகையில் நாங்கள் இதை கட்டியிருக்கிறோம். நீரிழிவு நோயாளிகளும் சாப்பிடக்கூடிய வகையில் சர்க்கரை குறைவாக சேர்த்து இந்த இனிப்புப் பண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள், பீகார் மக்களின் கடின உழைப்புக்கும் கட்சி தொண்டர்களின் அர்ப்பணிப்புக்கும் கிடைத்த வெற்றி" என்று கூறியுள்ளனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications