ஜட்டியுடன் ரயிலில் உலா வந்த எம்எல்ஏ.. கொந்தளித்த பயணிகள்.. வைரலாகும் போட்டோ..!
ஜேடியூ எம்எல்ஏ ரயிலில் ஜட்டியுடன் நடந்த போட்டோ வைரலாகிறது
பாட்னா: எம்எல்ஏ ஒருவர் ரயிலில் ஜட்டியுடன் வாக்கிங் போன போட்டோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது... இந்த சம்பவம் பீகார் மாநிலத்தில் நடந்துள்ளது.
பாட்னாவில் இருந்து தேஜஸ் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ஒன்று டெல்லி சென்றுள்ளது.. அந்த ரயிலின் ஏசி பெட்டியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்எல்ஏவான கோபால் மண்டல் என்பவர் பயணம் செய்தார்.
இந்த பயணத்தின்போதுதான், திடீரென எம்எல்ஏ தன்னுடைய டிரஸ்ஸை களைந்துவிட்டு, ஜட்டி பனியனுடன் ரயிலுக்குள் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார்.. அப்போது இதை பார்த்த ரயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்தார்கள்..

அநாகரீகம்
இத்தனை பேர் இங்கு உட்கார்ந்திருக்கும்போது, அதுவும் பொதுவெளியில் ஒருவர் இப்படி ஏன் நடந்து கொண்டிருக்கிறார்? என்று பயணிகள் முகம் சுளிக்க ஆரம்பித்தனர்.. இந்த அநாகரீகத்தை பொறுத்து கொள்ள முடியாத ஒருசில பயணிகள் எரிச்சலடைந்தனர்.. இதைபற்றி சிலர் எம்எல்ஏவிடமே கேட்டு விட்டனர்.. ஆனால், அவர் எம்எல்ஏ என்று அந்த பயணிகளுக்கு தெரியாது..

எம்எல்ஏ
அவர் எம்எல்ஏ என்று தெரியாமலேயே கேள்விகளை கேட்டனர்.. எனினும், பயணிகளின் கேள்விக்கு எம்எல்ஏ சரியாக பதிலளிக்கவில்லை என்றே தெரிகிறது.. இதனால், வாக்குவாதம் முற்றியது.. பிரச்சனை பெரிதாக வெடிக்க தொடங்கயிது.. அப்போது அந்த நேரம் டிக்கெட் பரிசோதகர் வந்தார்.. மேலும் ரயில்வே பாதுகாப்பு படையினரும் வந்துவிட்டனர்.. அப்போதுதான் அவர் எம்எல்ஏ என்றே அங்குள்ளவர்களுக்கு தெரியவந்தது.

புகார்
இறுதியில் எம்எல்ஏவின் இந்த அநாகரீக நடவடிக்கை குறித்து ரயில்வே பாதுகாப்பு படையினரிடமும் பயணிகள் புகார் தந்தனர்.. அப்போது இரு தரப்பையும் போலீசார் சமாதானம் செய்து வைத்துள்ளனர்.. பிரச்சனை ஓய்ந்தாலும், எம்எல்ஏ ஜட்டி, பனியனில் ரயிலுக்குள் வீரநடை போட்ட போட்டோக்கள்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.

விளக்கம்
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து எம்எல்ஏ ஒரு விளக்கம் தந்துள்ளார்.. அதில், "ரயிலில் ஏறியதில் இருந்தே எனக்கு வயிற்று வலி.. கடுமையான வயிற்று போக்கு இருந்து கொண்டே இருந்தது.. அதனால் தான் ஜட்டி பனியனில் இருந்தேன்... இதுதான் உண்மை.. நான் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" என்று கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications